என் மலர்
நீங்கள் தேடியது "ஐஎஸ் பயங்கரவாதிகள்"
- முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.
- இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜரில் நாட்டில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜரில், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள கொகரவ் நகரத்திற்கு உட்பட்ட பம்பிடா என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மசூதியை சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 13 பேர் படுக்கையமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் அருகிலுள்ள சந்தை மற்றும் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

ஆனால் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்தையடுத்து 3 நாட்கள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நைஜர், மாலி மற்றும் புர்கினா பசோ ஆகிய 3 நாடுகளும் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக அல்கொய்தா உள்ளிட்ட ஜிகாதி கிளர்ச்சிக் குழுக்களால் நடத்தப்படும் கிளர்ச்சியை ஒடுக்க போராடி வருகிறது.
- பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அனைத்து மாநில போலீசாரிடமும் இருக்கும்.
- சென்னையில் அதிகாரிகள் உஷாராக செயல்பட்டிருந்தால் 4 பேரும் சென்னை விமான நிலையத்திலேயே பிடிபட்டிருப்பார்கள்.
இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராத்துக்கு விமானத்தில் பறந்த 4 பயங்கரவாதிகளையும் சென்னையில் உள்ள அதிகாரிகள் கோட்டை விட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அனைத்து மாநில போலீசாரிடமும் இருக்கும்.
இது போன்ற நபர்களை தமிழகத்தில் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணிப்பார்கள்.
குறிப்பாக இலங்கையில் இருந்து சென்னை வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் அனைவருமே யார்-யார்? என்கிற கண்காணிப்பு எப்போதுமே தீவிரமாக நடைபெறும். அப்படி இருக்கும் போது சென்னையில் உள்ள அதிகாரிகள் 4 பயங்கரவாதிகளையும் பிடிக்காமல் கோட்டை விட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.
இலங்கையில் இருந்து வந்த பயங்கரவாதிகள் 4 பேரும் நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். பின்னர் விமான நிலையத்திலேயே பயணிகளோடு பயணிகளாக 7 மணி நேரம் வரை காத்திருந்துள்ளனர். பின்னர் மாலை 6 மணி அளவில் அகமதாபாத் செல்லும் விமானத்தில் ஏறி குஜராத்துக்கு சென்று உள்ளனர். அப்போதுதான் அம்மாநில போலீசார் மடக்கி பிடித்து உள்ளனர்.
சென்னையில் அதிகாரிகள் உஷாராக செயல்பட்டிருந்தால் 4 பேரும் சென்னை விமான நிலையத்திலேயே பிடிபட்டிருப்பார்கள். அதிகாரிகள் 4 பயங்கரவாதிகளையும் பிடிக்காமல் கோட்டைவிட்டது பற்றியும் பாதுகாப்பு குறைபாடு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப்படைகளை எதிர்த்து போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணி என்கிற அமைப்பும், அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்கிற புதிய அமைப்பை உருவாக்கின.
2013-ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் வலுப்பெற்ற இந்த அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் ஈராக்கிற்குள் நுழைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலுஜா, மொசூல் ஆகிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 30 ஆயிரம் வீரர்கள் அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.
ஆனால் ஈராக், சிரியாவில் இதன் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் உலகம் முழுவதும் தங்கள் அமைப்பை ஏற்படுத்தும் ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
சமீபத்தில் நிகழ்ந்த இலங்கை பயங்கரவாதி தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மாநிலத்தையே நிறுவியுள்ளதாக ஐ.எஸ். அமைப்பினர் சமிபத்தில் தெரிவித்திருந்தனர். இது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்காசியாவில் உள்ள முக்கிய நாடுகளில் காலூன்ற நினைக்கும் இந்த அமைப்புக்கு ’ஐ.எஸ்.ஐ.எஸ். கோராசான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முஹம்மத் அமைப்பின் தலைவனான பயங்கரவாதி ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கடந்த முதல் தேதியன்று அறிவித்தது.
இதைதொடர்ந்து, தெற்காசிய நாடுகளில் தலைதூக்கி வருவதாக நம்பப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கிளைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களின் மூலம் சுமார் 150 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததால் இந்த அமைப்புக்கு சர்வதேச தடை விதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கமும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஒன்றே என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இதுகுறித்து பழம்பெரும் ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டரும், பா.ஜனதா மூத்த தலைவருமான இல.கணேசன் கூறியதாவது:-

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பாராட்டி இருக்கிறார். பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு நேரில் சென்று பாராட்டினார். அழகிரி விவரம் தெரியாமல் பேசி இருப்பாரா என்பது சந்தேகம்.
ஆர்.எஸ்.எஸ்.ஐ. குற்றம் சாட்டுவது போல் குற்றம் சாட்டி ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை புகழுவதற்காக அப்படி பேசி இருக்கலாம்.
இஸ்லாமிய சமுதாயத்தை பார்த்ததும் சில தலைவர்கள் நிலைதடுமாறுவார்கள். கமலும் அப்படி தடுமாறியதன் விளைவுதான் அவரது அர்த்தமற்ற பேச்சு.
மகாத்மா காந்தியை கொன்றவர் கோட்சேதான். அதற்கு புலனாய்வு அவசியமில்லை. சுட்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டார். அவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர். அதை ‘இந்து’ என்ற வார்த்தையை நினைவு படுத்தினால் தான் கோட்சே நினைவுக்கு வருவாரா?
அப்படியானால் காந்தி யார்? அவரும் நல்ல இந்து தானே! கோட்சே பற்றி மட்டும் இந்து என்ற வார்த்தையை சேர்ப்பது ஏன்? இது பொருத்தமற்ற வார்த்தை. சூடான ஐஸ்கிரீம் என்பதுபோல் இந்து ஒரு போதும் பயங்கரவாதி ஆக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
2013-ன் இறுதிக்கட்டம் அது. மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப்படைகளை எதிர்த்து போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணி என்கிற அமைப்பும், அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்கிற புதிய அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2014 தொடக்கத்தில் இருந்து ஈராக்கிற்குள் நுழைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலுஜா, மொசூல் ஆகிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 30 ஆயிரம் வீரர்கள் அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.
ஆனால் ஈராக், சிரியாவில் இதன் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் உலகம் முழுவதும் தங்கள் அமைப்பை ஏற்படுத்தும் ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
சமீபத்தில் நிகழ்ந்த இலங்கை பயங்கரவாதி தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மாநிலத்தையே நிறுவியுள்ளதாகக் கூறியுள்ளனர் ஐ.எஸ். அமைப்பினர். இது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய கிளைக்கு அரபு பெயர் "ஹிந்த் இன் வாலே" என பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியாவின் அமாம் நியூஸ் ஏஜென்சி இதனை தெரிவித்துள்ளது. இந்த கூற்றை ஒரு மூத்த ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி நிராகரித்தார்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த சண்டையின்போது வீட்டினுள் திடீரென குண்டு வெடித்து சிதறியது. அதிரடிப்படை தாக்குதலை சமாளிக்க முடியாமல், உள்ளே இருந்தவர்கள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது. குண்டுவெடித்ததில் வீட்டிற்குள் இருந்த 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். இந்த மோதல் காரணமாக கல்முனை பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. #SriLankaAttacks #ISIS
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அவர்களிடம் இருந்து ஐஎஸ் கொடிகள், தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் மற்றும் அவர்களின் பிரசார சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் தரப்பில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளவத்தை ரெயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #SriLankaAttacks #ISIS
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2017-ம் ஆண்டு பிற்பகுதியில் அங்கு தோற்கடிக்கப்பட்டு விட்டனர். இருப்பினும் அவர்களை முழுமையாக ஒடுக்கி விட முடியவில்லை.குறிப்பாக ஈராக்கின் கிழக்குப்பகுதியில் தியாலா மாகாணத்தில் இன்னும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த மாகாணத்தின் தலைநகரான பாகுபா நகரில் இருந்து 2 கி.மீ. வட கிழக்கில் உள்ள ஹாவ்த் அல் வக்ப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாதுகாப்பு படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், 7 பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் ராணுவம், மாகாண அதிரடி போலீஸ் படையினர், துணை ராணுவத்தினர் கூட்டாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சாலையோரங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன. இந்த தகவல்களை மாகாண கவுன்சில் பாதுகாப்பு குழு தலைவர் சாதிக் அல் உசைனி உறுதி செய்தார்.
லண்டனில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேறினர். மூவரும் சிரியா சென்று ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தனர். ஷமீமா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நெதர்லாந்து நபரை மணந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்து, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறந்தன.
அதன்பின்னர் சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சிலர் சரண் அடைந்தனர். அப்பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதில் ஷமீமா பேகமும் ஒருவர் ஆவார்.
இதற்கிடையே அகதிகள் முகாமில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷமீமா பேகத்துக்கு குழந்தை பிறந்ததாக கடந்த பிப்ரவரி 19ம் தேதி அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் ஷமீமா பேகத்தின் பிரிட்டன் குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து ஷமீமா பேகத்தின் தந்தை அலி கூறியிருப்பதாவது:
ஷமீமாவின் குடியுரிமையை ரத்து செய்வது முறையான நடவடிக்கை அல்ல. தவறு செய்வது மனிதர்களின் இயல்பு. நாம் அனைவரும் தவறுகள் செய்கிறோம். என் மகளின் இந்த செயலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஷமீமா தானாக சிரியாவிற்கு செல்ல முற்படவில்லை. ஐஎஸ் இயக்கத்தில் இணைய மூளை சலவை செய்யப்பட்டுள்ளது. தவறான வழிகாட்டுதலால் இவ்வாறு செய்துவிட்டாள். முன்னதாக குடியுரிமையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக உள்துறை அதிகாரிகளிடம் இருந்து கடிதம் வந்தது. அதில் ஷமீமா இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஷமீமா பேகத்தை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும். அவள் தவறு செய்திருந்தால் நாட்டிற்கு அழைத்து வந்து, அதன்பிறகு விசாரணை நடத்தி தண்டனை வழங்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #ISISMillitants #ShamimaBegam