search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்சங்"

    • புது ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி M சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புது ஸ்மார்ட்போன் கேலக்ஸி M05 என அழைக்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M05 மாடலில் 6.7 இன்ச் HD+ ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், ARM மாலி-G52 GPU, அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ கோர் 6 ஓஎஸ் கொண்ட புது சாம்சங் ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், எல்இடி ஃபிளாஷ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

     

    பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி M05 மாடலில் 3.5mm ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    விலையை பொருத்தவரை புதிய கேலக்ஸி M05 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மின்ட் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. விற்பனை அமேசான் மற்றும் சாம்சங் வலைதளங்கள், தேர்வு செய்யப்பட்ட ரீடெயில் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

    • ஜனவரி மாதம் வெளியாகும்போது இதன் விலை 74,999 ரூபாய் ஆகும்.
    • அமேசானில் 26 சதவீதம் தள்ளுபடியுடன் 55 ரூபாய்க்கு கிடைக்கிறது.

    அமேசான் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவெல் (Great Freedom Festival) விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 6-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி (நாளை) வரை நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில் ஸ்டார்ட்போன்களுக்கு மிகப்பெரிய அளவில் தள்ளுபடி வழங்குகிறது.

    அதன்படி சாம்சங் கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. இதனால் 55 ஆயிரம் ரூபாய்க்கு இந்த போனை வாங்கலாம்.

    சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் கடநத் ஜனவரி மாதம் இந்தியாவில் வெளியானது. சுமார் 7 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இந்த ஆஃபரை வழங்குகிறது. அறிமுகம் ஆனபோது இதன் விலை 74,999 ரூபாயாக இருந்தது.

    எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. சாம்சங் கேலக்ஸி S24 உயர்செயல்பாட்டுடன் கூடிய Exynos 2400 பிராசசர் கொண்டதாகும். 8ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. 6.2-inch FHD+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே கொண்டது. ரெப்ரேஷ் ரேட் 120Hz வரை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

    50எம்பி மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா, 10எம்பி டெலிபோட்டோ கேமரா உடன் 12எம்பி செல்பி கேமரா கொண்டதாகும். 25W வேக சார்ஜிங் சப்போர்ட் உடன் 4,000 mAh பேட்டரி கொண்டது. wireless சார்ஜிங் வசதியும் உண்டு. 

    • நிமிடத்திற்கான துடிப்புகள் மற்றும் கால அளவு போன்ற விரிவான அளவீடுகளுக்கான நேரடி இதயத் துடிப்பு சோதனையும் இதில் அடங்கும்.
    • கேலக்ஸி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி இந்த ரிங்-ஐ கண்டறிவதற்கான ஃபைண்ட் மை ரிங் அம்சம் இதில் உள்ளது.

    தினசரி நாம் செய்யும் உடற்பயிற்சிகளை கணக்கில் வைத்துக்கொள்வதற்கு தற்போது பலரால் ஆப்பிள் மற்றும் சாம்சங் கைக்கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக ஸ்மார்ட் ரிங்கை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இதன் விற்பனை வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

    தினசரி ஆரோக்கியத்திற்காக வடிவமைக்கப்பட்ட கேலக்ஸி ரிங், சாம்சங்கின் மேம்பட்ட சென்சார் தொழில்நுட்பத்தை கச்சிதமான, விவேகமான வடிவத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் பிளாக், டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

    இது 24 மணி நேரமும் உடல் நலன் கண்காணிப்பை வழங்குகிறது. 2.3 கிராம் மற்றும் 3.0 கிராம் வரை எடை கொண்டது. மேலும் ஒன்பது அளவுகளில் கிடைக்கிறது. 10ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதி கொண்டுள்ளது. இந்த ரிங்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.


