என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளிக்கல்வித்துறை"
- 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி இறுதித்தேர்வு தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
- பெற்றோரின் வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரிப்பதால் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதித்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குவதாக இருந்த இறுதித்தேர்வு முன்கூட்டியே ஏப்ரல் 7-ந்தேதி தொடங்குகிறது. தற்போது இறுதித்தேர்வை ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி இறுதித்தேர்வு தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு அக்டோபர் மாதம் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.
- கடந்த மாத சம்பளம் இதுவரையில் கிடைக்காததால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை:
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு அக்டோபர் மாதம் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு மாதமும் இறுதி வேலை நாளில் சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஆனால் கடந்த மாத சம்பளம் இதுவரையில் கிடைக்காததால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி கல்வி இணை இயக்குனர் நரேஷ் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (இடை நிலை) ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பள்ளி கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக 42 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை மாவட்ட கல்வி அலுவலகம் கட்டுப்பாட்டில் புதிதாக மாற்றம் செய்யப்பட்ட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லா பணியாளர்கள் விவரங்கள் சார்ந்த புதிய மாவட்ட கல்வி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் ஊதியம் பெற்று வழங்கும் வகையில் இணையத்தில் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன.
எனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் (இடைநிலை) தங்கள் கட்டுப்பாட்டில் புதிதாக சேர்ந்துள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லா பணியாளர்களின் சம்பள பட்டியலை கருவூலத்தில் அல்லது சம்பள கணக்கு அலுவலகத்தில் உடனடியாக சமர்பித்து ஊதியம் பெற்று வழங்க வேண்டும்.
இதில் எவ்வித கால தாமதமும் ஏற்படக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் மேற்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சார்பாக 30.9.2022க்கு முன்னர் பட்டியல் ஏதேனும் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- காமராஜர் ஆட்சி காலத்தில்தான் ஆரம்ப பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மிக அதிக அளவில் தொடங்கப்பட்டன.
- அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
சென்னை:
இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தராபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக பள்ளி கல்வித்துறை அலுவலக வளாகத்தில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பெயரை அலங்கார வளைவிற்கு வைப்பதும், வளாகத்தில் அவரது உருவ சிலை வைப்பதும் மட்டுமே மிகப்பொருத்தமாக இருக்கும். காமராஜர் ஆட்சி காலத்தில்தான் ஆரம்ப பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மிக அதிக அளவில் தொடங்கப்பட்டன. அது மட்டுமில்லாது அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த மிக முக்கியமான கோரிக்கையை ஆராய்ந்து, ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
- சிறப்பு பயிற்சி தேவைப்படும் மாணவ-மாணவிகளை இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னை:
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்துவதற்காக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற மாணவ-மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இவ்வாறு கண்டறியப்படும் மாணவ-மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பு பணி செல்போன் செயலி வாயிலாக கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்களில் இருந்து அந்த செல்போன் செயலியில் கூடுதல் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, 2022-23-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி மூலம் தொடர்ந்து 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ-மாணவிகள், பள்ளியே செல்லாத மாணவ-மாணவிகள், 8-ம் வகுப்பு முடிக்காமல் இடைநிற்கும் மாணவ-மாணவிகள் ஆகியோரை அடையாளம் காண வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல், வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடத்தப்பட வேண்டும் என்றும், இதில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறிய வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. வீடு வாரியான கணக்கெடுப்பில், குறிப்பாக ரெயில் நிலையம், பஸ் நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசை பகுதிகள், கடலோர மாவட்டங்களில் உள்ள கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். இந்த பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர்கள், கிராமப்புற செவிலியர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள் உள்பட சிலர் ஈடுபட இருக்கின்றனர். இதற்கான கணக்கெடுக்கும் களப்பணி வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியிருக்கிறார்.
மேலும், பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும். சிறப்பு பயிற்சி தேவைப்படும் மாணவ-மாணவிகளை இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிகளில் சேர்க்கப்பட்டவுடன் அவர்களின் விவரங்களை கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (எமிஸ்) பதிவு செய்யவேண்டும் போன்ற உத்தரவுகளும் அதில் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன.
- விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்புகள் பள்ளிக்கல்வி ஆணையரிடம் வலியுறுத்தின.
- விடுமுறை நாட்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் மற்றும் சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்த நிலையில், விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்புகள் பள்ளிக்கல்வி ஆணையரிடம் வலியுறுத்தின.
இதையடுத்து விடுமுறை நாட்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், ஆடியோ மூலமாக இந்த செய்தியை ஆசிரியர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.
- அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.
- மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆணையர் அறிவித்துள்ளார்.
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆணையர் அறிவித்துள்ளார்.
- சென்னையில் ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
- 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
சென்னை:
தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து சென்னையில் ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த உள்ளன.
இந்நிலையில், சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூ.6.60 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
வாசர்களின் திருவிழாவில் இந்தாண்டு திருநங்கைகள் / பால்புதுமையினர் இலக்கியங்கள் இடம்பெற உள்ளதாக பா.ப.சி.-யின் செயலாளர் எஸ்.கே. முருகன் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள்.
- தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- அரசுப் பள்ளிகள் பாரத் ஸ்டேட் வங்கியில் பிரத்யேக வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- என்.எஸ்.எஸ். திட்டம் அமலில் உள்ள அரசுப் பள்ளிகள், எஸ்பிஐ வங்கியில் புதிதாக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும்.
