search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 148159"

    திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது. திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும்.
    திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது. திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும்.

    அதிலும் எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.

    ஞாயிறுக்கிழமை - எலுமிச்சை சாதம்
    திங்கட்கிழமை - தேங்காய் சாதம்
    செவ்வாய், புதன்கிழமை - தக்காளி, கீரை சாதம்
    வியாழன், வெள்ளிக்கிழமை - பொங்கல் சாதம்
    சனிக்கிழமை - புளியோதரை
    திருப்பதி பிரம்மோற்சவ விழா தொடக்க நாளான 13-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை 6 நாட்கள் மொத்தம் 16 லட்சத்து 16 ஆயிரம் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. #Tirupati #Brahmotsavam
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அன்னதானத்திட்ட அதிகாரி வேணுகோபால் கூறியதாவது:-

    பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம், குடிநீர், மோர், காபி, டீ, பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. திருமலையில் உள்ள தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் தினமும் காலை 8 மணியில் இருந்து இரவு 12 மணிவரை அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இதுதவிர திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 1,2,3,4 ஆகியவற்றில் நிரந்தரமாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருமலையில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிகள் அருகில், தரிசன கவுண்ட்டர்கள், நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகள், திருப்பதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் கதம்பம், சாம்பார், தயிர், புளிசாதம், உப்புமா ஆகிய உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆக மொத்தம் பிரம்மோற்சவ விழாவையொட்டி தினமும் 1 லட்சம் பக்தர்களுக்குமேல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    பிரம்மோற்சவ விழா தொடக்க நாளான 13-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை 6 நாட்கள் மொத்தம் 16 லட்சத்து 16 ஆயிரம் பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. கருடசேவை அன்று 5 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்களுக்கு உணவும், 3 லட்சம் மோர் பாக்கெட்டுகளும், 3 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. தினமும் 10 டன் காய்கறிகளை பக்தர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    13-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை 7 நாட்களாக மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 826 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். #Tirupati #Brahmotsavam

    திண்டுக்கல் புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு 900 ஆடுகள், 2000 கோழிகளை பலியிட்டு விடிய விடிய அன்னதானம் நடந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், சங்கங்கள், வெளியூர் பிரமுகர்கள் ஆகியோர் செபஸ்தியாருக்கு ஆடுகள், கோழிகள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கினர்.

    அவ்வாறு மக்கள் காணிக்கையாக வழங்கிய 2 ஆயிரம் கோழிகள், 900 ஆடுகள், 130 மூடை அரிசிகள் ஆகியவற்றைக் கொண்டு நேற்று மதியம் உணவு சமைக்கப்பட்டது.

    மாலையில் தேவாலயத்தில் புனிதரின் மன்றாட்டு ஜெபம், வேண்டுதல் பூஜைக்கு பிறகு சமபந்தி விருந்து தொடங்கியது. மாலையில் தொடங்கிய இந்த அன்னதானம் விடிய விடிய நடைபெற்றது.

    இதில் திண்டுக்கல் நகரில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உணவு அருந்தினர். மேலும் தங்கள் வீடுகளுக்கும், உணவினை வாங்கிச் சென்றனர்.

    சமையல் செய்யும் பணியில் நூற்றுக்கணக்கான சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர். ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் இந்த அன்னதானத்தில் கலந்து கொண்டதுடன் செபஸ்தியாரையும் வழிபட்டுச் சென்றனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கையில், புனித செபஸ்தியாருக்கு தங்கள் குறைகள் மற்றும் வேண்டுதல் குறித்து பக்தர்கள் மன்றாடினால் அது நிச்சயம் நிறைவேறும். அவ்வாறு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய செபஸ்தி யாருக்கு பக்தர்கள் அடுத்த ஆண்டு திருவிழாவின் போது தங்களால் இயன்ற காணிக்கையை வழங்குவர். அவ்வாறு பக்தர்கள் வழங்கும் காணிக்கை பொருட்களை கொண்டே உணவு தயாரித்து அனைவருக்கும் வழங்கி வருகிறோம்.

    ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையின் அளவு அதிகரித்து வருவதில் இருந்தே இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    ×