என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காங்கயம்"
காங்கயம்:
கோவையை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 19). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது உறவினரை பார்க்க கோவையில் இருந்து ஊத்துக்குளி வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தார்.
திருப்பூர்- ஊத்துக்குளி ரோட்டில் உள்ள செங்கப்பள்ளி அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 62). ரியஸ் எஸ்டேட் அதிபர். இவரது மகள் சுதா (36), மருமகன் பழனிமுருன் (41) ஆகியோருடன் நேற்று மாலை திருப்பூர் மண்ணரை சத்யா காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் புறப்பட்டனர். காரை பழனிமுருகன் ஓட்டினார். கார் ஊத்துக்குளி- திருப்பூர் இடையே உள்ள கொடியம்பாளையம் நால்ரோடு வந்தபோது அங்கு நின்ற லாரி மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே ரியஸ் எஸ்டேட் அதிபர் சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பழனிமுருகன், சுதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் அருகே திருப்பூரைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் கடந்த மாதம் 23-ந்தேதி அவரது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பூங்கொடி கழுத்தில் அணிந்திருந்த4 பவுன் தங்க நகையை பறித்து தப்பினர். இந்நிலையில் நேற்று (23-ந்தேதி) அதிகாலை நடைபயிற்சி வந்த விஜயகுமார் என்பவரிடம் இரு வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் ரூ.1500-ஐ பறித்து தப்பினர்.
இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். நேற்று அங்குள்ள நால்ரோட்டில் பஸ் நிறுத்ததில் 2 பேர் நின்றனர். போலீசை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உஷாரான காங்கயம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் என்ற பல்லன் (வயது 27), சேலம் வாழப்பாடியை சேர்ந்த மற்றொரு கார்த்திக் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.
பூங்கொடியிடம் நகை பறித்ததை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜயகுமாரிடம் பறித்த பணத்தையும் கைப்பற்றினர்.
விசாரணையில் பல்லன் (எ) கார்த்திக் மீது ஏற்கனவே 18 திருட்டு வழக்குகள் 3 வழிப்பறி என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் மீது 3 முறை குன்டாஸ் போடப்பட்டுள்ளது. அதே போல் மற்றொரு கார்த்திக் மீதும் பல வழக்குகள் உள்ளன. இருவரையும் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி ராஜமகேஷ் உத்தரவுப்படி 2 கொள்ளையர்களையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ளது பரஞ்சேர் வழி கிராமம். இக் கிராமத்தில் தனியார் குவாரி செயல்பட்டு வருகிறது.
இங்கு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் நாயக் (23) என்பவரும் அங்கு வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது சந்தோஷ் நாயக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் அவர் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. கிருஷ்ணசாமி, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் சந்தோஷ் நாயக்கை அவருடன் வேலை பார்த்து வரும் பிஜூ ஹெம்ப்ரம் (25) என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. அவர் ஒடிசாவை சேர்ந்தவர் என்பதால் அங்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் உஷார்படுத்தப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையில் போலீசார் சோதனை செய்த போது கேரளாவில் இருந்து ஒடிசா செல்லும் டன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டி பாத் ரூமில் பதுங்கி இருந்த பிஜூ ஹெம்ப்ரம் கைது செய்யப்பட்டார்.
அவர் காங்கயம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்