என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியப்பன்"

    • உலக பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் தொடரில் மாரியப்பன் தங்கம் வென்றார்.
    • மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.

    சென்னை:

    மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

    உலக பாரா தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், உலக பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

    • உயிரிழந்த மாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா(11) என்ற மகளும், கதிர் நிலவன்(7) என்ற மகனும் உள்ளனர்.
    • கனிமொழி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அவரது நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார்.

    இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை 6-வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் பரவியது.இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமார் 49 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.


    இந்த தீ விபத்தில் சிக்கி கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் காயமடைந்தார். அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    மாரியப்பன் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு, அங்குள்ள உறவினர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மாரியப்பன் உயிரிழந்த தகவல் வானரமுட்டி கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தமாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா(11) என்ற மகளும், கதிர் நிலவன்(7) என்ற மகனும் உள்ளனர்.


    குவைத்தில் இருந்து கேளரா கொண்டுவரப்பட்ட உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாரியப்பனின் சடலத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் அவர்களின் இல்லத்திற்கு கனிமொழி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மாரியப்பனின் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழ்நாடு அரசின் நிவாரண நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

    • இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 84 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    • மாரியப்பன் நாடு திரும்பினார்.

    சென்னை:

    மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்தது. இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 84 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை வென்று 18-வது இடத்தை பிடித்தது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் (டி.63 பிரிவு) வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்த நிலையில் மாரியப்பன் இன்று நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மாரியப்பன், ரியோ ஒலிம்பிக்கில் (2016-ம் ஆண்டு) தங்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) வெள்ளியும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவிற்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் தமிழக தடகள வீரர் மரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. #AsianParaGames #ThangvelluMariyappan
    ஜகர்தா:

    மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 193 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், நிர்வாகிகள், மருத்துவர்கள் என்று 112 பேரும் உடன் செல்கிறார்கள்.



    தொடக்க விழாவிற்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் தமிழக தடகள வீரர் மரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த மாரியப்பன் 2016-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று வரலாறு படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, முதற்கட்டமாக ஜகர்தாவுக்கு சென்ற இந்திய குழுவினருக்கு ஆசிய போட்டிக்கான விளையாட்டு கிராமத்தில் நுழைய முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. சில மணி நேர தவிப்புக்கு பிறகே அவர்கள் உள்ளே செல்ல போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதி வழங்கினர். விளையாட்டு கிராமத்தில் நமது வீரர், வீராங்கனைகள், நிர்வாகிகள் தங்குவதற்குரிய கட்டணம் மற்றும் போட்டி கட்டணம், பதிவு கட்டணம் என்று இந்திய விளையாட்டு அமைச்சகம் ஏறக்குறைய ரூ.1¾ கோடி செலுத்த வேண்டி உள்ளது. அந்த தொகையை செலுத்தாததாலேயே இந்த சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தொகையை இன்றுக்குள் செலுத்தாவிட்டால் மறுபடியும் இது போன்ற சிக்கல் ஏற்படலாம் என்று இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் குர்ஷரன் சிங் தெரிவித்தார்.  #AsianParaGames #ThangvelluMariyappan
    ×