என் மலர்
நீங்கள் தேடியது "திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்"
திருவள்ளூர்:
பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி (21). இவர் பொதட்டூர்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட், இறுதியாண்டு படித்து வருகிறார்.
இவரும் அதே கல்லூரியில் உடன்படிக்கும் புண்ணியம் கிராமத்தை சேர்ந்த சின்ராஸ்(22). என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் திலகவதி வீட்டில் தெரிய வந்தது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த 7-ந்தேதி திலகவதியும், சின்ராசும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை பாரிமுனையில் உள்ள பதிவு துறை அலுவலக்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இருவரும் தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரணை நடத்தினார், அப்போது இருவிட்டாரின் பெற்றோர்களை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த தண்டலஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் ஸ்ருதி(18). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார்.
இவரும் பன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் சிவகுமாரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த விவகாரம் ஸ்ருதி வீட்டில் தெரிந்ததும், அவரது கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். மேலும் அவருக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து காதல் ஜோடியான ஸ்ருதியும், சிவக்குமாரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பம் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இருவரும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரணை நடத்தினார். இருவீட்டாரின் பெற்றோர்களை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.