search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்ரிடி"

    • அதிர்ஷ்டத்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வரவில்லை என அக்தர் கூறினார்.
    • இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.

    அப்ரிடி (பாகிஸ்தான் முன்னாள் வீரர்):

    எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அந்த நம்பிக்கை ஏற்படும். இதுவே இந்திய அணியின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இதை அனுபவித்து இருப்போம். டிரெவிஸ் ஹெட் சதம் அடித்தபோது ரசிகர்கள் அமைதியாக இருந்தது ஏன்? இது மிகப்பெரிய சதமாகும். குறைந்தபட்சம் ஒரு சிலராவது எழுந்து நின்று பாராட்டி இருக்கலாம்.

    சோயிப் அக்தர் (பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர்):

    அதிர்ஷ்டத்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அபாரமாக விளையாடிதான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அதிக பவுன்ஸ் மற்றும் வேகம் இருந்திருந்தால் டாஸ் மிக முக்கிய பங்கு வகித்து இருக்காது என்றார்.

    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஆடுகளம் உகந்ததாக அமைந்ததுதான் காரணம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

    • அப்ரிடி 7 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை கைப்பற்றி உள்ளார்.
    • டாப் 10-ல் இந்திய பந்து வீச்சாளர்களில் சிராஜ், குல்தீப் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அப்ரிடி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் 7 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை கைப்பற்றி உள்ளார்.

    டாப் 10-ல் இந்திய பந்து வீச்சாளர்களில் சிராஜ், குல்தீப் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சிராஜ் 3-வது இடத்திலும் குல்தீப் 7-வது இடத்தில் உள்ளனர். பும்ரா 11-வது இடத்தில் தொடர்கிறார்.

    முதல் இடத்தை பிடித்துள்ள அப்ரிடி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பாவுடன் இணைந்துள்ளார். இருவரும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    • ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரோகித் படைத்தார்.
    • ஆசிய கோப்பையில் 23 சிக்சர் அடித்த ஜெயசூர்யாவின் சாதனையை ரோகித் முறியடித்தார்.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன.

    இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடி 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ரோகித் சர்மா 56 ரன்களிலும், சுப்மன் கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.

    மேலும் இந்த ஆட்டத்தில் அவர் 4 சிக்சர்கள் அடித்திருந்தார். அதன் மூலம் 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். ஆசிய கோப்பையில் 23 சிக்சர் அடித்த ஜெயசூர்யாவின் சாதனையை ரோகித் முறியடித்தார்.

    அதிக சிக்சர்கள் அடித்த முதல் 3 வீரர்கள் விவரம் பின்வருமாறு;-

    1. ஷாஹித் அப்ரிடி : 26 (21 இன்னிங்ஸ்) 1. ரோஹித் சர்மா : 26* (24 இன்னிங்ஸ்)

    2. சனாத் ஜெயசூர்யா : 23 (24 இன்னிங்ஸ்)

    3. சுரேஷ் ரெய்னா : 18 (13 இன்னிங்ஸ்)

    அத்துடன் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இலங்கை மண்ணில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற கிறிஸ் கெயில் படைத்திருந்த சாதனையையும் உடைத்து ரோகித் புதிய வரலாறு படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்: 1. ரோகித் சர்மா : 33*

    2. கிறிஸ் கெயில் : 30

    3. ஷாஹித் அப்ரிடி : 29

    4. சுரேஷ் ரெய்னா : 25

    • திருமணம் தொடர்பான வீடியோக்கள், புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சர்பிராஸ் அகமது, நசீம் ஷா, சதாப்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி.

    இவருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சகீத் அப்ரிடியின் மகள் அன்ஷாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    ஷாகீன்ஷா-அன்ஷா திருமணம் கராச்சியில் நேற்று நடந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சர்பிராஸ் அகமது, நசீம் ஷா, சதாப்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், பிரபல ஸ்குவாஸ் வீரர் ஜஹாங்கீர்கான் உள்பட பலர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    திருமணம் தொடர்பான வீடியோக்கள், புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பாகிஸ்தான் வீரர்களான ஹாரிஸ் ரவூப், ஷதாப் கான் ஆகியோர் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் தற்போது ஷாகீன்ஷா அப்ரிடியும் இணைந்து கொண்டனர்.

