என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தலாய்லாமா"
- தலாய்லாமாவின் செயலை கண்டித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
- தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளதாக அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
திபெத்திய புத்தமத தலைவரான தலாய்லாமா தன்னிடம் ஆசி பெற வந்த சிறுவன் ஒருவனின் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தலாய்லாமா தனது நாக்கை நீட்டியபடியே, என் நாக்கை சுவைக்கிறாயா? என சிறுவனிடம் கேட்டுள்ளார். இதைப்பார்த்த பலரும் தலாய்லாமாவை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தலாய்லாமா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளதாக அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
'சமீபத்தில் நடந்த நிகழ்வில், ஒரு சிறுவன் தலாய் லாமாவிடம் தன்னை கட்டிப்பிடிக்க முடியுமா? என்று கேட்டது தொடர்பான வீடியோ பரவி வருகிறது. அதில், தனது வார்த்தைகள் காயப்படுத்தியிருந்தால், அதற்காக சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தலாய்லாமா மன்னிப்பு கேட்க விரும்புகின்றார்' என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அடுத்த தலாய்லாமா ஒரு பெண்ணாக இருந்தால் அவர் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என தலாய்லாமா 2019ல் கூறியது சர்ச்சையானது. அதன்பின்னர் தலாய்லாமா மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
- நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன.
- தலாய்லாமாவை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
திபெத்திய புத்தமத தலைவரான தலாய்லாமா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு அடுத்த தலாய்லாமா ஒரு பெண்ணாக இருந்தால் அவர் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என தலாய்லாமா கூறியது சர்ச்சையானது. இதனால் அவர் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் தற்போது தன்னிடம் ஆசி பெற வந்த சிறுவன் ஒருவனின் உதட்டோடு உதடு வைத்து தலாய்லாமா முத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
மேலும் அந்த வீடியோவில் தலாய்லாமா தனது நாக்கை நீட்டியபடியே, என் நாக்கை சுவைக்கிறாயா? என சிறுவனிடம் கேட்டுள்ளார். இதைப்பார்த்த பலரும் தலாய்லாமாவை கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன. அதில் சிலர், இந்த தவறான நடத்தையை நியாயப்படுத்த முடியாது என கூறியுள்ளனர். இன்னும் சிலர் இது அருவருப்பானது, தலாய்லாமாவை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கோவா மாநிலம், பனாஜியில் அமைந்துள்ள கோவா மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற நிக்ழ்சியில் பங்கேற்ற தலாய்லாமா மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், சுதந்திரத்திற்கு பிறகு பிரிவினை ஏற்படாமல் ஒன்றிணைந்த இந்தியாவிற்கு முகமது அலி ஜின்னா பிரதமராக இருந்திருக்கலாம் என கருத்து தெரிவித்தார்.
மேலும், சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவரே சுதந்திரத்திற்கு பிறகு இந்திய பிரதமர் ஆக வேண்டும் என்பதை மகாத்மா காந்தி விரும்பினார். ஆனால், காந்தியின் விருப்பத்தை நேரு ஏற்கவில்லை. நேருவிற்கு இருந்த சிறிது சுயநலமே இதற்கு காரணம் என தான் நினைப்பதாக தாலாய்லாமா கூறியிருந்தார்.
அவரது இந்த கருத்து பரவலாக சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மன்னிப்பு கோரியுள்ளார். ‘எனது கருத்து சர்ச்சையை உருவாக்கிவிட்டது, நான் கூறியதில் தவறு இருக்குமானால் அதற்கு தான் மன்னிப்பு கோருகிறேன்’ என தலாய்லாமா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #DalaiLama
திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா, பாகிஸ்தான் தேச தந்தை என அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா சுதந்திரத்திற்கு பிறகு இந்திய பிரதமர் ஆகியிருக்கலாம் என தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவா மாநிலம், பனாஜியில் அமைந்துள்ள கோவா மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற நிக்ழ்சி ஒன்றில் பங்கேற்று தலாய்லாமா மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவரே சுதந்திறத்திற்கு பிறகு இந்திய பிரதமர் ஆக வேண்டும் என்பதை மகாத்மா காந்தி விரும்பினார். ஆனால், காந்தியின் விருப்பத்தை நேரு விரும்பவில்லை. நேருவிற்கு இருந்த சிறிது சுயநலமே இதற்கு காரணம் என நான் நினைக்கிறேன்.
ஒருவேலை காந்தி கூறியது போல் நடந்திருந்தால், பாகிஸ்தான் நாடு உருவாகாமல் ஒன்றினைந்த இந்தியாவாக தேசம் இருந்திருக்கும். நேருவைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர், மிகவும் அனுபவம் வாய்ந்த நபர், சிறந்த அறிவாளி ஆனால் சில சமயங்களில் தவறு கூட நடந்துவிடுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #DalaiLama
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்