    இதய துடிப்பு, சுவாசம், உறக்கம், உடல் வெப்ப அளவு ஆகியவற்றை கணக்கிடும் வகையில் AI அல்காரிதம் கொண்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.33,404-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் ஹெல்த் ஆப் மூலம் இதயத் துடிப்பு விவரங்களைப் பயனர்களுக்கு ரியல்டைமில் தெரிவிக்கும் வசசதியை கேலக்ஸி ரிங் கொண்டிருக்கிறது. நிமிடத்திற்கான துடிப்புகள் மற்றும் கால அளவு போன்ற விரிவான அளவீடுகளுக்கான நேரடி இதயத் துடிப்பு சோதனையும் இதில் அடங்கும்.



    கூடுதலாக, நடைபயிற்சி மற்றும் ஜாகிங்-ஐ கண்காணிப்பதற்கான ஆட்டோ ஒர்க்அவுட் கண்டறிதல், தினசரி உடற்பயிற்சி நினைவூட்டல்களுக்கான நோட்டிபிகேஷன் வழங்குகிறது. இதில் புகைப்படங்களை எடுப்பது அல்லது அலாரங்களை நிராகரிப்பது போன்ற செயல்பாடுகளுக்கான சைகை கட்டுப்பாடுகள் உள்ளன.

    கேலக்ஸி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி இந்த ரிங்-ஐ கண்டறிவதற்கான ஃபைண்ட் மை ரிங் அம்சம் இதில் உள்ளது.

    • 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
    • இதில் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், இரு மாடல்களின் முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி Z போல்டு 6 மாடலில் வெளிப்புறம் 7.6 இன்ச், உள்புறம் 6.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 12MP, 50MP மற்றும் 10MP பிரைமரி கேமரா சென்சார்கள், 10MP செல்பி கேமரா மற்றும் 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 12MP+50MP பிரைமரி கேமரா, 10MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    விலை விவரங்கள்:

    கேலக்ஸி Z ப்ளிப் 6 (12ஜிபி+256ஜிபி) ரூ. 1,09,999

    கேலக்ஸி Z ப்ளிப் 6 (12ஜிபி+512ஜிபி) ரூ. 1,21,999

    கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+256ஜிபி) ரூ. 1,64,999

    கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+512ஜிபி) ரூ. 1,76,999

    கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+1டிபி) ரூ. 2,00,999

    புதிய கேலக்ஸி Z சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஜூலை 24 ஆம் தேதி துவங்குகிறது.

    • கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு மாலை 6.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
    • கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி ரிங் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி இந்த ஆண்டின் இரண்டாவது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது.

    வழக்கம்போல இந்த நிகழ்வும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளம், யூடியூப் சேல் உள்ளிட்டவைகளில் ஸ்டிரீம் செய்யப்படும். இந்திய நேரப்படி கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு மாலை 6.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

     


    இந்த நிகழ்ச்சியில் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 6, கேலக்ஸி Z ப்ளிப் 6, கேலக்ஸி வாட்ச் 7, கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா, கேலக்ஸி பட்ஸ் 3, கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி ரிங் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது.

    கேலக்ஸி ரிங் மாடல் இந்திய சந்தையில் ரூ. 35 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்தை டிராக் செய்யும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் ப்ளூடூத் 5.4 மற்றும் ஒன்பது வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • குறைந்த பட்சம் ரூ. 199 விலை கொண்ட சலுகையை ரிசார்ஜ் செய்ய வேண்டும்.
    • இந்த ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போனின் ஏர்டெல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஏர்டெல் எடிஷன் மாடலில் பயனர்கள் ஏர்டெல் சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். புது ஸ்மார்ட்போனை குறிப்பிட்ட சிம் கார்டு மட்டும் பயன்படுத்துவதற்காக வாங்கும் போது அதன் விலை சற்றே குறைகிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி F15 5ஜி மாடலுக்கு ரூ. 750 தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது. பயனர்கள் இதனை ஸ்மார்ட்போன் வாங்கி, 50 ஜி.பி. இலவச டேட்டா பெறும் முன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்துடன் குறைந்த பட்சம் ரூ. 199 விலை கொண்ட சலுகையை ரிசார்ஜ் செய்வது அவசியம் ஆகும்.

    புது ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போசு ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போனை ரூ. 11 ஆயிரத்து 249 விலையில் வாங்கிட முடியும். இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ. 12 ஆயிரத்து 999 ஆகும்.

