search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை"

    குழந்தை கடத்தலின் பின்னணியில் மாபியா கும்பல் இருக்கிறது. போலீசார் இதை கண்டுகொள்வதில்லை என்று ரஜினி குற்றம்சாட்டியுள்ளார். #Rajini
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘தயா பவுண்டேசன்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் சார்பில் திருவான்மியூரில் குழந்தைகளுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் குழந்தை கடத்தல் தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை என்றும் போலீசார் இந்த வி‌ஷயத்தை கண்டுகொள்ளாமலேயே இருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

    நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஜினி பேசிய பேச்சு வருமாறு:-

    குழந்தைகளின் நிம்மதியை பெரியவர்கள்தான் கெடுக்கிறார்கள். வீட்டில் தொடங்கி, பள்ளிக்கூடம், சமுதாயம் வரையில் குழந்தைகளின் நிம்மதியை கெடுத்துக் கொண்டே உள்ளனர்.

    அழகான பூக்களாக திகழும் குழந்தைகள் நாட்டின் எதிர்காலம். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளுக்காக தீட்டப்படும் திட்டங்கள் சரியாக உள்ளன. இதற்காக பணம் செலவழிக்கிறார்கள்.

    ஆனால் நமது மத்திய - மாநில அரசுகளுக்கு குழந்தைகள் மீது அக்கறை இல்லை. குழந்தைகளை எந்த அரசாங்கமும் சரியாக கவனிக்கவில்லை. அப்படி கவனிக்காத நாடு எப்படி நல்ல நாடாக இருக்கும்.

    குழந்தைகள் நலனுக்காக எனது மனைவி இந்த அறக்கட்டளையை தொடங்கி உள்ளார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களும் இதனை கையில் எடுத்துள்ளன.

    அரசாங்கத்தை நம்பி பிரயோஜனம் இல்லாத காரணத்தால்தான் பெரிய முதலாளிகள் குழந்தைகள் நலன் காக்கும் திட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.

    இதற்காக லதா செய்திருக்கும் காரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகாது. ரஜினியின் மனைவி லதா என்று சொல்லி கொண்டிருக்கும் காலம் போய், இனி லதாவின் கணவர் ரஜினி என்று சொல்லும் காலம் வரவேண்டும். உண்மையிலேயே இது மிகப்பெரிய சேவையாகும்.

    ‘குழந்தைகளுக்கு அமைதி’ என்ற அமைப்பை தொடங்க வேண்டும் என்பது லதாவின் நீண்ட கால கனவாக இருந்தது. அது இன்று நனவாகி உள்ளது.

    சாலைகளில் பிச்சையெடுக்கும் பிள்ளைகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று உன்னை பிச்சை எடுக்க வைப்பது யார்? என்று விசாரணை நடத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும். இதனை போலீசார் கண்டு கொள்வதே இல்லை.

    குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதன் பின்னணியில் மிகப்பெரிய மாபியா கும்பலே உள்ளது. அரசாங்கமும், போலீசும் இவர்களை கவனிப்பதே இல்லை. சமூகம் கூட அவர்களை பார்த்துக்கொண்டு அப்படியே சென்று விடுகிறது.

    குழந்தைகளை கடத்திச்சென்று அவர்களின் முகவரியை அழித்து தாய் - தந்தை இல்லாத அநாதைகளாக ஆக்கி விடுகிறார்கள். இதுபோன்ற குழந்தைகள் பிச்சைக்காரர்களாக, கிரிமினல்களாக, நோயாளிகளாக மாறி வாழ்க்கை முழுவதும் செத்து கொண்டே இருக்கிறார்கள்.

    இது எவ்வளவு பெரிய குற்றம். கொலை குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்களோ? அதே தண்டனையை குழந்தைகளை கடத்தும் மாபியாக்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
    சென்னையில் தயா பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற விழிப்ப்ணர்வு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், குழந்தைகள் தான் இந்தியாவின் எதிர்காலம் என தெரிவித்தார். #DhayaFoundation #Rajinikanth #LathaRajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், ‘தயா’ பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனருமாக லதா ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இவர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்ட அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

    குழந்தைகள் மீது அதிக பிரியம் உடையவர் லதா. குழந்தைகளுக்கு நிம்மதி வேண்டி இந்த சேவையை துவங்கி இருக்கிறார். குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம்.

