என் மலர்
நீங்கள் தேடியது "slug 127361"
- கெஜ்ரிவால் குஜராத்திற்கு வந்தால் பிறகு எப்படி நீங்கள் பட்டாசு வெடிப்பீர்கள்?
- பண்டிகை கொண்டாடுவதைத் தடுப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
ராஜ்கோட்:
தேசிய தலைநகரான டெல்லியில் பசுமைப் பட்டாசு உள்பட அனைத்து வகை பட்டாசுகளின் உற்பத்தி விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீண்டும் கடந்த மாதம் தடை விதித்தது. டெல்லியில் இன்று தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய் அண்மையில் அறிவித்தார்.
பட்டாசுகளை சேமித்தல் மற்றும் விற்பனை செய்தால் ரூ. 5,000 வரை அபராதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், கூறியதாவது:
டெல்லி முதல்வர், டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்ததாக செய்திகளைப் படித்தேன். அந்த சகோதரர் இங்கு (குஜராத்) நடைபெறும் தேர்தலுக்கு வர முயற்சிக்கிறார். பிறகு எப்படி நீங்கள் பட்டாசு வெடிப்பீர்கள்? எனவே பட்டாசு வெடித்து எங்கள் பண்டிகைகளை கொண்டாடுவதைத் தடுப்பவர்களை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தீபாவளியன்று மட்டும் டெல்லியில் மக்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் பட்டாசு வெடிக்க முதல்வர் கெஜ்ரிவால் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக எம்பி மனோஜ் திவாரி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- அரசு கோப்புகளை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய ஆளுநர்.
- ஆளுநர் மீது ஆம் ஆத்மி கட்சி ஊழல் குற்றச்சாட்டு.
டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிற்கும், கெஜ்ரிவால் அரசுக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட அரசின் 45 க்கும் மேற்பட்ட கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்து இல்லை என்று கூறி, ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்த சக்சேனா பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தந்தது தொடர்பாக 1400 கோடி அளவிற்கு ஊழல் செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
இதையடுத்து ஆளுநர் பதவியில் இருந்து சக்சேனா விலகக் கோரி அக்கட்சியின் எம்எல்ஏக்கள் நேற்று டெல்லி சட்டசபை வளாகத்தில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை நிலை ஆளுநர் மீதான ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக பாஜக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்துள்ளது.
- பாஜகவின் செயலால் விலைவாசி உயர்வின் பாதிப்பை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
புதுடெல்லி:
பிற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க பாஜக ரூ.6,300 கோடி செலவு செய்யவில்லை என்றால், மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டியதில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சாட்டை கூறி உள்ளார்.
டெல்லி சட்டசபையில் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்பட்ட பணம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வின் மூலம் கிடைத்த பணத்தை, எம்எல்ஏக்களை வாங்குவதற்காக பயன்படுத்துகிறது.
மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வாங்குவதற்கும், மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் பாஜக கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளதால், விலைவாசி உயர்வின் பாதிப்பை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். அரசுகளை கவிழ்ப்பதற்காக இதுவரை ரூ.6,300 கோடி செலவிட்டுள்ளனர். அரசுகளை கவிழ்க்காமல் இருந்திருந்தால் கோதுமை, அரிசி, மோர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டியதில்லை. மக்கள் பணவீக்கத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை.
இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
- டெல்லி கலால் கொள்கை முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட்டதாக சிசோடியா தகவல்
- 2024 மக்களவைத் தேர்தலானது கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் இடையிலான போட்டியாக இருக்கும்.
புதுடெல்லி:
மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட ஏராளமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி அரசின் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. துணை முதல் மந்திரி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு முதல் மந்திரி கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மணீஷ் சிசோடியா, ஓரிரு நாட்களில் தான் கைது செய்யப்படலாம் என்றும், இதற்காக பயப்பட மாட்டோம் என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
டெல்லி கலால் கொள்கை முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட்டது. அதில் எந்த ஊழலும் இல்லை. எனது குடும்பத்தினருக்கு எந்த தொந்தரவும் கொடுக்காத சிபிஐக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் நல்ல அதிகாரிகள், ஆனால் ரெய்டு நடத்தும்படி அவர்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது.
