search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிற்படுத்தப்பட்டோர்"

    முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #Cabinetapproves #10pcreservation #economicallybackward
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

    இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா ஒன்றை தாக்கல் செய்யவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளையுடன் முடிவடையவுள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை இதற்காக மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கவும் மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Cabinetapproves #10pcreservation #economicallybackward #generalcategory
    ×