search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேராடூன்"

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை பள்ளி நிர்வாகமே மறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Uttarakhand
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் உள்ள உறைவிடப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி மாணவர்கள் 4 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போதே இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் பள்ளியின் கவுரவம் பாதிக்கப்படும் என்பதற்காக இதனை மூடி மறைத்துள்ளனர்.

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது எனவும் மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து மாணவி தனது சகோதரியிடம் நடந்த அனைத்தையும் கூறவே, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 1 மாதத்துக்கு முன்பு நடந்த இந்த கொடூரம் இப்போதே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதையடுத்து, 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த 4 மாணவர்களையும், இந்த சம்பவத்தை மறைத்த பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #Uttarakhand
    சர்வதேச யோகா தினத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு டேராடூன் வந்தடைந்தார். #Dehradun #InternationalYogaDay #PMModi
    டேராடூன்:

    சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. யோகாவின் தாயகமான இந்தியாவில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 55,000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.  

    இந்நிலையில், பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று இரவு டேராடூன் வந்தடைந்தார். அவரை உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகை சென்ற பிரத்மர் மோடி இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Dehradun #InternationalYogaDay #PMModi
    சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர் மோடி தலைமையில் 21-ம் தேதி டேராடூன் நகரில் நடைபெறும் மாபெரும் யோகாசன நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. #InternationalYogaDay #Dehradun #PMModi

    டேராடூன்:

    நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன்பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

    இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தன்று இமாச்சலப்பிரதேசம் மாநில தலைநகரான டேராடூன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாபெரும் யோகாசன நிகழ்ச்சியை நடத்த பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 



    டேராடூன் நகரில் சுமார் 1250 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் இந்த யோகாசன நிகழ்ச்சியையொட்டி, மக்களிடையே இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணிகளை பா.ஜ.க.வினர் நடத்தி வருகின்றனர்.

    யோகாசனம் நடைபெறும் முகாம் பகுதியை தூய்மைப்படுத்தும் பணி, பிரதமர் வரும் பாதையை செப்பனிடும் பணிகள் போன்றவை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரும் 20-ம் தேதி இரவு 9 மணியளவில் டேராடூன் நகருக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். 21-ம் தேதி அதிகாலை வனத்துறை ஆராய்ச்சி மையத்துக்கு செல்லும் அவர், காலை 6.45 முதல் 7.45 மணிவரை யோகாசன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.  



    பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. பாதுகாப்பு கருதி வனத்துறை ஆராய்ச்சி மையம் 19 மற்றும் 20-ம் தேதிகளில் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    டேராடூன் நகரம் முழுவதும் போலீசார், துணை ராணுவம் மற்றும் கருப்பு பூனை படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறை ஆராய்ச்சி மையம் பகுதியில் பதாககைளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டு, டேராடூன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. #InternationalYogaDay #Dehradun #PMModi
    ஆப்கானிஸ்தான் அணி 2-வது டி20 போட்டியில் ரஷித் கானின் சிறப்பான பந்துவீச்சால் வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    டேராடூன்:

    வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடந்த முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி நேற்று டேராடூனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் தமிம் இக்பால் 43 ரன்னிலும், முஷ்பிகுர் ரகுமான் 23 ரன்னிலும்,  அபு ரைடர் ரோனி 21 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, 135 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடிய மொகமது ஷசாத் 24 ரன்களும், உஸ்மான் கனி 21 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து இறங்கிய சாமுல்லா ஷென்வாரி அதிரடியாக ஆடி 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மொகமது நபி 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதைத்தொடர்ந்து, வங்காள தேசத்துடனான டி-20 தொடரை ஆப்கானிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி, முன்னிலை வகிக்கிறது. #Afghanistan #Bangladesh #T20
    ×