என் மலர்
நீங்கள் தேடியது "ஓய்வூதியர்கள்"
- அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
- வருகிற நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் அரசு போகுவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 110 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாத ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி அதிகபட்சமாக 27 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல என்பது மட்டுமின்றி, இந்த உயர்வையும் தமிழக அரசு தானாக வழங்கவில்லை. 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக ரூ.19,000 வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியர்களுக்கு ரூ.4,000 மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு அகவிலைப்படி உயர்வு வழங்கும் வகையில், வருகிற நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று கூறி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட கருவூல அதிகாரி மூக்கையா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவூலத்தின் வழியாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் கடந்த 1.4.2018 முதல் ஓய்வூதியம் மூலம் பெற்ற வருமானத்துடன் இதர வகை வருமானத்தையும் சேர்த்து ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்திற்கு மேல் வருமானம் பெற்ற ஓய்வூதியர்கள், தங்களுடைய 2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை பெற்று, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் மார்ச் 2018 முதல் டிசம்பர் 2018 வரை உள்ள காலத்தில் ஓய்வூதியம் எவ்வளவு பெறப்பட்டது என்பதை அறிவதற்கு tn.gov.ka-ruv-o-o-l-am.in என்ற இணையதளத்தில் ECS status of pe-ns-i-o-n-ers என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்காக கருவூலம் சென்று ஓய்வூதிய விவரங்களை பெற வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.