என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்சங்"

    • சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • இதுதவிர அடுத்த ஆண்டு துவக்கத்தில் சாம்சங் தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இது குறித்து 91மொபைல்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை விரைவில் நடத்தும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதோடு புது ஸ்மார்ட்போனின் விளம்பரத்திற்கு சாம்சங் பயன்படுத்த இருக்கும் விளம்பர படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    முன்னதாக கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன் ப்ளூடூத் SIG, BIS, கீக்பென்ச் என ஏராளமான சான்றிதழ்களை பெற்று இருந்தது. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விரங்கள் கூகுள் பிளே கன்சோல் லிஸ்டிங்கில் இடம்பெற்று இருந்தது. அந்த வகையில், புதிய கேலக்ஸி M04 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றே தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி 03 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    தற்போது சர்வதேச சந்தையில் கிடைக்கும் கேலக்ஸி A04 ஸ்மார்ட்போனின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாக இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய விளம்பர படத்தின் மூலம் இது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ரக நாட்ச், டூயல் கேமரா சென்சார், மிண்ட் கிரீன் நிற ஆப்ஷனில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

    புது ஸ்மார்ட்போனின் மற்றொரு விளம்பர படத்தில் கேலக்ஸி M04 விலை ரூ. 8 ஆயிரத்து 999-க்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி நிறுவனத்தின் C சீரிஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M04 மாடலில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    Photo Courtesy: 91Mobiles

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் இந்தியா வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனினை எண்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன் டிசம்பர் 09 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான லேண்டிங் பக்கம் அமேசான் தளத்தில் இடம்பெற்று இருந்தது.

    மேலும் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்களும் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன் சீ கிரீன் மற்றும் ஷேடோ புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, டூயல் கேமரா சென்சார்கள், வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் பவர் பட்டன் ணற்றும் வால்யூம் பட்டன்கள் வலதுபுறத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 13MP பிரைமரி கேமரா, 2MP கேமரா, 5MP லென்ஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி M04 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளேs

    மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்

    அதிகபட்சம் 8ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்

    13MP பிரைமரி கேமரா

    2MP கேமரா

    5MP செல்ஃபி கேமரா

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேல்கஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 4 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் பிளஸ் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ கோர் 4.1 ஒஎஸ் கொண்டிருக்கும் கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட் பெறும் என சாம்சங் அறிவித்துள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி M04 அம்சங்கள்:

    6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+ LCD இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்

    IMG பவர் விஆர் GE8320 GPU

    4 ஜிபி ரேம்

    64 ஜிபி, 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ கோர் 4.1

    டூயல் சிம் ஸ்லாட்

    13MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    2MP டெப்த் கேமரா

    5MP செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் கேல்கஸி M04 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம், ஆஃப்லைன் விற்பனை மையங்களில் டிசம்பர் 16 ஆம் தேதி துவங்குகிறது.

    • சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்மார்ட் டிவி வாங்குவோருக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • இத்துடன் ஸ்மார்ட் டிவி-க்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் அசத்தலான வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் "The Big Game Fest" பெயரில் சிறப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 2022 உலக கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டத்தின் கீழ் சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம், பெரிய ஸ்கிரீன் டிவிக்களை வாங்குவோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    தி பிக் கேம் ஃபெஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட பரிசுகளை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம், பெரிய ஸ்கிரீன் டிவி மாடல்களான நியோ QLED 8K, நியோ QLED, QLED, தி ஃபிரேம் டிவி, தி ஃபிரீஸ்டைல் ப்ரோஜெக்டர் உள்ளிட்டவைகளை வாங்கும் போது பரிசுகளை பெறலாம். இதுதவிர சாம்சங் நியோ QLED, QLED டிவி வாங்கும் போது பத்து ஆண்டுகளுக்கு நோ-ஸ்கிரீன் பர்ன்-இன் வாரண்டி வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட டிவி மாடல்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி S22 அல்ட்ரா அல்லது ரூ. 49 ஆயிரத்து 900 மதிப்புள்ள சாம்சங் அல்ட்ரா ஸ்லிம் சவுண்ட்பார் HW-S801B பெற முடியும். சாம்சங் ஃபிரீஸ்டைல் ப்ரோஜெக்டர் வாங்குவோருக்கு சாம்சங் சவுண்ட் டவர் T40 இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் 75 இன்ச் UHD டிவி வாங்குவோருக்கு ரூ. 18 ஆயிரத்து 400 மதிப்புள்ள கேலக்ஸி A23 ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது.