சென்னை:
பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணி திட்டத்துக்கு (என்.எஸ்.எஸ்) மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் என்.எஸ்.எஸ். நிதியை பள்ளிகளின் வங்கிக்கணக்கிலேயே நேரடியாக செலுத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக அரசு பள்ளிகள் பாரத் ஸ்டேட் வங்கியில் பிரத்யேக வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, என்.எஸ்.எஸ். திட்டம் அமலில் உள்ள அரசுப் பள்ளிகள், எஸ்பிஐ வங்கியில் புதிதாக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும். அதன் விவரங்களை தொகுத்து இயக்குநரகத்துக்கு ஜன.20-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், இதுசார்ந்து மறு உத்தரவு வரும் வரை என்.எஸ்.எஸ். வங்கிக் கணக்குகளை எந்தக்காரணம் கொண்டும் முடிக்கக் கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆசிரியர்கள், மாணவர் வருகைப் பதிவு டி.என்.எஸ்.இ.டி. செயலி வழியாக தற்போது பதிவு செய்யப்படுகிறது.
- ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களும் செயலி வாயிலாகவே பதிவேற்றம் செய்யப்படுகிறது.
சென்னை:
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நாட்கள் விடுப்பு எடுத்து கொள்ள அனுமதி உள்ளது. தற்காலிக விடுப்பு ஆண்டுக்கு 72 நாட்களும், சம்பளத்துடன் விடுப்பு 15 நாட்களும் எடுக்கலாம்.
இது தவிர மருத்துவ விடுப்பு 5 வருடத்திற்கு 90 நாட்கள் எடுத்து கொள்ளவும் அனுமதி உள்ளது.
மருத்துவ விடுப்பை தொடர்ந்து 90 நாட்கள் எடுக்க அனுமதி இல்லை. 29 நாட்கள் தொடர்ந்து எடுத்த பிறகு மீண்டும் 2 நாட்கள் பணி செய்ய வேண்டும். இதுபோன்ற விதிமுறைகள் விடுப்பு எடுப்பதில் கடைபிடிக்கப்படுகிறது.
நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் தொடர்ந்து நீண்ட காலம் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஒரு சிலரால் பள்ளிக்கு தொடர்ந்து வர முடியாத நிலையில் உள்ளனர். ஆனால் நோய் பாதிப்பு இல்லாதவர்கள் ஒரு சிலர் நீண்ட நாட்கள் விடுப்பில் இருப்பதாக கல்வி துறைக்கு தகவல் வந்துள்ளது.
முறையான காரணம் இல்லாமல் மாணவர்களின் படிப்பை பற்றி எவ்வித கவலைபடாமல் அடிக்கடி விடுப்பு எடுக்கின்றனர்.
ஆசிரியர்கள், மாணவர் வருகைப் பதிவு டி.என்.எஸ்.இ.டி. செயலி வழியாக தற்போது பதிவு செய்யப்படுகிறது. ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களும் இந்த செயலி வாயிலாகவே பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஆனால் ஆசிரியர்கள் விடுப்பு பற்றிய முழு விவரங்கள் இதில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி விடுப்பு எடுப்பவர் நீண்ட நாட்கள் எடுப்பவர், எவ்வித தகவலும் சொல்லாமல் விடுப்பில் இருப்பவர் போன்ற தகவல்களை கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் கல்வி பற்றி கவலைப்படாமல் நீண்ட காலமாக விடுப்பில் இருக்கும் ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஒருசில ஆசிரியர்கள் சுய தொழில் விஷயமாக விடுப்பு எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வருவது இல்லை. ஆசிரியர் பணி தவிர வேறு தொழிலும் செய்வதால் அடிக்கடி விடுப்பு போடுகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் முறையான தகவலை தருவது இல்லை. அதனால் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் பற்றி சரியான தகவலை பெற வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கின்றன.
சமீபத்தில் தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்தபோது ஆசிரியர்கள் நீண்ட காலமாக விடுப்பில் இருப்பது தெரியவந்தது. முறையான தகவல் தராமல் அடிக்கடி விடுப்பு எடுத்து இருப்பதும் தெரிந்ததையொட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இனி இஷ்டத்திற்கு விடுப்பு எடுக்க முடியாது. அதற்கு முறையான காரணம், ஆவணங்கள் தேவை. நீண்ட காலம் விடுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்கவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
- ‘101 சோத்தியங்கள்' என்ற தமிழ் திரைப்படத்தை வருகிற 17-ந் தேதிக்குள் திரையிட வேண்டும்.
- ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும்.
சென்னை:
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்த மாதம் '101 சோத்தியங்கள்' என்ற தமிழ் திரைப்படத்தை வருகிற 17-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) திரையிட வேண்டும்.
இந்த திரைப்படம் கிராமத்தில் வாழும் 12 வயது சிறுவனை பற்றிய கதை ஆகும். 60-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தை கலைஞர் மற்றும் சிறந்த அறிமுக திரைப்படத்துக்கான விருதையும் இந்த படம் வென்றிருக்கிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும். அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் சிறார் திரைப்படத்தை பார்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
- நாடு முழுவதும் இன்புளூயன்சா எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு ஏப்ரல் 6-ந் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதி முடிகிறது.
அதன்பிறகு 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி ஏப்ரல் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தற்போது நாடு முழுவதும் இன்புளூயன்சா எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசும் தகுந்த பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பல்வேறு மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த வைரஸ் காய்ச்சல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையும், குழந்தைகளையும் அதிகளவில் தாக்கும் என்பதால் தெலுங்கானா மாநிலத்தில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்குகின்றன.
எனவே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாலும், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்திருப்பதாலும் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்வதாலும், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது. 24-ந் தேதி தொடங்க இருந்த தேர்வை ஒருவாரத்துக்கு முன்னதாக, அதாவது ஏப்ரல் 17-ந் தேதியே தொடங்கி 24-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.