என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பான்கார்டு"

    • வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு பான்கார்டு கட்டாயம் ஆகும்.
    • வருமான வரி செலுத்துவதற்கும் பான்கார்டு நிச்சயம் தேவை.

    சென்னை:

    இந்தியாவில் வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு பான்கார்டு கட்டாயம் ஆகும். அதே போல் ரூ.10 லட்சத்திற்கு நகை, வாகனம் வாங்குவதற்கும், வருமான வரி செலுத்துவதற்கும் பான்கார்டு நிச்சயம் தேவை.

    இந்தியாவில் கடந்த மார்ச் 31-ந்தேதி நிலவரப்படி 42 கோடியே 10 லட்சம் ஆண்களும், 31 கோடியே 5 லட்சம் பெண்களும் என மொத்தம் 73 கோடியே 15 லட்சம் பேர் பான்கார்டு வைத்திருக்கிறார்கள். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும்.

    இந்த நிலையில் மத்திய அரசு, ஆதார் போன்று பான்கார்டுகளையும் டிஜிட்டல் முறையில் வழங்க முடிவு செய்தது. அதற்காக ரூ.1,435 கோடி செலவிலான 'பான்கார்டு-2' திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை கடந்த மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த திட்டத்தின்படி ஆன்லைன் மூலம் மட்டுமே பொதுமக்கள் பான்கார்டுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்காக ஒரு தனி 'போர்டல்' உருவாக்கப்பட உள்ளது.

    அதே போல் பொதுமக்கள் செல்போன் எண், இ-மெயில் முகவரி மற்றும் புகைப்படங்களை எளிதாக 'அப்டேட்' செய்து கொள்ளலாம்.

    இப்போது ஆதார் எண் கொடுத்து கைரேகை வைத்தால், அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி கொள்ளலாம். மேலும் டிஜிட்டல் 'லாக்' மூலம் ஆதாரை 'லாக்' செய்யலாம்.

    அதேவசதி பான்கார்டிலும் கொண்டுவரப்படுகிறது. அதற்கு அச்சாரமாக பான்கார்டிலும் 'கியூஆர் கோடு' வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. எனவே 'கியூஆர் கோடு' பான்கார்டு வேண்டுபவர்கள், அதற்காக விண்ணப்பிக்கலாம்.


    அதாவது பான்கார்டுகள் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்.எஸ்.டி.எல்.) மற்றும் யு.டி.ஐ. உள்கட்டமைப்பு தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் லிமிடெட் (யு.டி.ஐ.ஐ.டி.எஸ். எல்) ஆகியவை மூலம் தான் வழங்கப்படுகிறது. இதுதவிர வருமானவரித்துறை மூலம் உடனடி இ-பான்கார்டு பெற்றுக்கொள்ளலாம்.

    எனவே ஏற்கனவே பான்காடு வைத்திருப்பவர்கள், என்.எஸ்.டி.எல். மூலமாக வாங்கி இருந்தால் https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.Html என்ற இணையதளத்திலும், யு.டி.ஐ.ஐ.டி.எஸ்.எல். மூலம் வாங்கி இருந்தால் https://www.pan.utiitsl.com/PAN-ONLINE/CheckPANreprint.Action என்ற இணையதளத்திலும் எளிதாக விண்ணப்பிக்கலாம்.

    ஒருவேளை உங்களுக்கு எது என்று தெரியாவிட்டாலும், நீங்கள் ஏதாவது ஒரு இணையதளத்தில் விண்ணப்பித்தால் அதுவே அது சரியானதா அல்லது நீங்கள் மற்றொன்றில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதனை சொல்லிவிடும்.

    இந்த இணையதளத்தில் நீங்கள் பான்கார்டு எண், ஆதார் எண், பிறந்த மாதம் மற்றும் ஆண்டை குறிப்பிட்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது முகவரி, செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவை தெரியும். அது சரியானதா என்பதனை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    அதன்பின்பு உங்களுடைய மெயில், செல்போன் அல்லது இரண்டுக்கும் ஓ.டி.பி. அனுப்பலாம். நீங்கள் அதில் எதை தேர்வு செய்கிறீர்களோ, அதற்கு ஓ.டி.பி. வரும். அந்த ஓ.டி.பி.யை கொடுத்து, அது ஏற்று கொள்ளப்பட்டால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

    கட்டணத்தை செலுத்தி முடித்து விட்டால் போதும், உங்களது முகவரிக்கே 30 நாட்களுக்குள் பான்கார்டு வீட்டுக்கு வந்துவிடும்.

