என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டுவிட்டர்"

    • சமூக வலைத்தள செயலிகளில் பெரும் புரட்சியை டுவிட்டர் உண்டாக்கியது.
    • 2023-ல் டுவிட்டர் நிறுவனத்தை பெரும் தொழில் அதிபரான எலான் மஸ்க் கையகப்படுத்தி ‘எக்ஸ்’ என அதற்கு மறுபெயரிட்டார்.

    பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர், 2006-ம் ஆண்டில் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகிய தொழில்நுட்ப வல்லுனர்களால் உருவாக்கப்பட்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. அப்போது அந்த நிறுவனத்தின் இலச்சினையாக (லோகோ) பறவையை தேர்ந்தெடுத்தனர்.

    சமூக வலைத்தள செயலிகளில் பெரும் புரட்சியை டுவிட்டர் உண்டாக்கியது. அதன்பின், 2012-ல் டுவிட்டரில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அதன் இலச்சினை, இளைய தலைமுறையினரை கவரும் வகையில் நவீனமயமாக்கப்பட்டு, ஒற்றை நீல பறவையாக மாற்றப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள தங்களுடைய தலைமையக கட்டிடத்திலும் ராட்சத அளவில் தயாரான 'நீலப்பறவை' இலச்சினையை பொருத்தினர்.

    அதன்பின்னர் அந்த இலச்சினை அந்த நிறுவனத்தில் அடையாளமாக மாறியது. 2023-ல் டுவிட்டர் நிறுவனத்தை பெரும் தொழில் அதிபரான எலான் மஸ்க் கையகப்படுத்தி 'எக்ஸ்' என அதற்கு மறுபெயரிட்டார். அதோடு நீலப்பறவை இலச்சினை பயன்பாடும் நின்றது. மேலும் நிறுவன கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த நீலப்பறவை இலச்சினை அகற்றப்பட்டது.

    இந்தநிலையில் அரிய பொருட்களை ஏலம்விடும் பிரபல நிறுவனம் ஒன்று 'எக்ஸ்' நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த 'நீலப்பறவை' இலச்சினையை கையகப்படுத்தி ஏலம் விட்டது. 12 அடி நீளம், 9 அடி அகலம், 254 கிலோ எடை கொண்ட அந்த இலச்சினை ரூ.30 லட்சத்துக்கு (34 ஆயிரம் அமெரிக்க டாலர்) ஏலம் போனதாக அறிவித்துள்ளது.

    • டுவிட்டர் பக்கத்தில், தான் டுவிட்டரின் தலைமை அதிகாரி என்று பெயர் அருகே குறிப்பிட்டுள்ளார்.
    • டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ஏற்றுக் கொண்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து ரூ.3½ லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் செய்தார்.

    ஆனால் திடீரென்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த விவரங்களை தராததால் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்றார்.

    இதையடுத்து எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு நாளைக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது.

    இந்த நிலையில் எலான் மஸ்க் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர், கைக்கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி (சிங்க்) ஒற்றை கையில் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றார்.

    அதுதொடர்பான வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், தான் டுவிட்டரின் தலைமை அதிகாரி என்று பெயர் அருகே குறிப்பிட்டுள்ளார்.

    இதைத்தவிர, "டுவிட்டர் தலைமையகத்தில் நுழைகிறது - அது மூழ்கட்டும்!" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்த வீடியோவில் எலோன் மஸ்க் சிங்க் சுமந்துக் கொண்டு உள்ளே செல்வது, அதில் (டுவிட்டரில்) அவர் மூழ்கப்போகிறார் என்பதை தெரிவிக்கிறது.

    இதன்மூலம் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ஏற்றுக் கொண்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை நாளைக்குள் முடித்துக் கொள்ளபோவதாக எலான் மஸ்க் தனது பங்குதாரரிடம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும்.
    • தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்.

    இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி இன்றைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் தனது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகின.

    கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் சுமார் ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்தார்.

    பின்னர் சில வாரங்களிலேயே அதில் இருந்து பின் வாங்கினார். டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்றார்.

    இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் வழக்கை விசாரித்த கோர்ட்டு அக்டோபர் 28-க்குள்(இன்று) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது. எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு நேற்று சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார்.

    இந்நிலையில், இன்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் டுவிட்டரின் உரிமையாளரானார் என்று தெரிவித்துள்ளது.

    மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    பராக் மற்றும் நெட் செகல் ஆகியோர் டுவிட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் இனி அங்கே திரும்பமாட்டார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

    விரைவில் இதுகுறித்த முழுவிவரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முக்கிய அதிகாரியாக பதவி வகித்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இந்தியாவை சேர்ந்தவர்.
    • ஒரு ஆண்டுக்குள் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பராக் அகர்வாலுக்கு இழப்பீடு தொகையாக ரூ. 346 கோடி வழங்க வேண்டும்.

    உலகின் பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டரை வாங்க போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்துக்கு எலான் மஸ்க் திடீரென சென்றார். பின்னர் டுவிட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

    இதையடுத்து அவர் டுவிட்டர் நிறுவன ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினார். தனது புதிய நிறுவனத்தில் பல மாற்றங்கள் கொண்டு வர அவர் முடிவு செய்தார்.

    இதன்எதிரொலியாக சில மணி நேரங்களில் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ( சி.இ.ஓ.,) பராக் அகர்வால் மற்றும் நிதி அதிகாரி நெட் ஜெகல், சட்ட நிர்வாகி விஜயா காடே, பொது ஆலோசகர் சின் எட்ஜெட் ஆகிய 4 முக்கிய அதிகாரிகளை அதிரடியாக நீக்கி எலான் மஸ்க் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.

    இதில் முக்கிய அதிகாரியாக பதவி வகித்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இந்தியாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கடந்த ஆண்டு( 2021) நவம்பர் தலைமை நிர்வாக அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் டுவிட்டரின் புதிய அதிபரான எலான் மஸ்க் அவரை நீக்கி உள்ளார். டுவிட்டர் நிறுவன ஒப்பந்தத்தின்படி ஒரு ஆண்டுக்குள் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பராக் அகர்வாலுக்கு இழப்பீடு தொகையாக ரூ. 346 கோடி வழங்க வேண்டும்.

    இந்த தொகையினை டுவிட்டர் நிறுவனம் அவருக்கு வழங்க உள்ளது.

    • டுவிட்டர் நிறுவனம் தற்போது எலான் மஸ்க்கின் வசமாகியுள்ளது.
    • டிரம்ப் மீதான வாழ்நாள் தடையை நீக்குவது குறித்து எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள்ளார்.

    சான்பிரான்சிஸ்கோ

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்க நாடாளுமன்றம் கூடியபோது, முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதையடுத்து டிரம்ப் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள், டிரம்பின் அனைத்து கணக்குகளையும் முடக்கின. அந்த வகையில் டுவிட்டர் நிறுவனம் அவருக்கு நிரந்தர தடை விதித்தது. இதனால் கோபமடைந்த டிரம்ப், 'டுரூத் சோசியல்' என்ற பெயரில் தனது சொந்த சமூக வலைதளத்தை உருவாக்கினர்.

    இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனம் தற்போது எலான் மஸ்க்கின் வசமாகியுள்ளது. இதையடுத்து டிரம்ப் மீதான வாழ்நாள் தடையை நீக்குவது குறித்து எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள்ளார். டிரம்ப் மீண்டும் அனுமதிக்கப்படுவாரா என்பது குறித்து முடிவெடுக்கும் கவுன்சில் ஒன்றை அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் டுவிட்டர் கைமாறியதை டிரம்ப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "டுவிட்டர் இப்போது ஒரு தான் ஒரு புத்திசாலியின் கரங்களில் இருக்கிறது. இனிமேல் நம் தேசத்தை வெறுக்கும் இடதுசாரி மனநோயாளிகள் கையில் இருக்காது" என்று கூறியுள்ளார்.

    • டுவிட்டரில் தற்போது 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
    • புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த டுவிட்டரின் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரி ஷாக் டோர்சி திட்டமிட்டுள்ளார்.

    டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கினார். அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார்.

