என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவருக்கு வலைவீச்சு"

    வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கீழ்பாதி கிராமம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60), விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என சிறுமியை மிரட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த நிலையில் வெளியே சென்றிருந்த சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது சிறுமி அழுது கொண்டிருந்தாள். எதற்காக அழுகிறாய் என்று கேட்டதற்கு நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினாள். இதைகேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மந்தாரகுப்பம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ராமச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×