    வங்கி சலுகைகள்:

    சாம்சங் நிறுவனம் முன்னணி வங்கிகளான ஐசிஐசிஐ, கோடக் மற்றும் ஆர்பிஎல் உடன் இணைந்து மாதம் ரூ. 1990 எனும் மிக குறைந்த மாத தவணை முறை, அதிகபட்சம் 20 சதவீதம் வரை கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. இவை விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் ஆகும். இவை ஆஃப்லைன் வலைதளங்கள் மற்றும் சாம்சங் வலைதளத்தில் வழங்கப்படுகிறது. 

    • சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களின் விவரங்கள் ஏற்கனவே FCC மற்றும் கீக்பென்ச் தளங்களில் லீக் ஆகி வருகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி S23 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC டேட்டாபேஸ் மற்றும் கீக்பென்ச் போன்ற தளங்களில் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த நிலையில், தற்போது சீனாவின் TENAA டேட்டாபேசில் கேலக்ஸி S23 சீரிஸ் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    லிஸ்டிங்கின் படி SM-S9180 எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஸ்கிரீன், 1440x3088 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 16.7M நிறங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 233 கிராம்கள் ஆகும். அளவீடுகளை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 163.4mm, 78.1mm மற்றும் 8.9mm என உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 8 ஜிபி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1TB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    இத்துடன் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2MP சென்சார், 12MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 200MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஸ்மார்ட்போனில் கிராவிட்டி சென்சார், டிஸ்டன்ஸ் சென்சார், லைட் சென்சார் மற்றும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் NR SA பேண்ட்கள்- பேண்ட் 79, பேண்ட் 78, பேண்ட் 41, பேண்ட் 28, N1, 2110-2155MHz, NR NSA பேண்ட்கள்- பேண்ட் 41, பேண்ட் 78 மற்றும் பேண்ட் 79 வழங்கப்படும் என தெரிகிறது.

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி Z ஃப்ளிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 95 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
    • எனினும், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் கேலக்ஸி Z ஃப்ளிப் மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போன் பிரிவில் மிகவும் வித்தியாசமான மாடலை வாங்குவோர் எவ்வித தயக்கமும் இன்றி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்க துவங்கி விட்டனர். இந்த பிரிவில் சாம்சங் மூன்று தலைமுறை மாடல்களை அறிமுகம் செய்து, விற்பனையிலும் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. எனினும், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை பிரீமியம் ஃபிளாக்‌ஷிப் பிரிவில் பெரும்பாலானோர் வாங்க முடியாத வகையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களில் அவ்வப்போது அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ப்ளிப்கார்ட் தளத்தில் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போனிற்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கேலக்ஸி Z ஃப்ளிப் 3 5ஜி மாடல் ரூ. 95 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், இதனை ரூ. 45 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் வாங்கிட முடியும்.

    ப்ளிப்கார்ட் தற்போது கேலக்ஸி Z ஃப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போனிற்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் அதன் விலை ரூ. 69 ஆயிரத்து 999 என மாறி விடும். இதைத் தொடர்ந்து வங்கி சலுகை மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை சேர்க்கும் போது கேலக்ஸி Z ஃப்ளிப் 3 5ஜி மாடலின் விலை மேலும் குறைகிறது. அதாவது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 21 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம்.

