search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராவணன்"

    ராவணனுக்கு சிவபெருமானால் பரிசளிக்கப்பட்ட பிறை வடிவ வாளின் பெயர் தான் ‘சந்திரஹாஷம்’. எதற்கான இந்த சந்திரஹாஷம் ராவணனுக்கு வழங்கப்பட்டது என்று பார்க்கலாம்.
    ராவணனுக்கு சிவபெருமானால் பரிசளிக்கப்பட்ட பிறை வடிவ வாளின் பெயர் தான் ‘சந்திரஹாஷம்’.

    ஒருமுறை ராவணன் தனது புஷ்பக விமானத்தில் பறந்து சென்றுகொண்டிருந்தான். அவன் சென்ற வழியில் தான் சிவபெருமான் வசிப்பிடமான கயிலாய மலை இருந்தது. தன் பாதையில் குறுக்கிட்ட மலையை, தன் பலத்தால் தூக்க முற்பட்டான், ராவணன். ஆனால் சிவபெருமான் தன்னுடைய பெருவிரலால் அந்த மலையை அழுத்த, மலையின் அடியில் சிக்கிக்கொண்டான் ராவணன். அதில் இருந்து அவனால் விடுபடமுடியவில்லை.

    ஆயிரம் ஆண்டுகள் அவன் அந்த மலையின் அடியில் வதைபட்டான். ஒரு கட்டத்தில் ராவணன் தனது பத்து தலைகளில் ஒன்றைக் கிள்ளி, தன் நரம்புகளை எடுத்து தலையோடு இணைத்து வீணை செய்தான். அதில் சாம கானம் இசைத்தான். அந்த இசையில் மயங்கிய சிவபெருமான், அவனை விடுவித்ததுடன், ‘சந்திரஹாஷம்’ என்ற வாளை பரிசளித்தார்.

    அப்போது, ‘இந்த வாளை அநீதிகளுக்கு பயன்படுத்தக் கூடாது’ என்று எச்சரிக்கவும் செய்தார். ஆனால் சீதையைக் கடத்திச் சென்றபோது, ராவணனைத் தடுத்த ஜடாயுவை, சந்திரஹாஷ வாள் கொண்டு ராவணன் வெட்டினான். அதனால் அந்த வாள், சிவபெருமானிடமே திரும்பிச் சென்று விட்டது.
    ×