    பூமியில் நடமாடும் பூக்கள் குழந்தைகள். மேற்கத்திய நாடுகள் குழந்தைகளுக்கு அதிக நிதியை செலவு செய்கின்றனர். குழந்தைகள் நலனை மத்திய அரசும் கவனிக்கவில்லை, மாநில அரசும் கவனிக்கவில்லை.

    சாலைகளில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை அழைத்துச் சென்று யார் இவ்வாறு செய்கிறார்கள் என்று போலீசார் விசாரணை நடத்துவதில்லை. குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது கொலை செய்வதைவிட பெரிய குற்றம்.

    குழந்தைகளை பிச்சையெடுக்க வைக்கும் செயலுக்கு பின் ஒரு பெரிய மாஃபியா இருக்கிறது. குழந்தையை பிச்சையெடுக்க வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் புதிய செயலியை நடிகர் ரஜினிகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். #DhayaFoundation #Rajinikanth #LathaRajinikanth 
    சென்னையில் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. #Chennai #IMD
    சென்னை:

    வருடந்தோறும் அக்டோபர் 20-ம் தேதியில் வடகிழக்கு பருவ மழை துவங்கும். ஆனால் இந்த வருடம் சற்று தாமதாக துவங்க இருக்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு  மைய இயக்குனர் பாலச்சந்திரன் தென்மேற்கு மத்திய வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு வலுப்பெற இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 2 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை துவங்கும் எனவும் கூறியிருந்தார்.

    இந்நிலையில், சென்னையில் இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இன்று (புதன்கிழமை) பகல் நேரத்தில் மிதமான வெயில் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் செய்தி நிறுவனத்தின் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Chennai #IMD
    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை குறைந்தது குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை குறைந்தது குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.

    ஏற்கனவே, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறிவந்தார். இந்த எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. மேலும், பழைய உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளவும் உறுப்பினர்கள் புதுப்பிப்பு பணியும் நடைபெற்றது.

    ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, டி.டி.வி.தினகரன், திவாகரன், ஜெ.தீபா ஆகியோர் தலைமையில் புதிய அணிகள் உருவானதால், எதிர்பார்த்த அளவுக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை நடத்த முடியவில்லை. இதனால், உறுப்பினர்கள் சேர்க்கைக்கான காலக்கெடு அதிகரிக்கப்பட்ட போதிலும், அந்தப் பணி மந்தகதியிலேயே நடைபெற்றது.

    நேற்று முன்தினம் வரை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பழைய உறுப்பினர்கள் புதுப்பிப்பு என 90 லட்சம் பேர் மட்டுமே அ.தி.மு.க.வில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த 1½ கோடி தொண்டர்களில் இருந்து பெரும் பாலானவர்கள் விலகியதை கேட்டு, அ.தி.மு.க. தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

    இந்த நிலையில்தான், அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், உறுப்பினர்கள் சேர்க்கை குறைந்தது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கருத்து கேட்க இருக்கின்றனர். அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை அ.தி.மு.க. தலைமை எடுக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
    புதுச்சேரி மற்றும் கோவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார்கள் உள்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #FakeATMCard
    புதுச்சேரி:

    ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மரை பொருத்தி வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டில் உள்ள தகவல்களை திருடி போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து அவர்களது வங்கிகணக் கில் இருந்து பணத்தை ஒரு கும்பல் மோசடி செய்தது. இது குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் என்ஜினீயர் பாலாஜி, டாக்டர் விவேக் ஆனந்தன், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்ளிட்ட 11 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்தியால்பேட்டையை சேர்ந்த சந்துருஜியை வலைவீசி தேடிவருகின்றனர். சமீபத்தில் சமூக வலைதளத்தில், தனக்கும் இந்த மோசடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் சந்துருஜிக்கும் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியை சேர்ந்த பீட்டர் (வயது 38) என்பவருக்கும் தொடர்பு இருப்பதும், இவர்தான் சந்துருஜியின் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. மரைன் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்திவருகிறார்.