    ஷாகீன்ஷா அப்ரிடி 25 டெஸ்டில் விளையாடி 99 விக்கெட்டும், 32 ஒருநாள் போட்டியில் 62 விக்கெட்டும், 47 இருபது ஓவர் ஆட்டத்தில் 58 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 3 வடிவிலான போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

    • ஆசிய தொடரில் இந்திய வீரர்களில் அதிகபட்சமாக டெண்டுல்கர் 971 ரன்கள் (23 ஆட்டம்) எடுத்துள்ளார்.
    • இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 24 ஆட்டத்தில் 1220 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி உள்ளார். அவர் 27 ஆட்டத்தில் 26 சிக்சர்கள் அடித்து உள்ளார். அவரது சாதனையை முறியடிக்க இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்னும் 6 சிக்சர்களே தேவை.

    ரோகித் சர்மா இதுவரை 27 போட்டியில் 21 சிக்சர் அடித்துள்ளார். மேலும் ஆசிய கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்னை தொடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறவும் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு உள்ளது.

    அவர் 883 ரன் எடுத்து உள்ளார். விராட் கோலி 766 ரன்கள் (16 ஆட்டம்) எடுத்து உள்ளார். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக டெண்டுல்கர் 971 ரன்கள் (23 ஆட்டம்) எடுத்துள்ளார்.

    இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 24 ஆட்டத்தில் 1220 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
    • இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் எந்த போட்டியிலும் 20 ரன்களை தாண்டவில்லை.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக பேட்டிங்கில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற கோலி எந்த போட்டியிலும் 20 ரன்களை தாண்டவில்லை.

    இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் தடுமாற்றம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அப்ரிடி, ஜிம்பாப்வேயில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி மீண்டும் அணிக்கு வரக்கூடும். மிக நீண்ட நாட்களாக அவர் தனக்கென நிர்ணயித்த தரத்திற்கு ஏற்ப விளையாடவில்லை என்றார்.

    அதே சமயம் எனது ஆலோசனைகளை பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும்? அவரிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என சாமர்த்தியமாக பதில் அளித்தார் அப்ரிடி.

    இந்த ஆண்டின் இறுதியில் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடக்கவிருக்கும் மோதல்கள் குறித்து பேசிய அப்ரிடி, பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் அது சமநிலையான அணி என்றும், ஆசியக் கோப்பையில் மட்டுமல்ல, உலகக் கோப்பையிலும் எங்களது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் அணியில் உள்ள முதல் 12 வீரர்கள் மிகவும் வலிமையானவர்கள். அவர்கள் நல்ல முடிவுகளைக் கொண்டு வருவார்கள் என்றும் அவர் கூறினார்.

    • அப்ரிடிக்கு பதிலாக ஹாரிஸ் ரவுஃப் களமிறங்குகிறார்.
    • இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனாவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்க மாட்டார்.

    பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அப்துல்லா ஷபீக் தேர்வு செய்யப்பட்டார்.

    இலங்கை அணிக்கு எதிராக 341 ரன்கள் சேசிங் செய்ததன் மூலம் பாகிஸ்தான் அணி அதிக ரன்கள் சேசிங் செய்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் இதே அணிக்கு எதிராக 382 ரன்கள் பாகிஸ்தான் அணி சேசிங் செய்துள்ளது.


    இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஹாரிஸ் ரவுஃப் களமிறங்குகிறார். இது அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனாவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்க மாட்டார் என்பதை இலங்கை கிரிக்கெட் போர்ட் தெரிவித்தது.

    ரசிகர்களால் பூம் பூம் அப்ரிடி என அழைக்கப்படும் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி, தனக்கு அந்த செல்ல பெயர் வைத்த இந்தியர் யார் என்பதை ரசிகர்களுக்கு கூறியுள்ளார். #ShahidAfridi
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான ஷாகித் அப்ரிடி, ஒருநாள் போட்டிகளில் 351 சிக்சர்களும், டி20 போட்டிகளில் 73 சிக்சர்களும் அடித்துள்ளார். தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்தார்.

    அப்ரிடியின் மிகவும் பிரபலமான பூம் பூம் என்ற பட்டைப்பெயரை யார் வைத்தது? என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு ரவி சாஸ்திரி என அப்ரிடி பதில் அளித்துள்ளார். எனினும், அவர் எப்போது, எதற்காக அந்த பெயரை வைத்தார் என அப்ரிடி கூறவில்லை.



    ரவி சாஸ்திரி தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×