என் மலர்
நீங்கள் தேடியது "மனைவி பணம் கொடுக்க மறுப்பு"
திருபுவனை:
திருபுவனை அருகே பி.எஸ். பாளையம் தோப்பு தெருவை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (வயது 42). கூலித்தொழிலாளி. இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் .
குடிப்பழக்கம் உள்ள மண்ணாங்கட்டி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் சுமதி குடும்பத்தை நடத்த அங்குள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார்.
அந்த பணத்தையும் மது குடிக்க கேட்டு மண்ணாங் கட்டி அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்வார். பணம் தராவிட்டால் கோபித்துக்கொண்டு வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கி விட்டு 2 நாட்களுக்கு பிறகு மண்ணாங்கட்டி வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
சம்பவத்தன்று அதுபோல் மண்ணாங்கட்டி மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால், சுமதி பணம் தாரததால் மண்ணாங்கட்டி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என கருதி மண்ணாங்கட்டியை சுமதி தேடவில்லை.
இந்த நிலையில் நேற்று பழைய வீட்டுக்கு சென்று சுமதி பொருட்கள் எடுக்க சென்ற போது, அங்கு கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் குருபாதம், (வயது54), கூலித்தொழிலாளி. இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கத்தினால் குருபாதத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்ற குருபாதத்தை இனிமேல் மதுகுடிக்க கூடாது டாக்டர்கள் அறிவுரை கூறியதோடு மீண்டும் மதுகுடித்தால் அது உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று எச்சரிக்கை செய்து இருந்தனர்.
ஆனால் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய குருபாதம் மீண்டும் மதுகுடிக்க தொடங்கினார். நேற்று மதுகுடிக்க குருபாதம் தனது மனைவி பரமேஸ்வரியிடம் பணம் கேட்டார். ஆனால் பரமேஸ்வரி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் விரக்தி அடைந்த குருபாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பல்லடம்:
பல்லடம் செம்மிபாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 49). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி பாப்பாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கணவரை விட்டு பிரிந்து பாப்பாள் குழந்தைகளுடன் சூலூரில் உள்ள ராசிபாளையத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் அதே பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். சந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிக்க பணம் கேட்டு ஜோதிமணியை அடிக்கடி தொந்தரவு செய்தார். நேற்றும் காலை குடித்து விட்டு வந்த சந்திரன் ஜோதிமணியிடம் மீண்டும் குடிக்க பணம் கேட்டார். பணம் ஏதுவும் இல்லை என்று கூறிய ஜோதிமணி கடைக்கு சென்று விட்டார். கடைக்கு சென்று சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சந்திரன் சாணிப்பவுடர் குடித்து வாயில் மஞ்சள் நிற நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த ஜோதிமணி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.