என் மலர்
நீங்கள் தேடியது "மொபைல் நெட்வொர்க்"
- ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்ட விகிதங்களை உயர்த்தப்பட உள்ளன.
- இது 2019 முதல் நான்காவது பெரிய ரீசார்ஜ் கட்டண உயர்வு ஆகும்.
இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தாண்டு இறுதியில் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்ட விகிதங்களை உயர்த்தப்பட உள்ளன.
இதனால், பயனர்கள் விரைவில் 10- 20% வரை மொபைல் ரீசார்ஜ் கட்டண திருத்தம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைமுறைக்கு வரக்கூடும் என்று தொழில் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இது 2019 முதல் நான்காவது பெரிய ரீசார்ஜ் கட்டண உயர்வு ஆகும்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள் மற்றும் 5G நெட்வொர்க் முதலீடுகள் மொபைல் ரீசார்ஜ் விலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன.
மொபைல் ரீசார்ஜ் விலை உயர்வு பல்வேறு வகை ரீசார்ஜ் திட்டங்களில் எதிரொலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.100– ரூ.200 வரையிலான பட்ஜெட் திட்டங்கள் 10% அதிகரிக்கும். நடுத்தர அளவிலான திட்டங்கள், அதாவது ரூ.300– ரூ.500 வரையில் 15% அதிகரிக்கும்.
பிரீமியம் 5G திட்டங்கள் 20% வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
