search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஸ்வாசம்"

    சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் விமர்சனம். #Viswasam #AjithKumar #Nayanthara
    கிராமத்தில் சொந்த பந்தங்களுடன் வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித்நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித் - நயன்தாரா இருவரும் பிரிந்து விடுகின்றனர். நயன்தாரா தனது மகள் அனிகாவை கூட்டிக் கொண்டு மும்பை சென்றுவிடுகிறார்.

    10 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கோவில் திருவிழாவுக்கு ஊர்மக்கள் அனைவரும் கூடுவது வழக்கம். அந்த வகையில் தனித்து வாழும் தனது மருமகன் மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படும் மாமா தம்பி ராமையா, நயன்தாரா, அனிகாவை திரும்ப அழைத்து வரும்படி கூறுகிறார்.



    இதையடுத்து இருவரையும் அழைத்துவர மும்பை செல்கிறார் அஜித். அங்கு தனது மகள் அனிகாவுக்கு, ஜெகபதி பாபுவால் ஆபத்து இருப்பதை அறிந்து கொள்கிறார். 

    அங்கு தான் அப்பா என்பதை சொல்லாமல், அனிகாவுக்கு வரும் ஆபத்துக்களை அஜித் எப்படி தடுக்கிறார்? தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார்? ஜெகபதி பாபு யார்? அவர் ஏன் அனிகாவை கொல்ல நினைக்கிறார்? அஜித் - நயன்தாரா மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    அஜித் இந்த படத்தில் இருவேறு கெட்அப்புகளில் வந்து கலக்கியிருக்கிறார். மாஸ், கிளாஸ், மதுரை பேச்சு, மிரட்டல் வசனங்கள், காமெடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். நயன்தாராவுடன் காதல், திருமணம், மகள் மீதான பாசம் என அன்பை பொழிந்திருக்கிறார். அஜித் தனது மாஸ் தோற்றத்துடன் பெரும்பாலான இடங்களில் வேட்டி, சட்டையுடனேயே வந்து செல்கிறார். சண்டைக்காட்சி குறிப்பாக மழையில் நடக்கும் சண்டை, பாத்ரூம் சண்டை என சண்டைக்காட்சிகளுக்கு அனல் பறக்கிறது. அஜித் தோன்றும் முதல் காட்சி, பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா, நான் வில்லன்டா என அஜித் பேசும் பஞ்ச் வசனங்களில் மாஸ் அஜித்தை பார்க்க முடிகிறது.



    நயன்தாரா அஜித்துடன் காதல், சண்டை, குழந்தை மீதான பாசம் என குடும்ப பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தம்பி ராமையா அவரது ஸ்டைலில் கலகலக்க வைக்கிறார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்தின் மகளாக அனிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ரோபோ சங்கர், யோகி பாபுவும் குறிப்பிட்ட இடங்களில் காமெடியால் சிரிக்க வைக்கின்றனர். கோவை சரளா, ரமேஷ் திலக், ரவி அவானா, பாரத் ரெட்டி என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

    வீரம் படத்திற்கு பிறகு குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. தனது வழக்கமான மசாலா இல்லாமல், கிராமம், மக்கள், குடும்பம், மனைவி, மகள் என படத்தின் கதை நகர்கிறது. படத்தில் அஜித்துக்கு மாஸான பேச்சு, சண்டைக்காட்சிகள் இருந்தாலும், அஜித்தை இன்னும் மாஸாக காட்டியிருக்கலாமோ என்று யோசிக்க வைத்துவிட்டார். அஜித் ரசிகர்களை இன்னமும் மகிழ்ச்சிபடுத்தியிருக்கலாம் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. மற்றபடி குடும்பத்துடன் இணைந்து பார்க்க வேண்டிய படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.



