search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதஹஸ்தாசனம்"

    • `பாதஹஸ்தாசனம்’ குறித்த காணொலிக் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்.
    • பாதஹஸ்தாசனம் என்பது கைகளால் கால்களைத் தொடும்போது யோகா நிலை.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் ஒரு யோகா பயிற்சி கிராபிக்ஸ் காணொலியை பதிவிட்டு வருகிறார். இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 'பாதஹஸ்தாசனம்' குறித்த காணொலிக் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்.

    பாதஹஸ்தாசனம் என்பது கைகளால் கால்களைத் தொடும்போது யோகா நிலை. இது குறித்த விரிவான காணொலிக் காட்சிகளை பகிர்ந்து பிரதமர் நரேந்திரமோடி, முதுகெலும்புக்கு நன்மை அளிப்பதுடன், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வலியைப் போக்க உதவுகிறது என்பதால் இந்த ஆசனத்தை பயிற்சி செய்யு மாறும் பொதுமக்களை பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆசனம் செய்வதால் கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும். முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும்.
    செய்முறை : விரிப்பில் நேராக நிமிர்ந்து நின்று கைகளை உயர தூக்கவும். மூச்சை மெல்ல வெளியிட்டவாறே குனிந்து கால் பாதத்தை தொடவும். பின் மெல்ல தலையை காலுடன் ஒட்டியவாறு சேர்த்து வைக்கவும்.

    இந்த நிலையில் முடிந்த அளவு இருந்த பின் மூச்சை மெல்ல வெளியேற்றியவாறே தலையை நிமிர்த்தவும்.

    பயன்கள் : தலைக்கு ரத்தம் பாய்வதால் சிரசாசனம் செய்த பலனை இந்த ஆசனம் கொடுக்கும். கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் இதனால் வலுப்பெறும். முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும். உடல் முழுவதுமான ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. 
    ×