என் மலர்
நீங்கள் தேடியது "ஜனாதிபதி மாளிகை"
- அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
- ஜனாதிபதி மெய்க்காவலர்கள் குழு மாற்றப்படும் நிகழ்ச்சியையும் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
ஜனாதிபதி மாளிகை, டிசம்பர் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது. இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும்.
அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தலா 1 மணி நேரம் வீதம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரையும் 5 வகையான நேரம் ஒதுக்கப்படும். அதுபோல், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்தை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்துக்கு 6 நாட்கள் பார்வையிடலாம்.
மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஜனாதிபதி மாளிகை முற்றத்தில், ஜனாதிபதி மெய்க்காவலர்கள் குழு மாற்றப்படும் நிகழ்ச்சியையும் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.
- 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூந்தோட்டத்திற்கு பெயரை மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- பெயர் மாற்ற உத்தரவு தொடர்பான தகவலை ஜனாதிபதிக்கான செய்தித்தொடர்பு துணை செயலாளர் நாவிகா குப்தா வெளியிட்டுள்ளார்.
டெல்லி:
ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள இந்த தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும் மிகவும் ரம்மியமான காட்சியை அளிக்கும். இந்த தோட்டம் முகலாய தோட்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள 'முகலாய' தோட்டத்தை 'அம்ரித் உதயன்' என்று பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு நாடு சுந்திரமடைந்து 75வது ஆண்டை கொண்டாட உள்ள நிலையில் 'அசாதி கா அம்ரித் மகோத்சவ்' என்ற தலைப்பில் நாடு முழுவதும் சுதந்திர தினம் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.
75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூந்தோட்டத்திற்கு பெயரை மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயன் என்று மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெயர் மாற்ற உத்தரவு தொடர்பான தகவலை ஜனாதிபதிக்கான செய்தித்தொடர்பு துணை செயலாளர் நாவிகா குப்தா வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூந்தோட்டம் இனி அம்ரித் உதயன் என அழைக்கப்பட உள்ளது.
- ஜனாதிபதி மாளிகை, பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ளது.
- பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்
புதுடெல்லி :
ஜனாதிபதி மாளிகை, பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ளது. பிரதான கட்டிடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் 2-வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன.2 பகுதிகளையும் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்தை திங்கட்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் பார்வையிடலாம் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஜூன் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.பொதுமக்கள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை 7 தனித்தனி நேரங்களில் பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
- ஜனாதிபதி மாளிகையில் உள்ள இரு முக்கிய அரங்குகளிண் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
- தற்போது தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் தர்பார் ஹாலில் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள இரு முக்கிய அரங்குகளிண் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்பார் ஹால் மற்றும் அசோக் ஹால் ஆகியவை முறையே கணதந்திர மண்டபம் மற்றும் அசோக் மண்டபம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் தான் 1948-ம் ஆண்டில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக சி.ராஜகோபாலாச்சாரி பதவி ஏற்றார்.
தற்போது தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் தர்பார் ஹாலில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வருகிற 12-ந்தேதி பூனம் குப்தா, அவினாஷ் குமாரின் திருமணம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது.
- முதல் முறையாக அரசு அதிகாரி ஒருவரின் திருமணம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற இருக்கிறது.
புதுடெல்லி:
பிரதமர் மோடிக்கு பெண் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு வழங்கும் புகைப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது தொடர்பாக முன்னணி ஊடகங்கள் புலன் விசாரணை நடத்தி, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்தது சி.ஆர்.பி.எப். படையை சேர்ந்த பெண் அதிகாரி பூனம் குப்தா என்று விளக்கம் அளித்தன.
இவர் பிரதமருக்கான பாதுகாப்பு படையில் இல்லை. ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இருக்கிறார் என்றும் ஊடகங்கள் சுட்டிக்காட்டின.
அப்போது முதல் சி.ஆர்.பி.எப். துணை கமாண்டர் பூனம் குப்தா நாடு முழுவதும் பிரபலமாக உள்ளார். மத்திய பிரதேசத்தின் சிவபுரியை சேர்ந்த அவருக்கும் காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். துணை கமாண்டராக பணியாற்றும் அவினாஷ் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
பூனம் குப்தாவின் திருமணம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அண்மையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையின் அன்னை தெரசா வளாகத்தில் திருமணத்தை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி வருகிற 12-ந்தேதி பூனம் குப்தா, அவினாஷ் குமாரின் திருமணம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. முதல்முறையாக அரசு அதிகாரி ஒருவரின் திருமணம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து பூனம் குப்தாவின் நெருங்கிய உறவினர் சோனு என்பவர் கூறியதாவது:-
மத்திய பிரதேசத்தின் சிவபுரியில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியின் அலுவலக மேலாளராக ரகுவீர் குப்தா பணியாற்றுகிறார். இவரது மூத்த மகள் பூனம் குப்தா.
கடந்த 2018-ம் ஆண்டில் யு.பி.எஸ்.சி. சி.ஏ.பி.எப். தேர்வை எழுதிய பூனம் சி.ஆர்.பி.எப். படையில் துணை கமாண்டராக பணியில் சேர்ந்தார்.
தற்போது அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். அவரது நன்னடத்தையால் கவரப்பட்ட ஜனாதிபதி முர்மு, ஜனாதிபதி மாளிகையில் பூனமின் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இந்த திருமண விழா ஜனாதிபதி முர்மு தலைமையில் நடைபெற உள்ளது என்றார்.
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஆண்டு தோறும் இப்தார் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இடையில் அப்துல்கலாம் ஜனாதிபதியாக பதவி வகித்த 2002- 2007 காலகட்டத்தில் இப்தார் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கைவிடார். இப்தார் நோன்பு நிகழ்சிக்கு ஆகும் செலவை ஆதரவற்றோர் நலனுக்காக அவர் அளித்து வந்தார்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து அளிக்கப்படாது என இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் அசோக் மாலிக் கூறியதாவது :-
ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவியேற்ற பின்னர் மத ரீதியான எந்த நிகழ்சிகளும் பொதுமக்களின் வரி பணத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடத்துவது இல்லை என அவர் முடிவு செய்துள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு எனும் கொள்கையின் அடிப்படையில் மதம் தவிர அனைத்து சமய நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தும்.
நிச்சயம் அனைத்து மத விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பார் என அசோக் மாலிக் குறிப்பிட்டுள்ளார். #Iftarparty