    டி.இமான் இசையில் பாடல்கள் பட்டையை கிளப்புகின்றன. பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவில் கிராமம், நகரம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    மொத்தத்தில் `விஸ்வாசம்' குடும்பத்தின் தேவை. #Viswasam #ViswasamReview #ViswasamFromToday  #ViswasamFDFS #ViswasamThiruvizha #BlockbusterViswasam #AjithKumar #Nayanthara 

    பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #Petta #Viswasam #MinisterKadamburRaju
    விருதுநகர்:

    ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் போன்றவை பொங்கல் விருந்தாக நாளை (10-ந்தேதி) வெளியாக உள்ளனன. இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் அறிவிக்கப்பட்டு ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ இதனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    பேட்ட, விஸ்வாசம் படங்கள் நாளை திரைக்கு வர உள்ளது. இந்த படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை. தியேட்டர்களில் சரியான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    முதல் தடவையாக ரூ. 50 ஆயிரமும், இரண்டாம் கட்டமாக ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும்.

    பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்து வந்தார். அதே நிலைப்பாடுதான் தற்போதைய தமிழக அரசுக்கும் உள்ளது.


    ஒவ்வொரு பிரச்சனையிலும் ஜெயலலிதா என்ன நிலைப்பாடு கொண்டிருந்தாரோ அதையே நாங்களும் கடைப்பிடிக்கிறோம். இதனால்தான் பாராளுமன்றத்தில் தம்பிதுரை வெளிநடப்பு செய்தார். மத்திய அரசுக்கு அடிபணிந்து நாங்கள் நடக்க மாட்டோம்.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முழு உத்தரவு கிடைத்த பிறகே தமிழக அரசு முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Petta #Viswasam #MinisterKadamburRaju
    அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்தில் அஜித்தின் என்ட்ரி எப்படி இருக்கும் என்பது பற்றி டி.இமான் கூறினார். #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் - சிவா இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    இதற்கிடையே இயக்குநர் சிவா, டி.இமான் மாலைமலருக்கு அளித்த பேட்டி:

    படத்தில் தலயோட என்ட்ரி எப்படி இருக்கும்?

    உடனடியாக டி.இமான் செம மாஸாக இருக்கும் என்றார். சிவா கூறும்போது, பல காட்சிகள் அஜித் சாரின் முதல் காட்சி போல் இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும்படியாக இருக்கும். மானிட்டரில் காட்சிகளை பார்க்கும் போது அனைவரும் கம்பீரம், பிரமிப்பு, மாஸாக உணர்வார்கள் என்றார்.



    இந்த கூட்டணி மீண்டும் இணையுமா? 

    கண்டிப்பாக இணைவோம். 200 சதவீத நம்பிக்கை உள்ளது. அஜித் சாருக்கு என்னுடைய குழுவின் மீதும், உழைப்பின் மீதும் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. எனவே மீண்டும் இணைவோம்.

    மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அவரை பாட வைப்பீர்களா?

    அதற்கான வாய்ப்பில்லை. சார் அதை விரும்ப மாட்டார். ஒவ்வொருவரும் அவரவர் வேலையை சரியாக செய்தாலே சிறப்பாக இருக்கும் என்று நினைப்பவர். எனவே கண்டிப்பாக அவர் பாடுவார் என்ற நம்பிக்கை இல்லை. #Viswasam #AjithKumar #ViswasamPongal #ViswasamThiruvizhaOnJan10 #ViswasamFestivalFromJan10 #ViswasamFromTomorrow

    சிவா - அஜித் கூட்டணியில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், படம் பற்றிய பேட்டியளித்த சிவா படத்தில் அஜித் தான் வில்லன் என்றும், அது படத்தின் முக்கிய திருப்பம் என்றும் கூறினார். #Viswasam #AjithKumar
    விஸ்வாசம் படம் மூலம் அஜித்துடன் 4-வது முறையாக இணைந்துள்ள சிவா அளித்த பேட்டி:

    டிரெய்லரில் அஜித் தன்னை வில்லன் என்று சொல்கிறாரே?

    ஒவ்வொரு மனிதனுடைய கதைக்கும் அந்த அந்த மனிதன் தான் ஹீரோவாக இருப்பார். ஆனால் இந்த படத்தில் அஜித் தன்னுடைய கதையில் தன்னை வில்லன் என்கிறார். இது நிச்சயம் ரசிகர்களுக்கு ஆவலை தூண்டும். இந்த கேள்விக்கான பதிலை கதை கொடுக்கும். படத்தில் இருக்கும் முக்கிய திருப்பம் அது.

