என் மலர்
நீங்கள் தேடியது "அவமானம்"
கோவை ஜி.எஸ்.டி. இயக்குனரகம் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்.29 முதல் நவ.3 வரை அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஊழலை ஒழிப்போம்; நாட்டை உயர்த்துவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஜி.எஸ்.டி அலுவலக அரங்கில் நடந்தது.
இதில் சென்னை அறிவியல் நகர துணைத்தலைவரான ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் கலந்து கொண்டு பேசியதாவது:-
அரசு நிர்வாக பொறுப்பில் இருந்து கொண்டு நேர்மையாக இருப்பது என்பது எளிதான காரியமல்ல. நேர்மையானவர்கள் நிராகரிப்பு, புறக்கணிப்பு, இடமாற்றம் உள்ளிட்ட பல எதிர்மறை விளைவுகளுக்கு தயாராகவே இருக்க வேண்டும். அரசுத்துறையில் நேர்மையானவர்கள் இல்லை என்று கூறிவிட முடியாது. பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
நம் நாட்டில் ஊழல் என்பது ஆழமாக பரவி விட்டது. அதை அழிக்க வேண்டியது இளைஞர்களின் கடமை, ஊழலை எதிர்த்த போதெல்லாம் நான் அவமானப்படுத்தப்பட்டேன். தூக்கியடிக்கப்பட்டேன். இருந்தும் என் கடமையிலிருந்து நான் விலகவில்லை. ஆய்வு ஒன்றின்படி 92 சதவீத இந்திய மக்கள் வாழ்வின் ஏதோ ஒரு சமயத்தில் ஏதோ காரணங்களுக்காக லஞ்சம் கொடுத்துள்ளார்கள். உலக நாடுகளில் ஊழல் அதிகம் அரங்கேறும் நாடுகளுக்கான ஆய்வு பட்டியலில் இந்தியா 81-வது இடத்தில் உள்ளது.
இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். பள்ளி பாடபுத்தகத்தில் ஊழல் ஒழிப்பு குறித்து பாடங்களை சேர்க்க வேண்டியது அவசியம். நேர்மை என்ற கலாச்சாரத்தை ஆரம்பத்திலேயே விதைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஊழல் ஒழிப்பை மையமாக கொண்டு கட்டுரை, ஸ்லோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜி.எஸ்.டி.கமிஷனர் ஸ்ரீனிவாசராவ், கமிஷனர் (தணிக்கை) குமரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். #IASOfficer #Sagayam
உலக கோப்பை கால்பந்து போட்டியில் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1-1 என்ற கோல் கணக்கில் குட்டி தேசமான ஐஸ்லாந்துடன் டிரா கண்டது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார்.

இந்த ஆட்டம் குறித்து அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கருத்து தெரிவிக்கையில்,
‘ஐஸ்லாந்து அணியுடன் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன். மெஸ்சி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது தான் வெற்றி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று நினைக்கவில்லை. எதிரணிக்கு தகுந்த படி ஆட்ட யுக்தியை அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் அமல்படுத்தவில்லை. இந்த மாதிரி தொடர்ந்து விளையாடினால் அர்ஜென்டினா அணி நாடு திரும்ப முடியாது’ என்றார். #DiegoMarodona #Argentina
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே வடுகப்பட்டி சேடப்பட்டியை சேர்ந்தவர் சங்கனமுத்து. இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி அப்பகுதியில் உள்ள கார் ஷோரூம்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
அதே கம்பெனியில் திண்டுக்கல் சின்னாள பட்டியை சேர்ந்த தேவி (வயது32) என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளனர். தேவிக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்ததால் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பல்வேறு இடங்களுக்கு காதல் ஜோடியினர் தனிமையில் சென்றுள்னனர். இந்த விவகாரம் கம்பெனி உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்.
இதனால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி பெரியகுளம் அருகே வடுகபட்டி- தாமரைக்குளம் சாலையில் உள்ள தென்னந் தோப்பிற்கு வந்தனர். கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானம் அடைந்த 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி தோப்பில் இருந்த மோட்டார் ரூம்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று காலை அப்பகுதியில் சென்றவர்கள் காதல் ஜோடி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேர் உடலையும் கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.