என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடிகன் சபை"

    • போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக ஜெமெல்லி மருத்துவமனை தெரிவித்தது.
    • போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குழந்தைகள் பலர் மருத்துவமனைக்கு வந்தனர்,

    ரோம்:

    கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவாது முதல் புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

    அதில் போப் பிரான்சிஸ் வழிபாட்டு உடைகளின் வழக்கமான ஊதா நிற ஸ்டோலை அணிந்து, மருத்துவமனை தேவாலயத்தின் பலிபீடத்திற்கு முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது காட்டப்பட்டுள்ளது.

    ஜெமெல்லி மருத்துவமனையின் 10-வது மாடியில் உள்ள போப்பாண்டவர் குடியிருப்பில் மற்ற பாதிரியார்களுடன் திருப்பலி கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார் என வாடிகன் தெரிவித்துள்ளது.

    மேலும், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குழந்தைகள் பலர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

    இதுதொடர்பாக போப் பிரான்சிஸ் கூறுகையில், எனக்காகப் பல குழந்தைகள் ஜெபிக்கிறார்கள் என்பது தெரியும். அவர்களில் சிலர் இன்று ஜெமெல்லிக்கு வந்தனர். அன்பான குழந்தைகளே நன்றி, போப் உங்களை நேசிக்கிறார், உங்களைச் சந்திக்க எப்போதும் காத்திருக்கிறார் என தெரிவித்தார்.

    • ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார்.
    • போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டி கிறிஸ்தவர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

    ரோம்:

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திவந்தார். தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

    இதற்கிடையே, ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் மருத்துவ நிலையில் முன்னேற்றம் உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வாடிகன் செய்தி தொடர்பாளர் மத்தேயு புரூனி கூறுகையில், மருத்துவ ஊழியர்களால் மதிப்பிடப்பட்ட ரத்த பரிசோதனைகள், குறிப்பாக அழற்சி குறியீடுகளில் சிறிது முன்னேற்றத்தை காட்டுகின்றன. மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனித்து வருகிறார் என தெரிவித்தார்.

    பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கல், பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை இன்று அறிவித்துள்ளது. #KeralaNun #FrancoMulakkal #Vatican
    வாடிகன்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேற்று நேரில் ஆஜரானார்.



    வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே, இன்றும் இரண்டாவது நாளாக பிராங்கோ முல்லக்கலிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை இன்று அறிவித்துள்ளது.  #KeralaNun #FrancoMulakkal #Vatican
    ×