search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னஞ்சல்"

    இணையதள தகவல் பரிமாற்ற முறைகளில் பிரபலமானதாக இருக்கும் மின்னஞ்சல் சேவையில் உங்களது இமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என கண்டறிவது எப்படி என பார்ப்போம். #Email



    இணைய உலகில் தகவல் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வரும் ஒன்றாகி விட்டது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி சுமார்  200 கோடி மின்னஞ்சல்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் களவாடப்பட்டது. இவற்றில் வெறும் 70 கோடி மின்னஞ்சல்கள் மட்டுமே தனித்துவம் வாய்ந்ததாக கண்டறியப்பட்டது. எனினும், இது மிகப்பெரும் தகவல் திருட்டு சம்பவமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உங்களது தகவல்கள் களவாடப்பட்டு இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளரான டிராய் ஹன்ட் 200 கோடி மின்னஞ்சல் விவரங்கள் களவாடப்பட்டு அவற்றின் பாஸ்வேர்டுகள் இணையத்தில் பரவி வருவதை அறிந்து தடுமாறியிருக்கிறார். முன்னதாக இவர் ஆதார் திட்டத்தில் சில தவறுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். 

    இந்த தவறுகள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டுகள் வெளியாக செய்ததாக அவர் தெரிவித்தார். அவர் வெளியிட்ட தகவல்களில் இந்த விவரங்கள் 12,000 வெவ்வேறு ஃபைல்களாக சுமார் 87 ஜி.பி. அளவு சேமிக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்திருந்தார். 



    முன்னதாக அவர் தனது வலைபக்கத்தில் வெளியிட்ட தகவல்களில் இணையத்தில் வெளியான விவரங்கள் தற்சமயம் கிடைக்கிறதா என தெரியவில்லை. எனினும் அவை ஹேக்கர்களிடையே பிரபலமாக இருக்கும் இணைய முணையங்களில் கிடைப்பதாக அவர் தெரிவித்தார். ஹன்ட் வெளியிட்ட தகவல்களில் சுமார் 200 கோடி மின்னஞ்சல் விவரங்கள் தகவல் திருட்டு மூலம் வெளியாகி இருப்பதை உறுதி செய்திருக்கிறார். மேலும் அவற்றில் வெறும் 70 கோடி மின்னஞ்சல்கள் மட்டுமே தனித்துவம் வாய்ந்தது என அவர் தெரிவித்தார்.

    இந்த தகவல்கள் HIBP (Have I Been Pwned) வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நீங்களும் உங்களது மின்னஞ்சல் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என இந்த வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதற்கு https://haveibeenpwned.com வலைதளம் சென்று உங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும். 

    இதேபோன்று பாஸ்வேர்டு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள https://haveibeenpwned.com/Passwords வலைதளத்தை பயன்படுத்தலாம். 



    மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு வெளியாகி இருப்பதை அறிந்து கொண்ட பின் என்ன செய்ய வேண்டும்? 

    மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின் படி உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு வெளியாகி இருப்பதை அறிந்து கொண்டதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

    - உடனடியாக மின்னஞ்சல் பாஸ்வேர்டுகளை மாற்ற வேண்டும். 

    - டு-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் (Two-Factor Authentication) வசதியை அனைத்து சேவைகளிலும் செயல்படுத்த வேண்டும். 

    - குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியில் நீங்கள் வழங்கியிருந்த அனுமதிகளை திரும்ப பெற வேண்டும்.

    நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சேவைகளுக்கும் வெவ்வேறு பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். சில சேவைகளில் மின்னஞ்சல் முகவரி ஒன்றாக இருந்தாலும் இவ்வாறு செய்ய வேண்டும். வெவ்வேறு சேவைகளுக்கென தனித்தனி பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்க முடியும்.
    கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஆன்ட்ராய்டு தளத்தில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. #Gmail


    ஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. இதுவரை பயனர்கள் மின்னஞ்சல் ஷெட்யூல் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வரும் நிலையில் புதிய அம்சம் பலருக்கு பயன்தரும் வகையில் இருக்கும்.

    மொபைலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதால், இதே அம்சம் இணையத்திற்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிமெயில் மொபைல் செயலியின் கம்போஸ் ஆப்ஷனின் அருகில் உள்ள ஷெட்யூல் சென்ட் எனும் அம்சம் புதிதாக சேர்க்கப்படுகிறது.

