search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிச்சடி"

    காலை மற்றும் மாலை நேரங்களில் சாப்பிட ரவா கிச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - ஒரு கப்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - 2,
    பச்சைப் பட்டாணி - அரை கப்,
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
    தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்,
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
    பட்டை - சிறு துண்டு,
    கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று,
    நெய், எண்ணெய், உப்பு - சிறிதளவு.



    செய்முறை :

    ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும்.

    தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி, 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.

    சூப்பரான ஸ்பைசி ரவா கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரை மற்றும் பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கிச்சடி எளிமையாக செய்யக்கூடியது மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    அரிசி - 1 1/2 கப்
    பருப்பு - 1 கப்
    சீரகம் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நெய் - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 1 டம்ளர்



    செய்முறை  :

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள்.

    அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும்.

    இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 10 முதல் 12 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்கவும்.

    இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறினால் பசலைக் கீரை கிச்சடி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று தினை, காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை - 1 கப்
    கேரட், பீன்ஸ், பட்டாணி - தேவையான அளவு
    தக்காளி - 1
    முருங்கை இலை - 1 கைப்பிடி
    இஞ்சி விழுது - சிறிதளவு
    எலுமிச்சை - ½ டீஸ்பூன்
    முந்திரி - 10
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    தினையை வெறும் கடாயில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    காய்கறிகள், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முருங்கை கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், முந்திரி, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய கேரட், பீன்ஸ், தக்காளி, இஞ்சி விழுது, முருங்கை இலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, 2 கப் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் தினை சேர்த்து, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்.

    சத்தான தினை வெஜிடபிள் கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலை, மாலை நேரத்தில் சாப்பிட சேமியா வெஜிடபிள் கிச்சடி சூப்பராக இருக்கும். இன்று இந்த கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 1 கப்,
    பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    பச்சை மிளகாய் - 5,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    நெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - ருசிக்கு.

    தாளிக்க:

    கடுகு - 1 டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை:

    சேமியாவை 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்து கொள்ளவும்.  

    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீதமுள்ள நெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகள், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து காய்கறி வேகும் வரை வதக்குங்கள்.

    காய்கறிகள் சற்று வதங்கியதும் 3 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் சேமியாவை சேர்த்து, பெரிய தீயில் 2 நிமிடம் வைத்து தீயைக் குறைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சேமியா வெஜிடபிள் கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு - ஒரு கப்,
    பச்சை பயறு - அரை கப்,
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
    பச்சை மிளகாய் - 2
    தோல் சீவிய இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நெய் - 2 டீஸ்பூன்
    தண்ணீர் - 4 கப்,
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :


    நெய் - ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்



    செய்முறை :


    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பை நன்கு கழுவி, சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற விடவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டவும்.

    பாசிப்பருப்பை கழுவி பத்து நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்.

    கம்பை மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும்.

    குக்கரில் நெய் விட்டு உருக்கியதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

    அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    பிறகு அரைத்த கம்பு, பாசிப்பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.

    அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து கிளறி மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.

    வாணலியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கிச்சடியின் மேலே ஊற்றி கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கம்பு கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடியை காலை, மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு - ஒன்று
    பச்சை பட்டாணி - கைப்பிடியளவு,
    ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - கைப்பிடியளவு,
    கேரட் துண்டுகள் - கைப்பிடியளவு,
    உப்பு - தேவையான அளவு,
    பச்சை மிளகாய் - 3 (இரண்டாக கீறவும்),
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
    வறுத்த வேர்க்கடலை - 5 டீஸ்பூன்,
    மாதுளை முத்துக்கள் - சிறிதளவு,
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    நெய்யில் வறுத்த முந்திரி - 10.

    தாளிக்க :

    நெய் - 3 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்,
    மிளகு - கால் டீஸ்பூன்.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணி, ஸ்வீட் கார்னை வேகவைத்து கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டவும்.

    வாணலியில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், ஜவ்வரிசி சேர்த்து வதக்கவும்.

    பிறகு அதனுடன் உப்பு, காய்கறிகள் சேர்த்து கிளறி மூடி சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடம் வேக விடவும்.

    பிறகு மூடியை திறந்து எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

    கடைசியாக வறுத்த வேர்க்கடலை, மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சாபுதானா கிச்சடி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×