    கேலக்ஸி F15 5ஜி மாடலில் ஏர்டெல் சிம் லாக் செய்யப்பட்டுள்ள போதிலும், பயனர்கள் 18 மாதங்களுக்கு பிறகு ஏர்டெல் தவிர்த்து இதர சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், சாதனத்தில் மாற்றம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இவ்வாறு செய்வதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

    இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ sAMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யுஐ 6, 50MP பிரைமரி கேமரா, 13MP செல்பி கேமரா, 6000mAh பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவை அறிமுகம்.
    • ஆப்பிள் நிறுவன அறிவிப்பை எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.

    உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள், சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC) நிகழ்வில் அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த வரிசையில், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவையை அறிமுகம் செய்தது.

    இதோடு, தனது நிறுவன சாதனங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவைகள் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட இருப்பதாகவும் அறிவித்தது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை உலகின் மிகப்பெரிய பணக்கராரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.

    இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக ஸ்மார்ட்போன் துறையில் களமிறங்குவீர்களா என்ற எக்ஸ் பயனரின் கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்தார். எக்ஸ் பயனர் ஒருவர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து, "எக்ஸ் தளத்திற்கென ஆப்டிமைஸ் செய்யப்பட்ட செயலிகள், ஓபன் சோர்ஸ் ஓ.எஸ். மற்றும் ஸ்டார்லின்க் இண்டகிரேஷன் வசதி கொண்ட எக்ஸ் போனை சாம்சங் மூலம் உற்பத்தி செய்வீர்களா" என குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், "இது சம்பந்தமில்லாத கேள்வி ஒன்றும் கிடையாது," என பதில் அளித்துள்ளார். எலான் மஸ்க் அளித்திருக்கும் இந்த பதில் காரணமாக எதிர்காலத்தில் எக்ஸ் பிராண்டிங் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தை கடுமையாக வசைபாடிய எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்," என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மற்றொரு நிகழ்வில் மடிக்கக்கூடிய சாதனங்களையும் அறிமுகம் செய்கிறது.
    • சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்.

    சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு விழாவில்- ஒருமுறை சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களும், மற்றொரு நிகழ்வில் மடிக்கக்கூடிய சாதனங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

    இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில், இந்த ஆண்டிற்கான அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 10 ஆம் தேதி பாரிஸ் நகரில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரப்பூர்வ பார்டனராக சாம்சங் நிறுவனம் இருக்கிறது. அந்த வகையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இரு வாரங்களுக்கு முன்பு கேலக்ஸி அன்பேக்டு நிகவ்வை நடத்த சாம்சங் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    சாம்சங்கின் இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்த முறை வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் தவிர கேலக்ஸி Z ஃபோல்டு FE மற்றும் Z ஃப்ளிப் FE மாடல்கள் சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவற்றுடன் கேலக்ஸி ரிங் சாதனத்தின் விலை விவரங்கள் இந்த நிகழ்வில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக இந்த சாதனம் கேலக்ஸி S24 அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்பட்டு, 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.
    • கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாக அமைந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் மேம்பட்ட ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. மேலும், புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்கான விளம்பர வீடியோ ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது.

    இந்த வீடியோவில் கணினிகள், லேப்டாப்கள், பெயிண்ட், இசை கருவிகள் என கலை சார்ந்த பொருட்கள் அனைத்தையும் அழகாக அடுக்கி வைத்து, அவற்றை ராட்சத நசுக்கு இயந்திரம் கொண்டு நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விளம்பர வீடியோவுக்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.

    ஐபேட் ப்ரோ மாடலுக்கான ஆப்பிள் விளம்பர வீடியோ தொடர்பான சர்ச்சை சற்று ஓய்ந்துள்ளது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் ஐபேட் ப்ரோ விளம்பர விவகாரத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஆப்பிள் வெளியிட்ட வீடியோவுக்கு பதில் அளிக்கும் வகையிலும், கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாகவும் அமைந்துள்ளது.

