search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்கல்லம்"

    • காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை.
    • பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.

    பென் ஸ்டோக்ஸ்- மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பஸ்பால் எனப்படும் தங்களுடைய அணுகுமுறையை வைத்து வெற்றி காண முடியும் என்பதை இங்கிலாந்து அணி நிரூபித்துள்ளது.

    இந்நிலையில் டோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் போல நானும் ப்ரெண்டன் மெக்கலமும் கற்றுக் கொள்வதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை. ஆனால் அந்த நம்ப முடியாத சிறந்த அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். புனே அணிக்காக விளையாடிய போது நான் டோனி மற்றும் பிளெமிங் ஆகியோருடன் நிறைய விளையாடியுள்ளேன்.

    பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். டோனி ஆட்டத்தில் வெளியே இருப்பது போன்ற உணர்ச்சியை கொண்டிருப்பார். அதே சமயம் சில நேரங்களில் நீங்கள் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது அந்த உணர்ச்சி உங்களுக்கு இருக்காது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த புரிதலை கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

    டோனி மற்றும் பிளெமிங் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்வது சம்பந்தமாக அல்லது எந்த முடிவாக இருந்தாலும் அதை வேகமாக எடுப்பார்கள். அது எப்போதும் அணிக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும். அதைத் தான் நானும் மெக்கலமும் எப்போதும் பின்பற்ற முயற்சித்து கடைபிடிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்றதில்லை. இந்த நிலையை இந்தியா தக்கவைத்து கொள்ளுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

    • இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை.
    • ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன்.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி 2021-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் ஆகியோரது வற்புறுத்தலை ஏற்று டெஸ்ட் ஓய்வில் இருந்து விடுபட்டு சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். 2-2 என்று சமனில் முடிந்த இந்த தொடரின் கடைசி டெஸ்டில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் டெஸ்டில் இருந்து மீண்டும் விடைபெற்றார்.

    அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வரை தொடர்ந்து டெஸ்டில் விளையாடுவது குறித்து பரிசீலிக்கும்படி பயிற்சியாளர் மெக்கல்லம் அவரை மீண்டும் கேட்டு இருந்தார். இந்த முறை அவரது வேண்டுகோளை ஏற்க 36 வயதான மொயீன் அலி மறுத்து விட்டார்.

    இது குறித்து மொயீன் அலி கூறுகையில் 'இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. எனது முடிவு அவர்களுக்கு (ஸ்டோக்ஸ், மெக்கல்லம்) தெரியும். அற்புதமான ஆஷஸ் வெற்றியுடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்து விட்டேன்.

    எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் ஏற்றம், இறக்கங்கள் நிறைந்தது. நான் அதை மாற்ற முடியாது. ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன். இனி வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்துவேன். 20 ஓவர் லீக் போட்டிகளிலும் விளையாடுவேன்' என்றார்.

    • சர்வதேச பயிற்சியாளர் பணிக்கு அப்போது நான் தயாராக இல்லை.
    • நான் கிரிக்கெட்டில் அதிக காலம் பயணம் செய்து விட்டேன்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெக்கல்லம்- பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணி 14 டெஸ்டுகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தன்னை அணுகியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரொபர்ட் கியிடம் இருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்தது. ஆனால் சர்வதேச பயிற்சியாளர் பணிக்கு அப்போது நான் தயாராக இல்லை. நான் கிரிக்கெட்டில் அதிக பயணம் செய்து விட்டேன். இப்போது என் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க தொடங்கி இருக்கிறேன். இந்த நேரத்தில் இதிலிருந்து விலகி இருக்க விரும்பவில்லை.

    மெக்கல்லத்துக்கும் குடும்பம் இருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்து கொண்ட இது போன்ற பணிகளை செய்வது எனக்கு சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் 3-வது இடத்தில் உள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் முதல் இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மிட்செல் 109 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பேர்ஸ்டோவ்-ஓவர்டேன் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.

    இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஒரு சிக்சர்கள் அடங்கும். இந்த சிக்சர்கள் மூலம் அவர் சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் 3-வது இடத்தில் (100 சிக்சர்கள்) உள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கில்கிறிஸ்ட் (100 சிக்சர்கள்) சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மெக்கல்லம் 176 போட்டிகளில் விளையாடி 107 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா வீரர் கில்கிறிஸ்ட் 100 சிக்சர்கள்களுடன் 2-வது இடத்திலும் பென் ஸ்டோக்ஸ் 100 சிக்சர்கள்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இன்னும் 8 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்து சாதனை படைப்பார்.

    நியூசிலாந்து அணியைச் சேர்ந்த முன்னாள் அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #McCullum
    நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வருகிறார்.

    நேற்று அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிராக மெக்கல்லம் 39 பந்தில் 51 ரன்கள் சேர்த்தார். போட்டி முடிந்த பின், இந்த சீசனோடு பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பிரெண்டன் மெக்கல்லம் கூறுகையில் ‘‘2019-ல் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் பங்கேற்று விளையாடுவேன். அதன்பின் பயிற்சியாளர் பதவி குறித்து யோசிப்பேன்’’ என்றார்.
    ×