என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கருணைக்கொலை"
- ஆபத்தான நிலையில் இருந்த 26 திமிங்கலங்கள் கரையில் மூச்சு விடமுடியாமல் இறந்தன.
- திமிங்கலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலிய கடற்கரையில் சிக்கித் தவிக்கும் 100க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்ற கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியில் கரை ஒதுங்கிய 26 பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.
ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில்
160 பைலட் திமிங்கலங்கள் இன்று காலை கரை ஒதுங்கியுள்ளன. ஆபத்தான நிலையில் இருந்த 26 திமிங்கலங்கள் கரையில் மூச்சு விடமுடியாமல் இறந்தன.
மீதமுள்ள திமிங்கலங்களை மீட்டு கடலில்க்ஷ விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு திமிங்கலம் கரையில் தவறுதலாக மாட்டிக் கொண்ட நிலையில் அடுத்தடுத்து திமிங்கலம் வரிசையாக கரையில் சிக்கி இருக்கலாம் என அந்நாட்டில் கடல்வாழ் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
- தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவில் லெர்மிட் கோரிக்கை விடுத்தார்.
- கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த ஜெனிவில் லெர்மிட் கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது வக்கீல் நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தினார்.
பிரஸ்சல்ஸ்:
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் ஜெனிவில் லெர்மிட் (வயது58). நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த இவர் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தனது 5 குழந்தைகளை கொலை செய்தார்.
3 முதல் 14 வயது வரை உள்ள ஒரு மகன் மற்றும் 4 மகள்களை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றார். பின்னர் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 5 குழந்தைகளை கொன்ற ஜெனிவில் லெர்மிட்டுக்கு 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் 2019-ம் ஆண்டு மனநல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவில் லெர்மிட் கோரிக்கை விடுத்தார். பெல்ஜியத்தில் தாங்க முடியாத உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டால் கருணைக்கொலை முடிவை ஒரு நபர் தேர்ந்தெடுக்க அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது.
கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த ஜெனிவில் லெர்மிட் கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது வக்கீல் நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'ஜெனிவில் லெர்மிட், அவர் செய்த கொலைகளின் 16-வது நினைவு நாளில் அவரது விருப்பத்தின்படி கருணைக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பல்வேறு கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகே கருணைக்கொலை செய்யப்பட்டார்' என்றார்.
இவ்வழக்கின் விசாரணையின்போது, ஜெனிவில் லெர்மிட் மனநல டாக்டரை தவறாமல் சந்தித்து வந்தார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் சிறைக்கு அனுப்பக்கூடாது என்றும் அவரது வக்கீல்கள் வாதிட்டனர். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்