என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » slug 134032
நீங்கள் தேடியது "slug 134032"
இங்கிலாந்தில் புற்றுநோயால் மரணம் அடைந்த தலைமை ஆசிரியை இறுதிச்சடங்கில், மாணவர்கள் தீட்டிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் தலைமை ஆசிரியை உடல் அடக்கம் செய்யப்பட்டது. #SueEast #Cancer #SchoolHeadteacher
லண்டன்:
இங்கிலாந்து நாட்டில் பாத் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சூ ஈஸ்ட் (வயது 58). இவர் மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் விரும்பும் பாணியில் பாடங்கள் கற்றுத்தந்து அவர்களின் அன்பை அமோகமாக பெற்றார்.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் அவரைப் புற்றுநோய் தாக்கியது. அதிலிருந்து மீள்வதற்கு அவர் போராடினார். ஆனால் அந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை.
![](https://img.maalaimalar.com/InlineImage/201901200019586817_1_93vr64rn._L_styvpf.jpg)
உயிருக்காக போராடியபோது அவர் தனது மாணவ, மாணவிகளுக்கு நெஞ்சை உருக்கும் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர், தான் புற்றுநோயால் அவதியுற்று வருவதையும், தான் விரைவில் மரணம் அடையப்போவதையும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
1952-ம் ஆண்டு சி.எஸ். லெவிஸ் எழுதி வெளியான ‘தி வாயேஜ் ஆப் தி டான் ட்ரீடர்’ நாவலில் குறிப்பிட்டிருந்தபடி, “மரணம் என்பது ஒரு சிறிய சுற்றுப்படகில் அடிவானத்தில் பயணம் செய்வதற்கு சமமானது” என சுட்டிக்காட்டி இருந்தார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201901200019586817_2_vq9ytsf2._L_styvpf.jpg)
இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கில் அவரிடம் படித்த, படித்துக்கொண்டிருந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் தங்களுக்கு பிரியமான ஆசிரியை நிரந்தரமாக ஓய்வு எடுப்பதற்கான சவப்பெட்டியின் மீது அலங்கரிப்பதற்கு அவர்கள் வண்ண ஓவியங்களை தீட்டி, அந்த தாள்களை எடுத்து வந்திருந்தனர். அந்த தாள்கள், சவப்பெட்டியின் மீது ஒட்டி அலங்கரிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து தேவாலயத்தில் பிரார்த்தனையும், உடல் நல்லடக்கமும் நடந்தது. அதில் மாணவ, மாணவிகள், சக ஆசிரியைகள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர். #SueEast #Cancer #SchoolHeadteacher
இங்கிலாந்து நாட்டில் பாத் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சூ ஈஸ்ட் (வயது 58). இவர் மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் விரும்பும் பாணியில் பாடங்கள் கற்றுத்தந்து அவர்களின் அன்பை அமோகமாக பெற்றார்.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் அவரைப் புற்றுநோய் தாக்கியது. அதிலிருந்து மீள்வதற்கு அவர் போராடினார். ஆனால் அந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை.
![](https://img.maalaimalar.com/InlineImage/201901200019586817_1_93vr64rn._L_styvpf.jpg)
1952-ம் ஆண்டு சி.எஸ். லெவிஸ் எழுதி வெளியான ‘தி வாயேஜ் ஆப் தி டான் ட்ரீடர்’ நாவலில் குறிப்பிட்டிருந்தபடி, “மரணம் என்பது ஒரு சிறிய சுற்றுப்படகில் அடிவானத்தில் பயணம் செய்வதற்கு சமமானது” என சுட்டிக்காட்டி இருந்தார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201901200019586817_2_vq9ytsf2._L_styvpf.jpg)
அத்துடன் தங்களுக்கு பிரியமான ஆசிரியை நிரந்தரமாக ஓய்வு எடுப்பதற்கான சவப்பெட்டியின் மீது அலங்கரிப்பதற்கு அவர்கள் வண்ண ஓவியங்களை தீட்டி, அந்த தாள்களை எடுத்து வந்திருந்தனர். அந்த தாள்கள், சவப்பெட்டியின் மீது ஒட்டி அலங்கரிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து தேவாலயத்தில் பிரார்த்தனையும், உடல் நல்லடக்கமும் நடந்தது. அதில் மாணவ, மாணவிகள், சக ஆசிரியைகள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர். #SueEast #Cancer #SchoolHeadteacher
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆன்டிகுவாவில் நடைபெறும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. #WomenWorldT20 #India #England
ஆன்டிகுவா:
6-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு ஆன்டிகுவாவில் நடைபெறும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி லீக் சுற்றில் நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வரிசையாக வீழ்த்தி தனது பிரிவில் (பி) முதலிடத்தை பிடித்து கம்பீரமாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. அத்துடன் இந்த போட்டி தொடரில் இந்திய அணி தான் அதிகபட்ச ஸ்கோரை (நியூசிலாந்துக்கு எதிராக 194/5) பதிவு செய்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (167 ரன்கள்) ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ளார். மந்தனா (144 ரன்கள்), மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் (107 ரன்கள்) ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். கடைசி லீக் ஆட்டத்தில் காயம் காரணமாக களம் இறங்காத மிதாலி ராஜ் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் சுழற்பந்து வீச்சாளர்கள் பூனம் யாதவ் (8 விக்கெட்), ராதா யாதவ் (7 விக்கெட்), ஹேமலதா (5 விக்கெட்), தீப்தி சர்மா (4 விக்கெட்) ஆகியோர் எதிரணியினருக்கு சவாலாக விளங்கி வருகிறார்கள். இவர்களின் சுழல் ஜாலம் நீடித்தால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை லீக் ஆட்டங்களில் வங்காளதேசம், தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. வெஸ்ட்இண்டீசிடம் தோல்வி கண்டது. ஒரு ஆட்டம் (இலங்கைக்கு எதிராக) முடிவில்லாமல் போனது. ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்து இங்கிலாந்து அணி அரைஇறுதியை எட்டியது.
