என் மலர்
முகப்பு » slug 148013
நீங்கள் தேடியது "க்விட்"
ரெனால்ட் நிறுவத்தின் க்விட் ஹேட்ச்பேக் மாடலைத் தழுவி உருவாகும் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #Renault
ரெனால்ட் நிறுவத்தின் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் க்விட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.
புதிய எம்.பி.வி. கார் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய கார் இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படும் ரெனால்ட் எம்.பி.வி. காரின் சில அம்சங்கள் தெரியவந்துள்ளது.
புகைப்படம் நன்றி: Zigwheels
வெளிப்புற வடிவமைப்பின் படி, புதிய எம்.பி.வி. மாடல் வழக்கமான ரெனால்ட் வாகனங்களை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. காரின் முன்பக்கம் க்விட் மாடலில் உள்ளதை போன்றே ஸ்டிரெட்ச் செய்யப்பட்ட க்ரோம் கிரில் வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் மெல்லிய டையர்களும், காரின் பின்புறம் டெயில் லைட்கள் பூட் லிட் வரை நீள்கிறது.
காரின் உள்புறம், க்விட் சார்ந்த எம்.பி.வி மாடலில் இன்டகிரேட் செய்யப்பட்ட ஹெட்ரெஸ்ட்கள், மேனுவல் டே/நைட் ரியர்வியூ மிரர், ஏ.சி. வென்ட்களின் அருகில் கான்டிராஸ்ட் ஸ்டிட்ச் செய்யப்பட்டுள்ளது (இது டேஷ்போர்டு நீளத்திற்கு முழுமையாக நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது).
புகைப்படம் நன்றி: Zigwheels
மற்ற அம்சங்களை பொருத்த வரை க்விட் சார்ந்த எம்.பி.வி. மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பவர் வின்டோக்கள், டூயல்-சோன் ஏ.சி. கன்ட்ரோல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
புதிய ரெனால்ட் எம்.பி.வி. மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (க்விட் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று) வழங்கப்படலாம். இந்த என்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்கியூ, 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
×
X