என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 146005
நீங்கள் தேடியது "வாசன்"
புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த நெல் ஜெயராமன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், தமாகா தலைவர் வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #RIPNelJayaraman #MKStalin #GKVasan
சென்னை:
நெல் ஜெயராமன் உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன், தமிழிசை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நெல் ஜெயராமன் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான பயணச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். மகனின் கல்விச் செலவையும் ஏற்றுள்ளார். #RIPNelJayaraman #MKStalin #GKVasan
திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 50. அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நெல் ஜெயராமன் உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன், தமிழிசை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தேனாம்பேட்டையில் பகல் 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்பின்னர் நெல் ஜெயராமன் உடல் அவரது சொந்த ஊருக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
நெல் ஜெயராமன் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான பயணச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். மகனின் கல்விச் செலவையும் ஏற்றுள்ளார். #RIPNelJayaraman #MKStalin #GKVasan
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகளின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #Tamilmaanilacongress #GKvasan
தஞ்சாவூர்:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் 2 தேசிய கட்சிகளின் (காங்கிரஸ்- பா.ஜனதா) சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் இந்த தேசிய கட்சிகளை இனிமேல் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு 10 நாட்கள் கால அவகாசம் கேட்டது ஏற்புடையதல்ல.
அதேபோல 14-ந் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு கால அவகாசம் வழங்கியது வருத்தம் அளிக்கிறது. 4 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு ஏன் கொடுக்கவில்லை? என்று கோர்ட்டு கேள்வி கேட்காதது ஏமாற்றமாக உள்ளது.
விவசாயிகளின் உயிர் பிரச்சனை முக்கியம் அல்ல. கர்நாடக தேர்தல் தான் முக்கியம் என்று மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காலம் தாழ்த்தாமல், சட்டத்தை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடிய உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை திணிக்க நினைப்பது ஏற்புடையதல்ல. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் எதிர்ப்போம். விவசாயிகளுடன் இணைந்து போராடுவோம்.
அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தை தமிழக அரசு ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். நீட் தேர்வு குழப்பத்திற்கு சி.பி.எஸ்.இ.யின் நிர்வாக திறமையின்மை தான் காரணம்.
த.மா.கா.வை வலுப்படுத்த வேண்டும் என்று கிராமங்கள் தோறும் 2 கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். 3-வது கட்ட சுற்றுப்பயணம் அடுத்த மாதம்(ஜூன்) 2-வது வாரத்தில் தொடங்கப்படும். தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilmaanilacongress #GKvasan

×

X