search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141087"

    சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் 22 பேரும் விடுதலையானது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். #RahulGandhi #SohrabuddinSheikh ##SohrabuddinEncountercase
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பிடிபட்ட சொராபுதீன் சேக் குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி கவுசர், உதவியாளர் துல்சி பிரஜாபதி ஆகியோரும் கொல்லப்பட்டனர். இது போலி என்கவுண்ட்டர் என்று புகார் கூறப்பட்டதால் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் மும்பை சி.பி.ஐ. கோர்ட்டு, குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக கூறி 22 பேரையும் விடுதலை செய்தது.

    இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில், “யாரும் கொலை செய்யவில்லை... ஹரென் பாண்ட்யா, துல்சி பிரஜாபதி, லோயா, பிரகாஷ் தோம்ப்ரே, ஸ்ரீகாந்த் கண்டல்கர், கவுசர், சொராபுதீன் சேக், அவர்கள் வெறுமனே இறந்துவிட்டார்கள்” என்று கூறியுள்ளார். #RahulGandhi #SohrabuddinSheikh #SohrabuddinEncountercase
     
    ×