search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புர்கா"

    • முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
    • தடையை மீறுபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் 1,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

    சூரிச்:

    ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் 151-29 என்ற அடிப்படையில் நிறைவேறியது, இது ஏற்கனவே மேலவையால் அங்கீகரிக்கப்பட்டது.

    இந்த சட்டம் அமலுக்கு வந்தால், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது போக்குவரத்து, சாலைகளில் நடந்து செல்லும்போது என, அனைத்து பொது இடங்களிலும் புர்கா அணிய தடை விதிக்கப்படும். எனினும், மத வழிபாட்டுத் தலங்களில், இதற்கு தடை விதிக்கப்படாது என கூறப்படுகிறது. தடையை மீறுபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் 1,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

    • இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புர்கா’.
    • இப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது.

    இயக்குனர் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'புர்கா'. இப்படத்தில் கலையரசன், மிர்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். எஸ்.கே.எல்.எஸ். கேலக்ஸி மால் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு சிவாத்மிகா இசையமைத்திருந்தார்.


    புர்கா

    இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவின் பின்னணியில் உருவான இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது. இப்படம் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், இஸ்லாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் புனித நூலான குரானையும் இழிப்படுத்தும் வகையில், ஓடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள 'புர்கா' திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "நபி பெருமானாரின் நன்மொழிகளால் தொகுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஷரியத் சட்டம் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவதில் பல முற்போக்கான கருத்துக்களை வலியுறுத்தும் நிலையில், இஸ்லாம் மார்க்கமே பெண்களுக்கு எதிரானது போல் 'புர்கா' திரைப்படம் சித்தரிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.


    புர்கா

    இந்திய பெருநாட்டில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து, அவர்களின் கொடுங்கரங்களில் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமய மக்களை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் போலக் காட்டமுனைவது கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.

    நாட்டின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் எவ்வித தீங்கும் ஏற்படாத வண்ணம் படைப்பாளிகள் தங்களின் கடமையை உணர்ந்து, மிகுந்த பொறுப்புணர்வுடன் தங்களது படைப்புகளை வெளிக்கொணர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கைகளை இழிவுப்படுத்தி, அவர்களின் உணர்வுகளைச் சீண்டி, பதற்றமான சூழலை உருவாக்கும் படைப்புகளைப் புறக்கணிக்க வேண்டுமென திரைக்கலை ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.


    சீமான் அறிக்கை

    தற்போது 'ஆகா' ஓடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள 'புர்கா' திரைப்படம் இசுலாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் புனித நூலான குரானையும் இழிப்படுத்துவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து அதனைத் தடைசெய்யக் கோரும் இசுலாமிய மக்களின் கோரிக்கையை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி போராடும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.


    முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிரிட்டன் முன்னாள் மந்திரி போரிஸ் ஜான்சன் மீது அவர் சார்ந்த கன்சர்வேடிவ் கட்சி விசாரணையை தொடங்கியுள்ளது. #BorisJohnson #TheresaMay #ConservativeParty
    லண்டன்:

    பிரிட்டன் வெளியுறவு மந்திரியாக பணியாற்றி சமீபத்தில் ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சன், நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில அளித்த பேட்டியில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசினார். மேலும், வங்கிக்கொள்ளையர்கள் போலவும், புர்கா அடக்குமுறை சார்ந்தது எனவும் அவர் கூறியிருந்தார்.

    அவரது கூற்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் தெரேசா மே இதனை கண்டித்திருந்தார். இந்நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி போரிஸ் ஜான்சன் மீது விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஜான்சன் மீது கடுமையான நடவடிக்கையை தெரேசா மே எடுக்கலாம் என தெரிகிறது.

    பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரேசா மேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×