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. அந்த அணி இந்த போட்டி தொடரில் அதிகபட்சமாக 115 ரன்கள் (வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக) தான் எடுத்துள்ளது. எந்தவொரு வீராங்கனையும் 50 ரன்களை தாண்டவில்லை. ஆனால் அந்த அணியின் பந்து வீச்சு அபாரமாக உள்ளது. அன்யா சிருப்சோல் (7 விக்கெட்), கிறிஸ்டி கோர்டான் (6 விக்கெட்), நதாலி ஸ்வியர் (4 விக்கெட்) ஆகியோர் பவுலிங்கில் மிரட்டக்கூடியவர்கள். கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்திய அணி வரிந்து கட்டும். அதே சமயம் இங்கிலாந்து அணி தனது ஆதிக்கத்தை தொடர போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி இதுவரை இறுதிப்போட்டிக்கு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவ்விரு இதுவரை 20 ஓவர் போட்டியில் 13 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 3 முறையும், இங்கிலாந்து அணி 10 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
முன்னதாக இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு ஆன்டிகுவாவில் நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து நாட்டில் விபத்தில் இந்தியரை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். #UKPoliceOfficer #Jail #IndianOrigin #Murder
லண்டன்:
இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்தவர் பல்விந்தர் சிங் (வயது 59). இந்தியர். இவர் அங்கு கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் வோல்வர்ஹாம்ப்டன் என்ற இடத்தில் அவர் தனது வேனை ஓட்டிச்சென்றார்.
அப்போது அந்த வேன் மீது ஒரு கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பல்வீந்தர் படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் மீது காரை ஓட்டிச்சென்று மோதி விபத்து ஏற்படுத்திய ஜேசன் பேனிஸ்டர் என்பவர் சிக்கினார். அவர் ஸ்டாப்போர்டுஷயர் போலீஸ் அதிகாரி ஆவார். அவர் மீது விபத்தை ஏற்படுத்தி பல்விந்தர் சிங்கை கொன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு அங்குள்ள பர்மிங்ஹாம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜேசன் பேனிஸ்டர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என நீதிபதி முடிவு செய்து, அவருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் அவர் 3 ஆண்டு காலம் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் குர்ரன் சகோதரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் உள்ளூரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுடன் ஒரே ஒரு 20 ஓவர்போட்டியில் ஆடுகிறது. அதன் பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று முதலில் மூன்று போட்டிகள் அடங்கிய 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இவ்விரு அணிகளுக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் மோதும் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இடது பின்னங்காலில் தசைநாரில் கிழிவு ஏற்பட்டு காயத்தால் அவதிப்படும் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், அந்த பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் இந்த தொடரிலும் இருந்தும் அவர் கழற்றி விடப்பட்டு இருக்கிறார். இதே போல் காயத்தில் சிக்கியிருக்கும் கிறிஸ்வோக்சும் இடம் பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜாக்பால் அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர்களான சகோதரர்கள் சாம் குர்ரன், டாம் குர்ரன் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இருவரும் சுர்ரே கவுண்டி அணிக்காக விளையாடி வருகிறார்கள்.
இந்த தொடரில் இருவரும் ஒரே போட்டியில் களம் இறங்கினால், 1999-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே நேரத்தில் சர்வதேச போட்டியில் ஆடிய இங்கிலாந்து சகோதரர்கள் என்ற சிறப்பை பெறுவார்கள்.
இங்கிலாந்து 20 ஓவர் போட்டி அணி வருமாறு:-
இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, ஜாக் பால், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், டாம் குர்ரன், அலெக்ஸ் ஹாலெஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜாசன் ராய், டேவிட் வில்லி.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அடுத்த மாதம் 3-ந்தேதி நடக்கிறது.

×
X