search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நந்தினி"

    அதிக ஊனம் என்ற காரணத்தால் மருத்துவ படிப்பு மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவி நந்தினிக்கு, நீட் தேர்வு எழுதாவிட்டாலும், மருத்துவம் படிக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. #SupremeCourt #NEET #Nanthini
    புதுடெல்லி:

    விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நந்தினி. இவரது லட்சியமான மருத்துவ படிப்புக்கு இவரது உடல் ஊனம் ஒரு தடையாக பார்க்கப்பட்டது. 80 சதவிகிதம் உடல் ஊனம் இருப்பதால் இவருக்கு மருத்துவம் படிப்பதற்கான தகுதி மறுக்கப்பட்டது.

    உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுக்களும் தொடர்ந்து நிராகரிக்கப்படவே, நம்பிக்கை இழக்காத நந்தினி உச்சநீதிமன்றத்தை நாடினார். மருத்துவம் படிக்க தனக்கு அனுமதி வழங்க வேண்டி அவர் அளித்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாணவி நந்தினிக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அவர் நீட் தேர்வு எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை எனவும், கூடுதல் இடங்களை ஏற்படுத்தியாவது நந்தினிக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. #SupremeCourt #NEET #Nanthini
    ×