என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் சாதனை"

    • 2021-ல் நெதர்லாந்தின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    • அர்ஜென்டினா வீராங்கனை பெரு அணிக்கெதிராக 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    இந்தோனேசியா- மங்கோலியா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி பாலியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தோனேசியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை நந்தா சகாரினி 61 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் மங்கோலியா 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் இந்தோனேசியாவிள் இளம் வீராங்களை ரொமாலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 24 ரன்னில் சுருண்டது. தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார் ரொமாலியா. மொத்தமாக 3.2 ஓவர்கள் வீசி ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் ஏழு விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இது அவருக்கு முதல் சர்வதேச போட்டியாகும்.

    இதற்கு முன்னதாக 2021-ல் நெதர்லாந்தின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஃப்ரெடெரிக் ஓவர்டிஜ் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியிருந்தது சாதனையாக இருந்தது. அர்ஜென்டினாவின் அலிசன் ஸ்டாக்ஸ் பெரு அணிக்கெதிராக 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
    • அயர்லாந்து ஒரு பந்து மீதம் வைத்து இலக்கை எட்டி சாதனைப் படைத்தது.

    பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முதல் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசியது. கேப்டன் பாபர் அசாம் (57), சாய்ம் ஆயூப் (45) இப்திகார் அகமது (37) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஆண்டி பால்பிரைன் ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாடினார். மறுபக்கம் விக்கெட்டுகள் விக்கெட்டுக்கள் சரிந்தது. பால்பிரைன் 55 பந்தில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் அயர்லாந்து 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பற்றது. ஹாரி டெக்டர் 36 ரன்களும், ஜார்ஜ் டக்ரெல் 24 ரன்களும் எடுத்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி அயர்லாந்து சாதனைப் படைத்துள்ளது.

    • ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
    • மார்ட்டின் கப்தில் 2-வது இடத்திலும், நிக்கோலஸ் பூரன் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று குவாலியரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய வங்கதேசம் 127 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. சஞ்சு சாம்சன் 19 பந்தில் 29 ரன்கள், அபிஷேக் சர்மா 7 பந்தில் 16 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 14 பந்தில் 29 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 16 பந்தில் 39 ரன்கள் அடிக்க 11.5 ஓவரிலேயே இந்தியா வெற்றி பெற்றது.

    சூர்யகுமாயர் யாதவ் ஸ்கோரில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். 3 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த முதல் ஐந்து பேர் பட்டியலில் நுழைந்துள்ளார். இந்த மூன்று சிக்சர்களுடன் 139 சிக்சர்கள் அடித்து 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஜோஸ் பட்லர் 137 சிக்சர்களுடன் ஐந்தாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார் மார்ட்டின் கப்தில் 173 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், நிக்கோலஸ் பூரன் 144 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    • நியூசிலாந்து அணிக்கெதிரான 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.
    • மொத்தமாக இதுவரை 46 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    பெண்களுக்கான டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 148 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 88 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஸ்கட் 3.2 ஓவர்கள் வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இதன்மூலம் அவர் டி20 உலகக் கோப்பையில் 46 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், பெண்கள் டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவின் ஷப்னின் இஸ்மாயில் 43 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்தின் அன்யா ஷ்ருப்சோல் 41 விக்கெட்டும், ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி 40 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளன.

    மேகன் ஸ்கட் 26 போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்தின் முதல் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சாதனைப் படைத்தார்.

    • அதிவேக சதம் பட்டியலில் இரண்டாவது இடம்.
    • 17 ஆட்டநாயகன் விருது வென்று சாதனை.

    ஜிம்பாப்வே- காம்பியா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது 344 ரன்கள் குவித்தது. பின்னர் காம்பியா 54 ரன்னில் சுரண்டு 290 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

    இந்த போட்டியில் ஜிம்பாப்வே பல சாதனைகள் படைத்தது. டி20 வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை பெற்றது. அந்த அணியின் கேப்டனாக சிகந்தர் ராசாவில் பல சாதனைகள் படைத்தார்.

    33 பந்துகளில் சதம் விளாசிய அவர், டி20-யில் அதிவேகமாக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார்.

    அத்துடன் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் வீருது வென்றார். இது அவருக்கு 17-வது ஆட்ட நாயகன் விருதாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விராட் கோலி, வீரன்தீப் சிங், சூர்யகுமார் யாதவ் சாதனையை முறியடித்துள்ளார்.