    ஒருவேளை உங்களது பான்கார்டில் செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி தவறாக இருந்தால் முதலில் நீங்கள் அதனை அந்த இணையதளத்தில் உள்ள வசதிகள் மூலம் திருத்திக்கொள்ள வேண்டும்.

    அதேபோல் முகவரி மாறி இருந்தாலும், இப்போது உள்ள முகவரியை அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த பணியினை ஆதார கே.ஒய்.சி. மூலமாக எளிதில் செய்து கொள்ளலாம்.

    ‘எனது ஆதார் தகவலை வைத்துக் கொண்டு, எனக்கு பாதிப்பை ஏற்படுத்துங்கள்’ என டிராய் தலைவர் ஆர்.எஸ் ஷர்மா சவால் விடுக்க, கிடைத்த பதிலடியால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு அவர் உள்ளாகியுள்ளார். #Aadhaar #TRAI #RSSharma
    புதுடெல்லி:

    ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து நீண்ட நாட்களாக சர்ச்சை நீடித்து வருகிறது. ஆதார் தகவல்கள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாக அரசும் பலமுறை அறிவித்துள்ளது. எனினும், இது தொடர்பான சந்தேகங்கள் அவ்வப்போது வெடிக்கின்றன.

    இந்நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் ஆதார் ஆணையத்தின் முன்னாள் பொதுமேலாளருமான ஆர்.எஸ் ஷர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு, “உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இந்த விவரத்தை வைத்துக் கொண்டு, எனக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்' என பதிவிட்டிருந்தார்.

    ஆதார் திட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வரும் ஷர்மாவின் இந்த திடீர் சவால் ட்விட்டரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சவாலுக்கு பதிலடியாக, பிரான்ஸை சேர்ந்த எல்லியட் ஆல்டர்சன் என்ற பாதுகாப்பு நிபுணர், ஷர்மாவின் பிறந்த தேதி, இடம், தற்போதைய முகவரி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டார்.

    “வெளியிடப்பட்ட தகவல்கள் போதும் என நினைக்கிறேன். அதனால் நிறுத்திக்கொள்கிறேன். ஆதார் எண்ணை பொதுவெளியில் பதிவிட்டது தவறு என்பதை தற்போது புரிந்துகொள்வீர்கள் என்பதை நம்புகிறேன்” என எல்லியட் ஆல்டர்சன் ஷர்மாவுக்கு பதில் கூறியிருந்தார்.



    எல்லியட் ஆல்டர்சன் வெளியிட்ட தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்காமல், “செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக நான் சவால் விடுக்கவில்லை. என்னுடைய ஆதார் எண் மூலம் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் என்ன செய்யமுடியும்? என்பதே சவால்” என மீண்டும் ஷர்மா ட்வீட் செய்திருந்தார்.

    எனினும், சமாளிக்கும் விதமான ஷர்மாவின் பதில் நெட்டிசன்களுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. “உங்களது பிறந்ததேதி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆதார் எண் மூலம் எடுத்துவிடலாம் என்பது பாதிப்பை ஏற்படுத்தாதா?” என பலர் ஷர்மாவிடம் கேட்டுள்ளனர்.

    மேலும், “பல அடி நீளத்தில் சுவர் கட்டி ஆதார் தகவல்களை பாதுகாப்பது இப்படிதானா?” எனவும் பலர் கேட்டுள்ளனர். 

    எல்லியட் ஆல்டர்சன் வெளியிட்ட தகவல்களை ஆதார் இல்லாமலேயே எளிதாக எடுத்துவிடலாம் எனவும் பலர் ஷர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.

    மேற்கண்ட இந்த நிகழ்வால் மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்தான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
    ×