    ஷெட்யூல் செய்யும் அம்சம் மொபைல் மற்றும் இணைய பதிப்புகளுக்கு ஒரே சமயத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு எவ்வித ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. ஷெட்யூல் இ-மெயில் அம்சம் மின்னஞ்சல்களை டைப் செய்து, அதன் பின் நீங்கள் விரும்பும் நேரத்தில் அவை தானாக செல்லும் படி இருக்கும்.

    ஜிமெயிலின் புதிய செயலியை ஏ.பி.கே. வடிவில் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அவசரம் இல்லை என்பவர்கள் பிளே ஸ்டோரில் அப்டேட் கிடைக்கும் வரை காத்திருக்கலாம். #Gmail #Apps
    ஜிமெயில் சேவையின் பாதுகாப்பு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு கூகுள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பு செயலிகளின் ஊழியர்களால் பயனரின் மின்னஞ்சல்களை படிக்க முடியும் என்ற சர்ச்சை அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில், கூகுள் சார்பில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த பதில் கூகுள் வலைப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் மூன்றாம் தரப்பு செயலிகள் சார்பில் கேட்கப்படும் தகவல்கள் பெரும்பாலும், அவர்களுக்கு அவசியமானது தானா என்றும், அவை சரியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வதை கூகுள் மிகவும் கண்டிப்புடன் கண்கானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவல்களில் மென்பொருள் உருவாக்குவோரில் நூற்றுக்கணக்கானோர் மூன்றாம் தரப்பு ஜிமெயில் செயலிகளின் மூலம் பயனரின் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. சில சமயங்களில் டெவலப்பர்களின் பணியாளர்கள் ஜிமெயில் பயனர்களின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை இயக்க வசதி பெற்றிருந்தனர் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    நிறுவனங்களுக்கு இலவச மின்னஞ்சல் சேவையை வழங்கும் ரிட்டன் பாத் எனும் விளம்பர நிறுவனம் தனது பணியாளர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன் 8000 பயனர் மின்னஞ்சல்களை வாசிக்க அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்நிறுவன மென்பொருள்களை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் தெரிவிக்கப்பட்டது.

    இதே வலைப்பதிவில் கூகுள் பயனரின் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்ற தகவல்களும் இடம்பெற்றிருக்கிறது. இதில் விளம்பரங்களை வழங்குவதற்கு என பயனர் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்யும் வழக்கத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் சில தானியங்கி வழிமுறைகளால் பலர் 'கூகுள் உங்களின் மின்னஞ்சல்களை வாசிக்கிறது' என தவறாக புரிந்து கொள்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    "உண்மையில் கூகுள் தரப்பில் யாரும் உங்களது மின்னஞ்சல்களை வாசிப்பதில்லை, எனினும் பயனர் சார்பில் பிரத்யேக சூழல்களில் முறையான அனுமதி பெறப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அல்லது பிழை திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என கூகுள் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது."
    ஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. 

    சமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் IO 2018 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த அம்சங்களில் ஒன்றான மென்ஷன் எனும் அம்சம், மின்னஞ்சல் டைப் செய்யப்படும் போது இடையே மற்றவர்களை டேக் செய்ய @ குறியீட்டை பயன்படுத்த வழி செய்கிறது.

    இந்த அம்சம் ஜிமெயிலில் மின்னஞ்சல் டைப் செய்யும் போது இடையே கான்டாக்ட்களை சேர்க்கும் வசதியை வழங்குகிறது. அதன் படி கான்டாக்ட்களை மின்னஞ்சலில் இணைக்க '@' குறியீடு மற்றும் குறிப்பிட்ட கான்டாக்ட்-இன் பெயரை டைப் செய்ய வேண்டும். இதே அம்சம் கூகுள் பிளஸ் தளத்தில் '+' குறியீடு மற்றும் பெயரை டைப் செய்தால் வேலை செய்கிறது. @ அல்லது + குறியீடுகளுடன் பெயரை டைப் செய்ய துவங்கும் போதே குறிப்பிட்ட கான்டாக்ட்களை பார்க்க முடியும். அதில் இருந்து கான்டாக்ட்-ஐ தேர்வு செய்யலாம். 

    பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு மின்னஞ்சல் சேவையை அதிகளவு பயன்படுத்துவோருக்கு இது அதிகப்படியான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இந்த அம்சம் ஜிமெயிலின் ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் இயங்குதள செயலிகளில் இன்னமும் அப்டேட் செய்யப்படவில்லை என்பதால் முதற்கட்டமாக வாடிக்கையாளர்கள் இதனை வெப் சேவையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.


    கோப்பு படம்

    சமீபத்தில் ஜிமெயில் தளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் ஒன்று தான் நட்ஜ் (Nudge), இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் செட் செய்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் குறித்த நினைவூட்டலை வழங்கும். 

    புதிய நட்ஜ் அம்சம் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை செட் செய்து, மின்னஞ்சல் மீண்டும் எப்போது இன்பாக்ஸ்-இல் தோன்ற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட மின்னஞ்சல் உங்களது இன்பாக்ஸ்-இல் தெரியும். இந்த அம்சம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.

    உங்களுக்கு வரும் புதிய மின்னஞ்சல்களை கேமரா மூலம் பார்க்கப்படும். இந்த அம்சம் ஜிமெயில் தளத்தின் வலதுபுறத்தில் காணப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மின்னஞ்சல்களை கொண்டு வருகிறது. இந்த அம்சம் தானாகவே ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், விரும்பாதவர்கள் இதனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
    கூகுளின் ஜிமெயில் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய வசதிகளை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    கூகுளின் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் ஒன்றான ஜிமெயில் சமீபத்தில் அதிகப்படியான அம்சங்கள் சேர்க்கப்பட்டன. கூகுள் I/O 2018 நிகழ்வுக்கு முன் இன்டர்ஃபேஸ் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கூகுள் விழாவில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    புதிய அம்சங்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குவதாக அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் ஜிமெயில் சமீபத்திய அப்டேட் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோருக்கும் அதிகம் தேவைப்படும் அம்சமாக இருக்கும் ஆஃப்லைன் சப்போர்ட் ஜிமெயிலில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இதனால் ஜிமெயில் சேவையை இன்டர்நெட் இல்லாமலும் பயன்படுத்த முடியும். இதனால் மின்னஞ்சல்களை படிப்பதோடு மட்டுமின்றி அவற்றை டெலீட் செய்வது, எழுதுவது, தேடுதல் மற்றும் ஆர்சிவ் போன்ற சேவைகளை இன்டர்நெட் இணைப்பின்றி பயன்படுத்த முடியும். ஆஃப்லைனில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் இன்டர்நெட் இணைப்பு கிடைத்ததும் சின்க் செய்யப்பட்டு விடும்.



    இந்த அம்சத்தை பயன்படுத்த க்ரோம் பிரவுசர் 61 வெர்ஷன் தேவைப்படுகிறது. ஜிமெயிலில் ஆஃப்லைன் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதை கீழே காணலாம்..,

    வழிமுறை 1: கூகுள் க்ரோம் வெர்ஷன் 61 டவுன்லோடு செய்யவும்.

    வழிமுறை 2: ஜிமெயிலில் செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்யவும்.

    வழிமுறை 3: டிராப்-டவுன் மெனுவில் செட்டிங்ஸ் டேப்-ஐ க்ளிக் செய்யவும்

    வழிமுறை 4: மெனு பாரில் காணப்படும் ஆஃப்லைன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    வழிமுறை 5: இனி எனேபிள் ஆஃப்லைன் மெயில் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    வழிமுறை 6: உங்களது தேவைக்கு ஏற்ப செட்டிங்-களை மாற்றியமைக்கலாம்.

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆப்ஷன்களை செயல்படுத்தியதும், ஜிமெயில் சேவையை இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்த துவங்கலாம்.

    ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் பெரும்பாலான பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் மின்னஞ்சல்களை டைப் செய்யும் போதே வாக்கியங்களை முழுமை செய்ய கூகுள் பரிந்துரைக்கும். இதை கொண்டு முழுமையாக டைப் செய்யாமல் டேப் பட்டனை க்ளிக் செய்து மிக எளிமையாக மின்னஞ்சலை டைப் செய்யலாம்.
    ×