என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலி உடல்நிலம் பாதிப்பு"

    காதலிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை மேலூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகிவில்லை. ஆனாலும் வல்ல நாதன்பட்டியில் வசிக்கும் காதலி மீனாவுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் மீனாவுக்கு இடது கால் பாதத்தில் புண் ஏற்பட்டது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் புண் குணமாக வில்லை.

    காதலி உடல்நலக்குறைவில் அவதிப்படுவதை பார்த்து மனவேதனை அடைந்த அந்தோணி வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக அந்தோணியின் சகோதரர் ஜான்போஸ்கோ மேலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மதுரை மேலூர் அருகே உள்ள எஸ்.மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராசு மனைவி முத்துப்பிள்ளை (55). இவர் நேற்று மாலை மகன் செந்தில்குமாருடன் மோட்டார் சைக்கிளில் மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்றார்.

    அப்போது முத்துப்பிள்ளை தலைசுற்றுல் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முத்துப்பிள்ளை வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக செந்தில்குமார் மேலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கலைமுத்து வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×