என் மலர்
நீங்கள் தேடியது "வீடு நாட்டுத்துப்பாக்கி"
ஆம்பூர் அருகே வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் கோகுல் (வயது 25). இவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் இன்று காலை அவரது வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது கோகுல் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது.
போலீசார் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து கோகுலை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.