    இதற்கு எக்சேன்ஜ் செய்யும் ஸ்மார்ட்போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். இத்துடன் வங்கி சலுகைகளை பொருத்தவரை கோடக் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி, அதிகபட்சம் ரூ. 750 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இத்துடன் ஐடிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம், அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அந்த வகையில், ப்ளிப்கார்ட் தள்ளுபடி, வங்கி சலுகை மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை முழுமையாக பெறும் பட்சத்தில் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போனினை ரூ. 45 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கிட முடியும். இந்த சலுகைகள் எவ்வளவு காலம் வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும், இவை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • சாம்சங்-இன் இரு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது. இதில் ஸ்மார்ட்போனின் பிராசஸர், ரேம், ஒஎஸ் போன்ற விவரங்கள் அம்பலமாகி இருந்தது. தற்போது இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    அந்த வகையில், புதிய சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். பிஐஎஸ் தளத்தில் சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் SM-M146B/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் கேலக்ஸி F14 5ஜி மாடலும் பிஐஎஸ் தளத்தில் SM-E146B/DS எனும் மாடல் நம்பருடன் பட்டியலிடப்பட்டு இருந்தது. எனினும், இந்த வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. கீக்பென்ச் லிஸ்டிங்கின் படி கேலக்ஸி M14 5ஜி மாடல் எக்சைனோஸ் s5e8535 பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது எக்சைனோஸ் 1330 சிப்செட் ஆக இருக்கும் என தெரிகிறது.

    கீக்பென்ச் லிஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் பெற்று இருக்கும் புள்ளிகளை வைத்து பார்க்கும் போது, இது பட்ஜெட் ரக மாடலாக இருக்கும் என்றே தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. கேலக்ஸி M14 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் என்றும் ஒன் யுஐ 5.0 ஸ்கின் வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி F13 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி F13 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, FHD+ டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, எக்சைனோஸ் 850 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களாக கேலக்ஸி S23 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் சீரிஸ் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதில், கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே மூன்று ஸ்மார்ட்போன் விவரங்களும் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    இவைதவிர ஏராளமான சான்று மற்றும் பென்ச்மார்க்கிங் வலைதளங்கள், டிசைன் ரெண்டர்கள் மற்றும் அம்சங்கள் என கேலக்ஸி S23 சீரிஸ் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது இந்த வரிசையில் புதிய கேலக்ஸி S23 மாடல் இந்திய பிஐஎஸ் சான்றளிக்கும் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதை அடுத்து புதிய கேலக்ஸி S23 சீரிஸ் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. இந்திய வெளியீடு தவிர இந்த ஸ்மார்ட்போன்கள் ஏராளமான வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகமாவதும் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 3900 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    புதிய சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து சில நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். விற்பனை மார்ச் மாத துவக்கத்தில் துவங்கும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: OnLeaks

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
    • புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களின் அம்சங்கள், ரெண்டர்கள் இணையத்தில் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.

    சாம்சங் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின் டம்மிக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இவற்றின் மூலம் புதிய சாம்சங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. டம்மிக்கள் மூலம் ஏற்கனவே இணையத்தில் வெளியான ஸ்மார்ட்போனின் டிசைன் விவரங்கள் உண்மையாக இருக்கும் என்றே தெரிகிறது.

    தற்போது லீக் ஆகி இருக்கும் டம்மிக்களில் மூன்று ஸ்மார்ட்போன்களும் பிளாக் அண்ட் வைட் நிறத்தில் காட்சியளிக்கின்றன. மேலும் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் கேமரா ஐலேண்ட் மாற்றப்பட்டு, ஒவ்வொரு லென்ஸ்-ம் தனித்தனியாக காட்சியளிக்கின்றன. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் வளைந்த ஒரங்கள் இன்றி பாக்ஸ் போன்ற டிசைன் கொண்டிருக்கிறது.