    கோவையை சேர்ந்த பட்டதாரியான தினேஷ் (33) என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் அழகுநிலையம் நடத்திவரும் இவரும், பீட்டரும் சந்துருஜியிடம் இருந்து ஸ்வைப்பிங் மெஷின்களை வாங்கி சட்டவிரோதமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    மேலும் சென்னை கொளத்தூரை சேர்ந்த இர்பான் ரகுமான் (34) என்பவருக்கும் இந்த மோசடி வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் சென்னை வடபழனியில் விமான டிக்கெட் வாங்கித்தரும் ஏஜென்சி நடத்திவருகிறார். இந்த வழக்கில் இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பீட்டரிடம் இருந்து ரூ.2 லட்சம், லேப்டாப் மற்றும் 5 ஏ.டி.எம். கார்டுகள், தினேஷிடமிருந்து சொகுசு கார் ஒன்றும், இர்பான் ரகுமானிடமிருந்து அதிநவீன சொகுசு கார் ஒன்றும், 4 லேப்டாப், 3 வங்கி காசோலை புத்தகங்கள், 2 வங்கி கணக்கு புத்தகம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி.

    கோவையிலும் இதேபோல போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், கிருஷ்ணகிரியில் ஒரு ஓட்டல் அருகில் ஏ.டி.எம். மோசடி கும்பலை சேர்ந்த 6 பேரை மடக்கிப்பிடித்தனர். கைதானவர்கள் விவரம் வருமாறு:-

    நவசாந்தன் (29), உத்தண்டி, சென்னை. இலங்கை திரிகோணமலையை சேர்ந்த இவர் இலங்கை அகதியாக வந்து தங்கியிருந்தார். நிரஞ்சன் (38), கானத்தூர், சென்னை. தமிழரசன் (26), வசீம் (30), இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கிஷோர் (25), திருச்சி, மனோகரன் (19), திருப்பூர் அனுப்பர்பாளையம்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கோவையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, வாடிக்கையாளர்களின் ரூ.19 லட்சத்தை சுருட்டியது தெரியவந்தது. இந்த கும்பல் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்று லட்சக்கணக்கில் சுருட்டியுள்ளனர்.

    கைதானவர்களில் சென்னையை சேர்ந்த நிரஞ்சன், நவசாந்தன் ஆகியோர் தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணர்கள். போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பதில் இவர்கள் முக்கியமாக செயல்பட்டுள்ளனர். இந்த கும்பலுக்கு நவசாந்தன் மூளையாக செயல்பட்டுள்ளார். பி.எம்.டபிள்யூ. உள்பட சொகுசு கார்கள், 2 லேப்டாப், 17 செல்போன்கள், 20 போலி ஏ.டி.எம். கார்டுகள், 40 கிராம் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 6 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். 
    நடிகர் எஸ்.வி. சேகரை தேடப்படும் நபராக அறிவித்து சென்னை நகரம் முழுவதும் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
    சென்னை:

    நடிகர் எஸ்.வி. சேகர் சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

    அவர் மீது பொது அமைதியை சீர் குலைத்தல், அவதூறு பரப்புதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் போலீசார் மேற் கொள்ளவில்லை.

    கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் முன் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கில் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல எஸ்.வி. சேகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகும் எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீசார் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    முன்ஜாமீன் கிடைக்காததால் அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. எஸ்.வி. சேகரை கைது செய்யாததற்கு அவரது உறவினர் ஒருவரின் தலையீடே காரணம் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் எஸ்.வி.சேகர் போலீசாருக்கு சவால் விடும் வகையில் 2 நாட்களுக்கு முன்பு சென்னை பாண்டி பஜாரில் நடந்த விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார். ஆனாலும் அவரை போலீசார் கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நடிகர் எஸ்.வி. சேகரை தேடப்படும் நபராக அறிவித்து சென்னை நகரம் முழுவதும் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. மக்கள் மன்றத்தினர் இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளனர். மயிலாப்பூர் பகுதியில் இந்த சுவரொட்டி அதிகமாக ஒட்டப்பட்டுள்ளன. அவருக்கு எதிரான வாசகங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. #SVeShekher
    ×