search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்டிஓ"

    கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் பாபு, லஞ்சம் வாங்கியதாக கைதான நிலையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம், நகை கைப்பற்றப்பட்டுள்ளது. #RTO #DVACRaid
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் பாபு என்பவர் வாகன தரச்சான்றிதல் வழங்க லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, செம்மண்டலத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

    அப்போது, அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன. கையாள் எண்ண முடியாததால் பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டது. ரூ.35 லட்சம் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
    48 மாணவர்கள் பஸ்சில் இருக்க சாலையில் ஆர்டிஓ அதிகாரிகள் நிற்பதை கண்ட டிரைவர், பஸ்ஸை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டமெடுத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள நாதபுரம் என்ற பகுதியில் கடந்த வாரம் 48 பள்ளி மாணவர்கள் சென்ற பஸ்சின் டிரைவர் சாலை ஓரம், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிற்பதை கண்டுள்ளார். உடனே, பஸ்சை நிறுத்தி விட்டு மாணவர்களை அப்படியே தவிக்க விட்டு அங்கிருந்து ஓட்டமெடுத்துள்ளார்.

    இதனை அடுத்து, பேருந்தில் இருந்த மாணவர்களை ஆர்டிஓ அதிகாரிகள் வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்துவிட்டு பஸ்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பள்ளி நிர்வாகிகள் வந்து பேசிப்பார்த்தும், டிரைவர் வந்தால்தான் பஸ்சை திருப்பி ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    17 பேர் செல்லக்கூடிய சிறிய பஸ்சில் 48 மாணவர்கள் இருந்துள்ளனர். இதனால், அதிகாரிகளை கண்டு பயந்த அந்த டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு ஓடியதாக தெரியவந்துள்ளது. 
    தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுலவகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. #RTO #TransportDept #MadrasHC
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தங்களது சொத்து கணக்குகளை போக்குவரத்து துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    ×