search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏழுகிணறு"

    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் ஏழுகிணறு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.
    • ரத்த வெள்ளத்தில் தந்தை கிடந்ததை வீடியோ எடுத்து ரோகித் தனது மாமாவுக்கு அனுப்பி உள்ளார்.

    சென்னை ஏழுகிணறு பகுதியில் தந்தையை மகன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் ஏழுகிணறு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஜெகதீஷை அவரது மகன் ரோகித் இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் தந்தை கிடந்ததை வீடியோ எடுத்து ரோகித் தனது மாமாவுக்கு அனுப்பி உள்ளார்.

    இதையடுத்து தந்தையை கொலை செய்த வழக்கில் ரோகித்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனது தாயை தந்தை அடித்துக் கொடுமைப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த ரோகித் அவரை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஏழுகிணறு பகுதியில் செல்போன்கடை ஊழியரை வெட்டி ரூ.60 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    ஏழுகிணறு பெரியண்ணா தெருவில் செல்போன் மொத்த வியாபார கடை வைத்திருப்பவர் ஜாபர்.

    இந்த கடையில் ஏழுகிணறு ஆனைக்கார தெருவைச் சேர்ந்த ரபீக்கான் (34) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மொத்த கடையில் இருந்து மற்ற கடைகளுக்கு செல்போன்கள் வினியோகிக்கப்படுகின்றன.

    இந்த கடைகளில் பணம் வசூல் செய்வதற்காக ரபீக்கான் நேற்று சென்றார். இரவு 11 மணியளவில் வசூலான பணப்பையுடன் மோட்டார் சைக்கிளில் தான் வேலைபார்க்கும் கடைக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    ஏழுகிணறு பெரியண்ணா தெருவுக்கு வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர், ரபீக்கானை வழிமறித்தனர். திடீர் என்று அரிவாளால் அவரை வெட்டிவிட்டு அவரிடம் இருந்த பணப்பையை பறித்து சென்றனர். இதில் அவரது கை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். இதற்குள் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் பறித்துச்சென்ற பையில் ரூ.60 லட்சம் வசூல் பணம் இருந்தது.

    இதுகுறித்து ஏழுகிணறு போலீசில் புகார் செய்யப்பட்டது. அரிவாளால் வெட்டப்பட்ட ரபீக்கான் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கொள்ளை சம்பவம் குறித்து ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ரூ.60 லட்சத்தை கொள்ளையடித்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஏழுகிணறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×