என் மலர்
நீங்கள் தேடியது "ஒருநாள் கிரிக்கெட் போட்டி"
- 2 முறை சாம்பியனான இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
- இதற்கு முன்பு 2000, 2002, 2013, 2017 ஆகிய ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.
துபாய்:
8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது.
இன்று ஓய்வு நாளாகும். முதல் அரை இறுதி ஆட்டம் துபாயில் நாளை (4-ந் தேதி) நடக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி இந்த போட்டி தொடரில் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை 44 ரன்னிலும் தோற்கடித்தது. இதனால் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.
ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்தவை என்பதால் இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. அதே நேரத்தில் ஆடுகள தன்மையை பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.
நியூசிலாந்துக்கு எதிராக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார். துருப்பு சீட்டாக கருதப்படும் அவர் ஆஸ்திரேலியாவுடன் ஆடும் வாய்ப்பு கிடைத்தாலும் தனது மந்திர பந்து வீச்சை வெளிப்படுத்துவார்.
முதல் 3 நிலை பேட்ஸ்மேன்கள் (கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி) முக்கியமான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது அவசியமாகும். ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
2 முறை சாம்பியனான இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதற்கு முன்பு 2000, 2002, 2013, 2017 ஆகிய ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.
ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் 2 முறை சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியுள்ளது. அந்த அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. ஜோஷ் இங்கிலீஷ், மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவ் சுமித் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பென் துவார்சுயிஸ், ஆடம் ஜம்பா போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
லாகூரில் 5-ந் தேதி நடைபெறும் 2-வது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்தார்.
- சாம்பியன் டிராபியில் இருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் வெளியேறியது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்தார். சாம்பியன் டிராபியில் இருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் வெளியேறியது.
இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்மித் தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதான ஸ்டீவ் சுமித் 170 போட்டிகளில் விளையாடி 5,800 ரன் எடுத்துள்ளார். சராசரி 43.28 ஆகும். 12 சதமும், 35 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சம் 164 ரன் குவித்துள்ளார். தனது கடைசி ஒருநாள் போட்டியில் அவர் 73 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அணியில் கிராண்ட்ஹோம் நீக்கப்பட்டு சான்ட்னர் சேர்க்கப்பட்டு உள்ளார். இதேபோன்று இந்திய அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு உள்ளார். விஜய் சங்கருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா விளையாட இருக்கிறார்.
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் குப்தில் 13 ரன்களிலும், முன்ரோ 7 ரன்னிலும் விரைவில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து நியூசிலாந்து நிதானமாக விளையாடி வருகிறது. #NZvIND #TeamIndia
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லாட்சில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விடும். தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்தை கதிகலங்க வைத்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் பந்து வீச்சு மீது இன்றைய ஆட்டத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த ஆட்டத்தை ஜூலை 15-ந்தேதி நடத்த தான் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை மனதில் கொண்டு, ஒரு நாள் இடைவெளி விட்டு உடனடியாக வைத்து விட்டார்கள். குல்தீப் யாதவின் பவுலிங்கை, வீடியோ காட்சிகள் மூலம் அலசி ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஆயத்தமாக, இங்கிலாந்து வீரர்களுக்கு இந்த அவகாசம் போதுமா? என்று தெரியவில்லை.
ஆனாலும் சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க எல்லா வகையிலும் முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #ENGvIND #INDvENG
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நாட்டிங் காமில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.
கடைசியாக 2014-ம் ஆண்டு டோனி தலைமையிலான அணி இங்கிலாந்தில் விளையாடிய போது 5 போட்டிகொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதேபோல தற்போதைய இந்திய அணியும் முத்திரை பதிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.
இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்து இருந்தது. இதனால் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.
யசுவேந்திர சாஹல்- குல்தீப் யாதவின் பந்துவீச்சை பொறுத்து அணியின் நிலை இருக்கிறது. இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அவர்கள் சவாலாக இருப்பார்கள்.
பேட்டிங்கில் கேப்டன் கோலி, ரோகித்சர்மா, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, ராகுல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 20 ஓவர் தொடரில் வாய்ப்பு கிடைக்காத தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஒருநாள் தொடரிலாவது இடம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 ஓவர் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் இங்கிலாந்து உள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் திகழ்கிறது. இரு அணிகளும் நாளை மோதுவது 97-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 96 ஆட்டத்தில் இந்தியா-52-ல், இங்கிலாந்து-39-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், ரெய்னா, டோனி, ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தினேஷ்கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.
இங்கிலாந்து: மார்கன் (கேப்டன்), ஜேசன்ராய், பட்லர், மொய்ன்அலி, பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹால்ஸ், ஜோரூட், பென்ஸ்டோகஸ், ஜேக்பால், டாம் குர்ரான், புளுன்கெட், ஆதில்ரஷீத், டேவிட் வில்லி, மார்க்வுட். #ENDvIND #INDvEND
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள்போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுகிறது.
இதற்காக விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று டெல்லியில் இருந்து இங்கிலாந்து புறப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் 20 ஓவர் போட்டி ஜூலை 3-ந்தேதி நடக்கிறது. ஜூலை 12-ந்தேதி ஒருநாள் தொடரும், ஆகஸ்ட் 1-ந்தேதி டெஸ்ட் தொடரும் தொடங்குகிறது.
இங்கிலாந்துடன் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
வருகிற 27 மற்றும் 29-ந்தேதிகளில் டுப்ளின் நகரில் இந்த போட்டிகள் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 போட்டிகள் மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி இங்கிலாந்துடன் மோதும் போட்டி விவரம் வருமாறு:-
ஜூலை.3:- முதல் 20 ஓவர் போட்டி (மான்செஸ்டர்) இரவு 10.00 மணி.
ஜூலை.6:- இரண்டாவது 20 ஓவர் போட்டி (கார்டிப்)- இரவு 10.00 மணி.
ஜூலை.8:- மூன்றாவது 20 ஓவர் போட்டி (பிரிஸ்டல்) மாலை 6.30 மணி.
ஜூலை.12:- முதல் ஒருநாள் போட்டி (நாட்டிங்காம்) மாலை 5 மணி.
ஜூலை.14:- இரண்டாவது ஒருநாள் போட்டி (லண்டன்) மாலை 3.30.
ஜூலை.17:- கடைசி ஒருநாள் போட்டி (லீட்ஸ்) மாலை 5 மணி.
ஆகஸ்ட் 1-5: முதல் டெஸ்ட் (பர்மிங்காம்).
ஆகஸ்ட் 9-13: இரண்டாவது டெஸ்ட் (லார்ட்ஸ்).
ஆகஸ்ட் 18-22: மூன்றாவது டெஸ்ட் (நாட்டிங்காம்)
ஆகஸ்ட் 30-செப்.3: நான்காவது டெஸ்ட் (சவுத்தம்டன்)
செப் 7-11: கடைசி டெஸ்ட் (ஓவல்)
டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.