    முந்தைய ரெண்டர்களின் படி புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் கீழ்புறத்தில் சிம் கார்டு டிரே வழங்கப்படும் என தெரிவித்து இருந்தன. எனினும், புதிய டம்மிக்களில் புது ஸ்மார்ட்போன்களின் பக்கவாட்டிலேயே சிம் கார்டு டிரே வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 3900 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    Photo Courtesy: /Leaks

    • சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்போன்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது.
    • சாம்சங் அறிமுகம் செய்திருக்கும் இரண்டு புது A சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A04e மற்றும் கேலக்ஸி A04 ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.5 இன்ச் HD+ LCD இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம், ரேம் பிளஸ் அம்சம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி A04 ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, கேலக்ஸி A04e மாடலில் 13MP டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு ஸ்மார்ட்போன்களிலும் 5MP செல்ஃபி கேமரா, ரியர் டெப்த் லைவ் ஃபோக்கஸ் கேமரா, பல்வேறு கேமரா மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, இன்-பாக்ஸ் டைப் சி ஃபாஸ்ட் சார்ஜர் உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி A04e அம்சங்கள்:

    6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+LCD இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்

    IMG PowerVR GE8320 GPU

    3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

    3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ 4.1

    டூயல் சிம் ஸ்லாட்

    13MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2

    2MP டெப்த் சென்சார், f/2.4

    5MP செல்ஃபி கேமரா, f/2.2

    3.5mm ஆடியோ ஜாக்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி A04 அம்சங்கள்:

    6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+LCD இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்

    IMG PowerVR GE8320 GPU

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ 4.1

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8

    2MP டெப்த் சென்சார், f/2.4

    5MP செல்ஃபி கேமரா, f/2.2

    3.5mm ஆடியோ ஜாக்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி A04e ஸ்மார்ட்போன் லைட் புளூ மற்றும் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 299 என்றும், 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கேலக்ஸி A04 ஸ்மார்ட்போன் கிரீன், பிளாக் மற்றும் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை சாம்சங் வலைதளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ரிடெயில் ஸ்டோர்களில் நாளை (டிசம்பர் 20) முதல் விற்பனைக்கு வருகிறது.

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகிறது.
    • டிசைனை பொருத்தவரை புதிய கேலக்ஸி S23 சீரிஸ் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த S22 சீரிஸ் போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

    சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி ஏராளமான விவரங்கள், ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய கேலக்ஸி S23 சீரிஸ் டிசைன், அம்சங்கள், வெளியீட்டு தேதி என பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி உள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீடு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முந்தைய தகவல்களின் படி புதிய சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. கேலக்ஸி S23 சீரிசில் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய தகவலை டிப்ஸ்டர் அந்தோனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதன்படி சாம்சங் கேலேக்ஸி S23 சீரிஸ் பிப்ரவரி மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். புது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை இறுதி செய்யப்படாத காரணத்தால், ஸ்மார்ட்போன்களின் விலை இறுதி செய்யப்படலாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உண்மையில் கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இது பற்றி சாம்சங் தரப்பில் இதுவரை எந்த விதமான தகவலும் வழங்கப்படவில்லை. முன்னதாக புதிய கேலக்ஸி S23 சீரிஸ் டம்மி யூனிட்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. இதில் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் மாடல்கள், சாம்சங் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த கேல்கஸி S22 மற்றும் கேலக்ஸி S22 பிளஸ் போன்றே காட்சியளிக்கின்றன.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 3900 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    Photo Courtesy: /Leaks

    • சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் அந்நிறுவனத்தின் விற்பனையை 2023 முதல் காலாண்டில் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

    சாம்சங் நிறுவனம் முற்றிலும் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டிற்கான முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. கேலக்ஸி S23 சீரிசில் - கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இது குறித்து டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், சாம்சங் தனது கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வை பிப்ரவரி 1 ஆம் தேதி நடத்தும் என தெரிவித்து இருக்கிறார். எனினும், சாம்சங் நிறுவனம் இது தொடர்பாக எந்த தகவலையும் வழங்கவில்லை. 2023 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பெரும்பாலும் அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் என்றே தெரிகிறது.

    புது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை முன்கூட்டியே அறிமுகம் செய்வதன் மூலம் சாம்சங் போட்டியை சமாளிக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் 2023 முதல் காலாண்டு விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்ய சாம்சங் திட்டமிடுகிறது.

    முன்னதாக கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் பட்டியலிடப்பட்டது. அதன் படி இந்த ஸ்மார்ட்போன் SM-S911B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 578 புள்ளிகளையும், மல்டி கோரில் 2 ஆயிரத்து 118 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

    ×