search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லையா"

    • மதுபானம், விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார்.
    • நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ, 9,000 கோடி கடன் பெற்றிருந்தார்.

    நமது நாட்டின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் விஜய் மல்லையா. மதுபானம், விமான நிருவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார். இவர் நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ 9,000 கோடி கடன் பெற்றிருந்தார். இருப்பினும், அந்த கடனை திரும்ப அடைக்க முடியாமல் விஜய் மல்லையா நாட்டை விட்டே 2016ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிப் போய்விட்டார் விஜய் மல்லையா.

    நாட்டை விட்டுத் தப்பியோடிய விஜய் மல்லையா நிதி மோசடியாளர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு அவர் அப்படியே பிரிட்டன் நாட்டில் பதுங்கினார். அவரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இப்போது வரை அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முடியவில்லை. இதில் சட்டச் சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கும் பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இவ்வாறு பெரிய பின்புலம் கொண்ட விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவிற்கு சில நாட்களுக்கு முன் லண்டனின் கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது. 37 வயதான சித்தார்த் மல்லையா அவரது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மினை திருமணம் செய்துக் கொண்டார். இத்திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    அவர்கள் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அதில் இருவரும் கை கோர்த்தபடி மிகவும் சந்தோஷமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இத்திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவுகளில் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கிங் ஃபிஷர் பீர் பரிமாறப்பட்டத்து குறிப்பிடத்தக்கது. ஒரு தரப்பு மக்கள் சித்தார்த்தா மல்லையாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் கடன் வாங்கிவிட்டு தப்பியோடிய நபருக்கு இவ்வளவு ஆடம்பரமாக திருமணம் நடப்பதாக சாடினர்.

    வங்கி மோசடி வழக்கில் லண்டனில் விசாரணையை எதிர்கொண்டு வரும் விஜய் மல்லையா இன்று கோர்ட்டில் ஆஜரான நிலையில், செப்டம்பர் 12 வரை அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. #VijayMallya
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்திய வங்கிகள் தொடர்ந்த மற்றொரு வழக்கில் பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் கடந்த முறை உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் இன்று வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார். முதன்முறையாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த விசாரணையில் பங்கேற்றனர்.

    விசாரணையின் இறுதியில் செப்டம்பர் 12-ம் தேதி வரை மல்லையாவுக்கு நீதிபதி ஜாமின் வழங்கினார். அதே தேதியில் வழக்கின் விசாரணை நடக்கும் என்றும் அன்றைய தினம் மல்லையா ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையின் வீடியோ தனக்கு வேண்டும் என நீதிபதி இந்திய அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனால், விரைவில் அவர் நாடு கடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னாதாக வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், ‘என் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய்யானவை’ என மல்லையா தெரிவித்தார்.
    ×