    இந்த கதையை கேட்டு பிடித்த பிறகே அவர் சம்மதித்தார். படம் முழுக்க அவர் இருப்பார். படத்தில் கதையை சொல்வதே அவர் கதாபாத்திரம் தான்.



    கமர்சியல் படம் இயக்குவதில் இருக்கும் சிரமம் என்ன?

    எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டி இருப்பது தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் வருவார்கள். அவர்களை ஒரே மாதிரி திருப்திபடுத்த வேண்டும்.

    பேட்ட பட டிரெய்லருக்கு பதிலாக டிரெய்லர் அமைந்தது பற்றி?

    நாங்கள் அந்த வசனம் பேசும் காட்சியை எப்போதோ படம் பிடித்துவிட்டோம். டிரெய்லரையும் முன்பே தயாரித்துவிட்டோம். நான் சமூகவலைதளங்களில் இல்லை. என் நண்பர்கள் இதுபற்றி சொன்னார்கள். #Viswasam #AjithKumar

    சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் முன்னோட்டம். #Viswasam #AjithKumar #Nayanthara
    சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் அர்ஜூன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன், டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `விஸ்வாசம்'.

    அஜித்குமார் - நயன்தாரா நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடித்துள்ளார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, பரத் ரெட்டி, போஸ் வெங்கட், ரமேஷ் திலக், கோவை சரளா, ரவி அவானா, பேபி அனிகா  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - டி.இமான், ஒளிப்பதிவு - வெற்றி, படத்தொகுப்பு - ஆண்டனி எல்.ரூபன், பாடல்கள் - யுகபாரதி, தாமரை, அருண் பாரதி, சிவா, விவேகா, நடன இயக்குனர் - அசோக் ராஜா, பிருந்தா, கல்யாண், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பு -  அனு வர்தன், தட்ஷா பிள்ளை, தயாரிப்பாளர் - அர்ஜூன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன், டி.ஜி.தியாகராஜன், கதை - சிவா, ஆதிநாராயணன், வசனம் - சிவா, மணிகன்டன், சபரி, பாக்யராஜ், சந்திரன், இயக்கம் - சிவா.



    படம் பற்றி இயக்குநர் சிவா பேசும்போது,

    ஒவ்வொரு மனிதனுடைய கதைக்கும் அந்த அந்த மனிதன் தான் ஹீரோவாக இருப்பார். ஆனால் இந்த படத்தில் அஜித் தன்னுடைய கதையில் தன்னை வில்லன் என்கிறார். இது நிச்சயம் ரசிகர்களுக்கு ஆவலை தூண்டும். இந்த கேள்விக்கான பதிலை கதை கொடுக்கும். படத்தில் இருக்கும் முக்கிய திருப்பம் அது.

    இவ்வாறு கூறினார்.

    படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (10.1.19) வெளியாக இருக்கிறது. #Viswasam #AjithKumar #ViswasamPongal #ViswasamThiruvizhaOnJan10 #ViswasamFestivalFromJan10 #ViswasamFromTomorrow

    விஸ்வாசம் டிரைலர்:

    பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்களுக்கு திரையரங்குகளில் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது. #Petta #Viswasam
    ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகின்றன. இரண்டு படங்களுமே நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் அதிக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுகள் நேற்று முன்தினமும், நேற்றும் விறுவிறுப்பாக நடந்தன.

    நிறைய தியேட்டர்களில் 3 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையிலும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு படங்களையும் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.

    இந்த படங்களுடன் போட்டியிடாமல் ஏற்கனவே சில படங்கள் ரிலீசை தள்ளிவைத்துவிட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி அதிக காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்து உள்ளது. 



    இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைசெயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, ‘‘வழக்கமாக தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிடப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி 10-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினமும் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

    பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இரண்டு படங்களுக்கும் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு 2 படங்களும் லாபம் ஈட்டி தரும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார். #Petta #Viswasam

    அஜித் நடிப்பில் விஸ்வாசம் ரிலீசாகவிருக்கும் நிலையில் இயக்குநர் சிவா பேசும்போது, விஸ்வாசம் படத்தை பார்த்த அஜித் சார், நமது சிறந்த படம் இதுதான் என்று கூறியதாக சொன்னார். #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் - சிவா இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    இதற்கிடையே இயக்குநர் சிவா மாலைமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறும்போது,



    என்னதான் அஜித் சார் ஒரு சீரியஸான மனிதராக இருந்தாலும், அவருக்குள் ஒரு குழந்தைத்தனமும், சந்தோஷமும் எப்போதும் இருக்கும். நான் இயக்கிய 3 படங்களில் அதை காட்டமுடியவில்லை. முதல்முறையாக வீரமான, வெள்ளந்தியான ஆளாக விஸ்வாசம் படத்தில் வருகிறார். கிராமத்து அழகுடன் இறங்கி அடிப்பதாக சொல்வார்கள். அந்த மாதிரி மாஸாக கலக்கியிருக்கிறார்.

    விஸ்வாசம் படம் பார்த்த பிறகு, நாம் இணைந்த 4 படங்களிலேயே இதுதான் பெஸ்ட் படம் என்று அஜித் சார் கூறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

    இவ்வாறு கூறினார். #Viswasam #AjithKumar #Siva #DImman

    வேலை பார்க்க தான் வந்திருக்கிறேன், யாருடனும் மோத வரவில்லை என்று அஜித் அடிக்கடி கூறுவதாக இயக்குனர் சிவா கூறியிருக்கிறார். #Viswasam #Ajith #Siva
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்திருக்கிறார் இயக்குனர் சிவா. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

    அஜித்துடன் பணியாற்றியது பற்றி இயக்குனர் சிவா கூறும்போது, ‘அஜித் சிறந்த மனிதர். அவரைப் பற்றி சொன்னால், சொல்லிக்கொண்டே செல்லலாம். படத்தையும் தாண்டி பல நல்ல விஷயங்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்வார். ரசிகர்கள் எப்படி அஜித் மீது பாசமாகவும், விஸ்வாசமாகவும் இருக்கிறார்களோ, அதுபோல் அஜித்தும் அவர்கள் மீது விஸ்வாசமாக இருக்கிறார். அடிக்கடி ரசிகர்களைப் பற்றி பேசுவார்.



    அவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. நான் இங்கு வேலை பார்க்க தான் வந்திருக்கிறேன். யாருடனும் மோத வரவில்லை என்று அஜித் என்னிடம் அடிக்கடி கூறுவார். முழுமனதுடன் சொல்லுகிறேன் அவரைப் போல நல்ல மனிதரை பார்த்ததில்லை. நேர்மையானவர்’ என்றார். #Viswasam #Ajith #Siva
    விஸ்வாசம் படம் பற்றி இயக்குனர் சிவா கூறும்போது கஷ்டத்தை இஷ்டப்பட்டு செய்பவர் அஜித் என்று மாலைமலருக்கு பேட்டியளித்துள்ளார். #Viswasam #Ajith
    சிவா - அஜித் கூட்டணியில் தற்போது உருவாகி இருக்கும் படம் விஸ்வாசம். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘வீரம், வேதாளம், விவேகம்’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றதால், இப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. 

    இப்படம் குறித்து மாலைமலருக்கு இயக்குனர் சிவா அளித்த பேட்டியளித்தார். இதில் விவேகம் படத்தில் சண்டைக்காட்சிகளில் அஜித்திடம் நிறைய வேலை வாங்கி இருக்கீங்க? அதுபோல் இந்த விஸ்வாசம் படத்தில் அதிக வேலை வாங்கி இருக்கீங்களா? என்ற கேள்விக்கு, ‘கஷ்டத்தை இஷ்டப்பட்டு செய்பவர் அஜித். அவரை பொறுத்தவரை ஸ்டண்ட் காட்சிகள் ரியலாக இருக்க விரும்புவார். 



