என் மலர்
நீங்கள் தேடியது "உளவு வேலை"
- தேசத்தின் பாதுகாப்பில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது.
- உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்வி ரவீந்திரன் தலைமையிலான பெகாசஸ் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை வெளியிட வலியுறுத்தினர்.
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உளவு பார்க்க பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தியது தொடர்பான புகார் மனுக்களை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற அமர்வு இன்று விசாரித்தது.
விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக தேசவிரோதிகளின் செல்போன்களை பெகாசஸ் மூலம் கண்காணிப்பதில் என்ன தவறு உள்ளது? அதில் எந்த தவறுமே இல்லை.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது. அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி. தனிநபர்களுக்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டால் அப்போது இந்த புகாரை பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில் விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஷ்யாம் திவான், தினேஷ் திவேதி ஆகியோர், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்வி ரவீந்திரன் தலைமையிலான பெகாசஸ் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை வெளியிட வலியுறுத்தினர்.
ஆனால் இதை மறுத்த நீதிபதிகள், தேசப்பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் அறிக்கையில் இடம் பெற்றிருந்தால் அதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது என்று கோரிக்கையை நிராகரித்தனர்.
மேலும் யார் யார் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை உச்சநீதிமன்றம் அமைத்த பெகாசஸ் தொழில்நுட்பக் குழுவிடம் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், தனிநபர் உரிமைகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
சீனாவை சேர்ந்தவர் ஜி சாக்குன் (வயது 27). அவர் மாணவர் விசாவில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவர் சிகாகோ நகரில் இல்லினாய்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்தார். 2015-ம் ஆண்டு மின் பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றார்.
அமெரிக்காவில் குடியேறுகிற பிற நாட்டினர் அங்கு ராணுவத்தில் சேர்ந்து பணி புரிய முடியும் என்பதால், ஜி சாக்குனும் 2016-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில், இவர் சிகாகோவில் கைது செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் சட்டவிரோத உளவு ஏஜெண்டாக பணியாற்றினார் என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிகாகோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கில், அமெரிக்காவில் பணியாற்றுகிற சீன என்ஜினீயர்களையும், விஞ்ஞானிகளையும் குறிப்பாக அமெரிக்க ராணுவ ஒப்பந்தக்காரர்களாக இருப்பவர்களை ஜி சாக்குன் உளவு பார்த்தார் என்று கூறப்பட்டுள்ளது. உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவருக்காகத்தான் இவர் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜி சாக்குன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் எனக்கு தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார். #ChineseNational #Spy