search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராசிமணல்"

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்த ராசி மணல் பகுதியில் அணை வலியுறுத்தி ஒகேனக்கல்லில் நாளை விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்த ராசி மணல் பகுதியில் அணை கட்ட காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு அணை கட்ட யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் நாளை ஒகேனக்கல்லில் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

    இந்த போராட்டத்திற்கு சின்னசாமி தலைமை தாங்குகிறார். உண்ணாவிரதத்தை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தொடங்கி வைக்கிறார். நாளை மாலையில் இந்த உண்ணாவிரதத்தை பொதுச் செயலாளர் பாலாறு வெங்கடேசன் முடித்து வைக்கிறார்.

    ராசிமணல் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைக்கட்ட வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
    வாணியம்பாடி:

    ஆம்பூர் அடுத்த மின்னூர் பாலாற்றில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை மின்வாரியம் மேற்கொண்டது. இதற்கு, விவசாயிகள் சங்கமும், பாலாறு பாதுகாப்பு சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து, திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா மின்னூரில் ஆய்வு மேற்கொண்டு மின் கோபுரம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். மறுஉத்தரவு வரும் வரை பாலாற்றில் எந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன் மின்னூரில் மேற்கொள்ளப்பட்டு வந்த மின் கோபுரப் பணிகளை நேற்று பார்வையிட்டார்.

    வேலூர் மாவட்டம் பாலாற்றை நம்பி இங்கு விவசாயப் பணிகள் செய்யப்பட்டு வந்தன. பாலாற்றின் கரையோரம் இருந்த விவசாயிகள் அதிக அளவில் விவசாயம் செய்து வந்தனர்.

    போதிய மழை இல்லாததாலும், பாலாறு இருக்கும் இடம் தெரியாமல் போனது. தற்போது, பாலாற்றில் தோல் கழிவுநீர் கலக்கப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து பாலாறு படிப்படியாக அழிந்து வருகிறது. பாலாற்றை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.

    தமிழகத்தில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் எந்தவித ஆக்கிரமிப்புகளும் இருக்கக் கூடாது. இருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    தமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளன. நீர் நிலைகளை தனிநபர்கள் ஆக்கிரமித்த காலங்கள் மாறி தற்போது அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளனர். தமிழக அரசின் அனுமதி பெறாமல் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

    மின்னூர் பாலாற்றில் மின் கோபுரங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடமோ? எந்த அனுமதியும் மின்வாரியம் வாங்கவில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே, மின்னூர் பாலாற்றில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளை மின்வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கட்டுமானப் பணிகளை அகற்ற வேண்டும். அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் ஒகேனக்கல் அருகே உள்ள ராசிமணல் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்காக கடந்த 1965ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்த இடத்தில் அணைக்கட்டினால் கடலுக்கு செல்லும் நீர் தடுத்து நிறுத்தி 50 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் சேமிக்க முடியும். இதன் மூலம் அந்தந்த மாவட்டங்கள் பாசன வசதி பெறும்.

    இது தொடர்டபாக முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமியை நேரில் சந்தித்து விவசாய சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×