அவர்களின் பிரச்சனை கலால் கொள்கை ஊழல் பற்றியது அல்ல. கலால் கொள்கையில் எந்த மோசடி நடந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் கெஜ்ரிவாலைக் கண்டு பயப்படுகிறார்கள். குறிப்பாக, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற பிறகு இந்த கவலை அதிகரித்துள்ளது. எனவே, எனது வீடு, அலுவலகத்தில் நடந்த சோதனை மற்றும் எனக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும், அரவிந்த் கெஜ்ரிவாலை தடுத்தவே நடைபெறுகின்றன.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மேற்கொள்ளப்படும் சிறந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். முதலில் சுகாதாரத்துறை பொறுப்பில் இருந்த சத்யேந்தர் ஜெயினை கைது செய்தனர், அடுத்த ஓரிரு நாட்களில் நானும் கைது செய்யப்படுவேன். ஆனால் நாங்கள் பயப்படமாட்டோம்.
கெஜ்ரிவாலுக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், கெஜ்ரிவால் ஏழை மக்களைப் பற்றி சிந்திக்கிறார், பிரதமர் மோடி தனது தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களைப் பற்றி சிந்திக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலானது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான போட்டியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாளை(1-ந்தேதி) முதல் டெல்லியில் தனியார் மது விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது.
- ஒரு பாட்டில் சரக்குக்கு 2 பாட்டில் கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
புதுடெல்லி:
சரக்கு வாங்க சலுகைகள் அறிவித்தால் எந்த மது பிரியர்கள் தான் சும்மா இருப்பார்கள். இப்படி தான் டெல்லியில் மதுக்கடைகள் வெளியிட்ட அறிவிப்பால் மதுபிரியர்கள் திரண்டனர்.
டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் உள்ளன. இந்த நிலையில் மது விற்பனை கடைகளுக்கான லைசென்சு பெற புதிய நடை முறையை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(1-ந்தேதி) முதல் டெல்லியில் தனியார் மது விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது.
இதனால் தங்களிடம் இருக்கும் மதுபாட்டில்களை முழுவதுமாக விற்பனை செய்ய தனியார் மதுக்கடைகள் ஒரு பாட்டில் சரக்கு வாங்குபவர்களுக்கு 2 பாட்டில் மது இலவசம் என்ற அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டது.
அவ்வளவுதான் மது பிரியர்கள் போட்டி போட்டு கொண்டு பிரபலமான ஸ்டார் சிட்டி, மால் உள்ளிட்ட மது விற்பனை கடைகள் முன்பு திரண்டார்கள். இதனால் மது கடைகள் முன்பு கடுமையாக கூட்டம் அலை மோதியது. அவர்கள் தங்களுக்கு பிடித்தமான சரக்கு பாட்டில்கள் வாங்கி சென்றனர்.
மதுபிரியர்கள் குறிப்பிட்ட சில மதுபான வகைகளை வாங்கியதால் விரைவாக அந்த மதுபாட்டில்கள் விற்று தீர்ந்தது. அதுவும் குறிப்பாக பீர் வகைகள் அனைத்தும் சில மணி நேரங்களில் விற்று காலியானது.
ஒரு பாட்டில் சரக்குக்கு 2 பாட்டில் கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். ஆனால் பலருக்கு அதிர்ஷ்டம் கிடைக்காததால் அவர்கள் மதுபாட்டில்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்து டன் வீ டு திரும்பினார்கள்.
இந்த சலுகை அறிவிப்பால் டெல்லி நகர வீதிகளில் உள்ள மதுபான கடைகள் நேற்று மாலை திருவிழா கூட்டம் போல காணப்பட்டது.
- கட்டுமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
- 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் விற்பனை கிடங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இன்று காலை அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், அதில் படுகாயம் அடைந்த 9 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. கட்டுமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.


உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டா நகரை சேர்ந்த சிறுமி பிரியா (வயது 9) உடல் நலம் பாதிக்கப்பட்டதால் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால், சிறுமியிடம் ஆதார் அட்டை இல்லை என்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே டெல்லி மாநில பாரதீய ஜனதா தலைவர் மனோஜ் திவாரி, மத்திய மந்திரி நட்டாவை குறிப்பிட்டு தனது ட்விட்டரில் பக்கத்தில் இது தொடர்பான தகவலை பதிவிட்டார். இந்த சிறுமிக்கு சிகிச்சை கிடைப்பது தவிர்த்து நவராத்திரிக்கு வேறு எந்த சிறந்த விசயமும் கிடையாது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி. நட்டா இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். அவரது உத்தரவின்படி, டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Aadhaar