    என் படங்களில் சண்டைக்காட்சிகளில் அதிக மெனக்கெடுவேன். திலிப் சுப்பராயன் இப்படத்திற்கு சண்டைக் காட்சிகளை பிரமாதமாக அமைத்திருக்கிறார். அவருக்கு 100 மதிப்பெண்கள் கொடுக்கலாம். அந்தளவிற்கு திறமையாக வேலை செய்திருக்கிறார். அஜித்தின் கம்பீரத்தை சண்டைக் காட்சிகளில்தான் காண்பிக்க முடியும். அதை நாங்கள் சரியாக செய்து வருகிறோம் என்று நம்புகிறோம்’ என்றார்.  #Viswasam #Ajith
    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் சண்டை காட்சிகளில் ஒரு எமோஷன் இருக்கும் என்று திலீப் சுப்புராயன் கூறியிருக்கிறார். #Viswasam
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் செய்திருக்கிறார்.

    இப்படம் குறித்து திலீப் சுப்பராயன் கூறும்போது, ‘அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான நபர். ஒவ்வொரு சண்டைக்கலைஞரையும் அவர் மதிக்கும் விதம் அவர்களுக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. தொழில் என்று வந்து விட்டால் அவர் ஒருபோதும் குறுக்கிட மாட்டார். ட்ரெய்லரில் பார்த்து அனைவரும் பாராட்டும் மழை சண்டைக்காட்சியை பற்றி சிவா எனக்கு விவரித்த போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அஜித் சாரின் பைக் ஸ்டண்ட் பார்வையாளர்களுக்காக மிகவும் பரபரப்பாகவும், அதே நேரம் எமோஷனல் விஷயங்களையும் கொண்டிருக்கும். இதை பற்றி மேலும் சொல்ல முடியாது, அதை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகச்சிறந்த அனுபவமாக  இருக்கும்" என்றார்.



    மேலும், நடக்கவே சிரமப்படும் தரையில், சண்டை காட்சிகள் படமாக்கப்படும் சூழ்நிலையை நினைத்து பார்க்கவே சவாலாக இருந்தது. ஒட்டுமொத்த குழுவும் உறுதியுடன் இருந்தது, அதை சிறப்பாக நிறைவேற்ற எங்களுக்கு உதவியது" என்றார்.

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஜகபதிபாபு, விவேக், தம்பி ராமையா, கோவை சரளா, யோகிபாபு, பேபி அனிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
    அஜித்துடன் நான்கு படங்களில் பணியாற்றி இருக்கும் இயக்குனர் சிவா, ஐந்தாவது முறையாக இணைந்தால் அது வரம் என்று கூறியிருக்கிறார். #Viswasam #Ajith
    அஜித் - சிவா கூட்டணியில் இதுவரை ‘வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்,’ ‘விஸ்வாசம்’ ஆகிய 4 படங்கள் உருவாகியுள்ளது. இதில், ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

    இந்நிலையில், இயக்குனர் சிவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அஜித்துடன் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அஜித், ஒரு நல்ல மனிதர். சிறந்த நடிகர். அவரை வைத்து 4 படங்களை இயக்கியதில், சந்தோஷம். ஐந்தாவதாக மேலும் ஒரு படத்தில் இணைந்தால், அது வரம்’ என்றார்.



    விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. #Viswasam #Ajith
    சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம். #Viswasam #Petta
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும், ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. இந்த இரு படங்களுக்கும் திரையரங்குகளை ஒதுக்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

    எனினும் இரு படங்களுக்குமே சம அளவிலான திரையரங்குகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் தணிக்கை சான்றிதழின் படி, படத்தின் நீளம் 2 மணி 32 நிமிடம் என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஒரு நாளில் பல காட்சிகளை திரையிட முடியும் என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்களாம்.


    அதேநேரத்தில் ரஜினியின் பேட்ட படத்தின் நீளம் (2 மணி 51 நிமிடம்) அதிகம் தான் என்றாலும், அது ரசிகர்களை தொய்வு செய்யாது என்றும் கூறப்படுகிறது. இந்த இரு படங்களின் டிரைலர்களும் சமீழுத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

    பொங்கல் பண்டிகையில் இந்த இரு படங்களை தவிர்த்து வேறு எந்த படமும் ரிலீசாவது இன்னமும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Viswasam #AjithKumar #Petta #Rajinikanth

    ×