    இந்தநிலையில் டுவிட்டர் நிர்வாகத்தில் எலான் மஸ்க் அடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார். அவர் ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளார்.

    வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டிய பணியாளர்கள் பட்டியலை அளிக்க மேலதிகாரிகளுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டு உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

    வருகிற 1ம் தேதிக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அளவுக்கு குறைத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டரில் தற்போது 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அந்த எண்ணிக்கை ஆள்குறைப்பு நடவடிக்கை மூலம் 2 ஆயிரமாக குறைக்கப்படும்.

    இதற்கிடையே டுவிட்டருக்கு மாற்றாக புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த டுவிட்டரின் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரி ஷாக் டோர்சி திட்டமிட்டுள்ளார். புளூஸ்கை என்ற பெயரில் ஒரு சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளார்.

    • புளு டிக்கிற்காக டுவிட்டர் நிறுவனம் ஏற்கனவே மாதம் தோறும் ரூ.400 கட்டணம் வசூலித்து வந்தது.
    • அது உண்மையான கணக்குதானா என்பதை டுவிட்டர் நிறுவனம் சரிபார்த்து புளு டிக் வழங்கும்.

    உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமையகத்துக்குள் சென்ற எலான் மஸ்க் ஊழியர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை பணி நீக்கம் செய்தார்.

    மேலும் அவர் ஆள் குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கினார்கள். பணியாளர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்கவும், 3 ஆண்டுகளில் வருவாயை இரட்டைப்பாக்கவும் முயற்சி எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

    டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமான மற்றும் அதிக செயல்பாட்டில் இருந்த கணக்குகளுக்கு புளு டிக் வழங்கி வந்தது. 2017-ம் ஆண்டு இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் புளு டிக் வழங்கப்பட்டு வருகிறது.

    டுவிட்டர் கணக்குகளை சரிபார்ப்பதற்காக ஒரு புதிய செயலியை உருவாக்கி உள்ளது. புளு டிக் வேண்டும் என்று விரும்புபவர்கள் அந்த செயலி மூலம் விண்ணப்பித்து தனது முழு விவரங்களையும் தெரிவித்து சில ஆவணங்களை சமப்பிக்க வேண்டும். அது உண்மையான கணக்குதானா என்பதை டுவிட்டர் நிறுவனம் சரிபார்த்து புளு டிக் வழங்கும்.

    டுவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான புளு டிக்கிற்காக டுவிட்டர் நிறுவனம் ஏற்கனவே மாதம் தோறும் ரூ.400 கட்டணம் வசூலித்து வந்தது.

    இந்த நிலையில் புளு டிக் கணக்குகளுக்கு மாத கட்டணத்தை ரூ.1600ஆக உயர்த்த எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார். விரைவில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ள 9 பேரையும் ஒரே அறிவிப்பில் நீக்கி அவர் அதிரடி காட்டியுள்ளார்.
    • டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை அவர் நீக்கியிருந்தார்.

    உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரையும் அவர் கடந்த வாரம் தன் வசப்படுத்தினார்.

    எலான் மஸ்க் டுவிட்ட உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது டுவிட்டர் இயக்குநர் குழுவை அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அதிரடியாக நீக்கியுள்ளார்.

    டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ள 9 பேரையும் ஒரே அறிவிப்பில் நீக்கி அவர் அதிரடி காட்டியுள்ளார்.

    டுவிட்டர் இயக்குநர் குழுவில் தற்போது தான் மட்டுமே இருப்பதாகவும், டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக தான் இருப்பதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

    முன்னதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை அவர் நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் என்கிற நிறுவனத்தில் பொது பங்குதாரராக உள்ளார்.
    • இந்த நிறுவனம் கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்து இயங்கி வருகிறது.

    நியூயார்க் :

    ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கியுள்ளார்.

    அவர் டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டுவிட்டர் நிறுவனம் தனது கைக்கு வந்த உடனே அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட 4 முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார் எலான் மஸ்க். இவர்களில் பராக் அக்ரவால் இந்தியர் ஆவார்.

    இந்த நிலையில் டுவிட்டரில் எலான் மஸ்குக்கு இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் உதவி புரிந்து வருகிறார். அவர் சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்.