    சாம்சங் தற்போது வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், கீழே உடைந்து இருக்கும் ஏராளமான பொருட்களில் பெண் ஒருவர் இசைக்கருவியை எடுத்து வந்து இருக்கையில் அமர்கிறார். பிறகு அருகில் உள்ள டேப் ஒன்றில் இசைக்கருவியை இயக்கும் குறிப்புகளை பார்த்துக் கொண்டே இசைக்கருவியை வாசிக்க ஆரம்பிக்கிறார்.

    வீடியோவில் அந்த பெண் பயன்படுத்தும் டேப்லெட் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் மாடல் ஆகும். இந்த வீடியோ முடிவில் கிரியேடிவிட்டியை நசுக்கிவிட முடியாது (creativity can never be crushed) எனும் வாசகமும் இடம்பெறுகிறது. இத்துடன் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடலும் காண்பிக்கப்படுகிறது. சாம்சங் வெளியிட்ட புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


    • 7 மாடல்களின் விலை குறைந்த பட்சம் 600 டாலர்கள் ஆகும்.
    • மூன்று இடங்களை ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆகும்.

    உலகளவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்டியலில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. 2024 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஸ்மார்ட்போன் வினியோகம் தொடர்பாக கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி இந்த காலாண்டு வாக்கில் விற்பனைான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் 5ஜி கனெக்டிவிட்டி இடம்பெற்றிருந்தது. மேலும், பயனர்கள் பிரீமியம் சாதனங்களை அதிகளவில் வாங்க துவங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்களில் 7 மாடல்களின் விலை குறைந்த பட்சம் 600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 50 ஆயிரத்து 90) என துவங்கின.

    2024 ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடலாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இடம்பெற்று இருக்கிறது. டாப் 10 விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. இதில் முதல் மூன்று இடங்களை ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆகும்.

    முதல் காலாண்டின் டாப் 10 பட்டியலில் இரண்டு இடங்களை சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் பெற்றுள்ளது. இதில் கேலக்ஸி S24 அல்ட்ரா ஐந்தாவது இடமும், கேலக்ஸி S24 பேஸ் வேரியண்ட் ஒன்பதாவது இடமும் பிடித்துள்ளது.

    அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்

    ஐபோன் 15

    ஐபோன் 15 ப்ரோ

    ஐபோன் 14

    கேலக்ஸி S24 அல்ட்ரா

    கேலக்ஸி A15 5ஜி

    கேலக்ஸி A54

    ஐபோன் 15 பிளஸ்

    கேலக்ஸி S24

    கேலக்ஸி A34





    • ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
    • ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 2400 பிராசஸர், 6.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி S24 மாடலின் புதிய 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் வாங்குவோர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 10 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 89 ஆயிரத்து 999 ஆகும்.

    கேலக்ஸி S24 அம்சங்கள்:

    6.2 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே

    1-120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 2600 நிட்ஸ் பிரைட்னஸ்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

    சாம்சங் எக்சைனோஸ் 2400 பிராசஸர்

    எக்ஸ்-க்ளிப்ஸ் 940 GPU

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி./ 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யு.ஐ. 6.1

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், OIS

    12MP 120 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா

    10MP டெலிபோட்டோ லென்ஸ், OIS

    12MP செல்ஃபி கேமரா

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • மூன்று கேமரா சென்சார்கள் கொண்டிருக்கும்.
    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. டீசரின் படி புதிய ஸ்மார்ட்போன் லெதர் பேக் பேனல் கொண்டிருக்கும் என்றும் மூன்று கேமரா சென்சார்கள் கொண்டிருக்கும் என்றும் உறுதியாகி இருக்கிறது.

    இத்துடன் புதிய கேலக்ஸி F55 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி இடம்பெறவில்லை. இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி F55 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது.



    டீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியான தகவல்களில் கேலக்ஸி F55 விலை விவரங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி M55 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    விலையை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி F55 மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ. 26 ஆயிரத்து 999 என்று துவங்கும் என்றும் இதன் டாப் எண்ட் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்படலாம்.

    ×