என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக்கில் மரண தண்டனை
Byமாலை மலர்28 May 2019 9:41 PM IST (Updated: 28 May 2019 9:41 PM IST)
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
பாக்தாத்:
சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியா அரசு சுட்டுக் கொன்றது. பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் பலர் அண்டை நாடான ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களில் கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவால் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்ட சிலரில் 12 பேர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக பாக்தாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், கெவின் கோனோட், லியோனார்ட் லோபெஸ், சலிம் மச்சாவ் உள்ளிட்ட 4 பேருக்கு சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மேலும் 2 பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு இன்று மரண தண்டனை விதித்து பாக்தாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்மூலம் மொத்தம் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×