    எலான் மஸ்குக்கு தான் உதவி வருவதை ஸ்ரீராம் கிருஷ்ணன் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "டுவிட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்குக்கு உதவி வருகிறேன். என்னோடு இணைந்து வேறு சிலரும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது மிகவும் முக்கியமான நிறுவனம். உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும் கூட. மஸ்க், அதை சாத்தியம் செய்வார் என்றும் நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், இளங்கலை தொழில்நுட்பம் பயின்று பட்டம் பெற்றார். படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக அமெரிக்கா சென்ற ஸ்ரீராம் கிருஷ்ணன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் பேஸ்புக், ஸ்னாப் சாட், டுவிட்டர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்வேறு விதமான முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

    தற்போது அவர் ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் என்கிற நிறுவனத்தில் பொது பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்து இயங்கி வருகிறது.

    கிரிப்டோகரன்சி குறித்து தான் அறிந்ததை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வரும் ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் சேர்ந்து, 'தி குட் டைம் ஷோ' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் தொடர்பான கண்டுபிடிப்பாளர்களை அவர்கள் நேர்காணல் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே ஸ்ரீராம் கிருஷ்ணன் எலான் மஸ்குக்கு அறிமுகமானதாக கூறப்படுகிறது.

    • டுவிட்டர் கணக்கில் உள்ள பெயருக்கு அருகில் நீலநிற டிக் குறியீடு இருக்கும்.
    • இக்கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்துக்கு பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உரிமையாளராகி உள்ளார். அவர் அந்நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்த அவர், நிர்வாக குழுவையும் கூண்டோடு கலைத்தார்.

    டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் அதிகாரபூர்வ கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குதான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள டுவிட்டர் கணக்கில் உள்ள பெயருக்கு அருகில் நீலநிற டிக் குறியீடு இருக்கும்.

    இதன் மூலம் அந்த பயனாளர்கள் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த புளூ டிக் பயனாளர்களிடம் மாதந்தோறும் 19.99 அமெரிக்க டாலர் (ரூ.1600) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    இந்தநிலையில் டுவிட்டரில் புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

    இக்கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்துக்கு பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டுவிட்டரில் விளம்பரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளின், உயர் அதிகாரிகள் பதவி விலகி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டுவிட்டரை வாங்கிய நாள் முதல் எலான் மஸ்க் அடுத்தடுத்த அதிரடியை செயல்படுத்தி உள்ளார்.
    • பணி நீக்க நடவடிக்கைகளால் டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    சான்பிரான்சிஸ்கோ:

    பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் தன் வசப்படுத்தி உள்ளார். அந்நிறுவனத்தை வாங்கிய உடனே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் ஆகிய நடவடிக்கைகளை எடுத்தார். மேலும் வரும் ஆண்டுகளில் டுவிட்டரில் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே டுவிட்டரில் ஊழியர்களை குறைக்க எலான் மஸ்க் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கவும், பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்குமாறு மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் டுவிட்டரில் 50 சதவீத ஊழியர்களை நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செலவுகளை குறைக்க அவர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

    பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 60 நாட்கள் மதிப்புள்ள பணி நீக்க ஊதியம் வழங்கப்படும். டுவிட்டரில் தற்போது 7,500 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் சுமார் 3,700 ஊழியர்களை நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டுவிட்டரை வாங்கிய நாள் முதல் எலான் மஸ்க் அடுத்தடுத்த அதிரடியை செயல்படுத்தி உள்ளார். பணி நீக்க நடவடிக்கைகளால் டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணியாளர்கள் நீக்கம் தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று முதல் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நியூயார்க்:

    பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3½ லட்சம் கோடிக்கு எலான் மஸ்க் வாங்கினார். அதைத்தொடர்ந்து அந்நிறுவனத்தில் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த வாரம் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தில் மொத்தம் உள்ள 7,500 பணியாளர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

    அதன்படி பணியாளர்கள் நீக்க நடவடிக்கையை எலான் மஸ்க் தொடங்கி உள்ளார். இதுதொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று முதல் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ×