search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலிகிராமம்"

    சாலிகிராமத்தில் கார் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம் ஸ்டேட் பாங்க் காலனி 1-வது தெருவைச் சேர்ந்தவர் அபிமன்யூ. கார் டிரைவர். மனைவி குழந்தையுடன் வசித்து வந்த அபிமன்யூ கடந்த சில நாட்களாக மன நலம் பாதிக்கப்படு அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று தீடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொண்டார். அலறி துடித்த அபிமன்யூவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சாலிகிராமத்தில் தொழில் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 6 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    அசோக் நகர் 48-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், தொழில் அதிபர். இவர் புதியதாக கார் வாங்குவதற்காக ரூ. 6 லட்சம் எடுத்துக் கொண்டு மற்றொரு காரில் சென்றார்.

    சாலிகிராமம் கே.கே.சாலையில் உள்ள ஒரு கடைக்கு செல்வதற்காக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு சென்றார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.

    காரின் பின்பக்க இருக்கையில் இருந்த ரூ. 6 லட்சத்துடன் சூட்கேஸ் திருடு போய் இருந்தது. அதில் விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் ஐபோன் ஆகியவையும் இருந்தன.

    இது குறித்து விருகம்பாக்கம் போலீசில் சண்முகசுந்தரம் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சூட்கேசை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

    அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×