    • டி காக் 22 வயது 312 நாட்களில் 8 சதங்கள் அடித்து சாதனை.
    • சச்சின் 22 வயது 357 நாட்களிலும், விராட் கோலி 23 வயது 27 நாட்களிலும் அடித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு ஷார்ஜாவில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. ரஹ்மனுல்லா குர்பாஸ் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். அஸ்மதுல்லா ஓமர்ஜாய் 77 பந்தில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் குர்பாஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 8 சதங்கள் அடித்துள்ளார்.

    குர்பாஸ்க்கு நேற்றுடன் 22 வயது 357 நாட்கள் முடிவடைந்தது. இதன்மூலம் இளம் வயதில் 8 சதங்களை நிறைவு செய்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

    தென்ஆப்பிரிக்காவின் டி காக் 22 வயது 312 நாட்களில் 8 சதங்கள் அடித்திருந்தார். இதன்மூலம் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    சச்சின் தெண்டுல்கர் 22 வயது 357 நாட்களிலும், விராட் கோலி 23 வயது 27 நாட்களிலும், பாபர் அசாம் 23 வயது 280 நாட்களிலும் 8 சதங்களை எட்டியிருந்தனர்.

    அதிக சதங்கள் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறார். முகமது ஷேசாத் 6 சதங்கள் அடித்துள்ளார். குர்பாஸ் வங்கதேசத்திற்கு எதிராக 3 சதங்கள் அடித்துள்ளார். மேலும் ஷார்ஜா மைதானத்தில் நேற்றைய சதம் அவரின் 3-வது சதம் ஆகும்.

    • சமிந்தா வாஸ் 355 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    • லசித் மலிங்கா 101 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 44 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் மார்க்கிராம் (20), 4-வது வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (4) ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரா வீழ்த்தினார்.

    இந்த இரண்டு விக்கெட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 101 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய 5-வது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    முன்னதாக சமிந்தா வாஸ் (355), சுரங்கா லக்மல் (171), லசித் மலிங்கா (101), தில்கரா பெர்னாண்டோ (100) ஆகிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் 100 விக்கெட் அல்லது அதற்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.

    இலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேரா முதல்தர போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் டபுள் செஞ்சூரி அடித்து அரிய சாதனையை படைத்துள்ளார்.
    கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலோ அல்லது நான்கு நாட்கள் கொண்ட உள்ளூர் முதல்தர போட்டியிலோ இரண்டு இன்னிங்சிலும் இரட்டை சதம் அடிப்பது அரிதான விஷயமாகும்.

    1938-ம் ஆண்டு கவுன்ட்டி கிரிக்கெட்டில் கென்ட் அணி பேட்ஸ்மேன் ஆர்தர் ஃபாக் முதல் இன்னிங்சில் 244 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 202 ரன்களும் குவித்திருந்தார். இதன்மூலம் இரண்டு இன்னிங்சிலும் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற அரிய சாதனையைப் படைத்தார்.

    தற்போது இலங்கையைச் சேர்ந்த ஏஞ்சலோ பெரேரா சிங்களேஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 203 பந்தில் 201 ரன்கள் விளாசினார். 2-வது இன்னிங்சில் 268 பந்தில் 231 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 81 வருட அரிய சாதனையை பெரேரா சமன் செய்துள்ளார்.
    நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து பந்து வீச்சாளர் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். #CricketRecord
    நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான ‘ஃபோர்டு டிராபி’யில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் - சென்டிரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகள் மோதின. நார்தன் அணியின் ஜோ கார்ட்டர், பிரெட் ஹாம்ப்டன் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

    சென்டிரல் அணியின் வில்லெம் லடிக் தனது கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஹாம்ப்டன் பவுண்டரி அடித்தார். அடுத்த இரண்டு பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இரண்டு பந்துகளும் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்தார்.



    கடைசி மூன்று பந்துகளையும் கார்ட்டர் சிக்சருக்கு தூககினார். இதனால் வில்லெம் லடிக் 43 ரன்கள் வாரிக்கொடுத்து ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் வங்காள தேசத்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற டாக்கா ப்ரீமியர் லீக்கில் அலாவுதீன் பாபு 39 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. ஜிம்பாப்வேயின் கேப்டன் எல்டர் சிகும்புரா ஏழு பந்தில் நான்கு சிக்சர்ஸ், மூன்று பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
    ×