என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 175653
நீங்கள் தேடியது "சோபியா"
தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். #MKStalin #DMK #Sophia
சென்னை:
தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பி கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்த மாணவி சோபியாவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
நேற்று இது தொடர்பாக கருத்து பதிவிட்ட திமுக தலைவர், “ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! ‘பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!’ ” என ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், இன்றும் இது தொடர்பாக அவர் இட்டுள்ள பதிவில், “கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில்,தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக, மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற்று,அவர் ஆராய்ச்சி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜனை பார்த்ததும் பாஜக ஒழிக என கோஷமிட்ட சோபியா என்ற பெண் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். #BJP #TamilisaiSoundararajan
சென்னை:
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் இன்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண் பாஜக ஒழிக என கோஷமிட்டுள்ளார். இதனை அடுத்து, தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார்.
விசாரணையில், கோஷமிட்டதாக சொல்லப்படும் அந்த இளம் பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா (23) என்பதும், தற்போது அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.
சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட உள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X