என் மலர்
நீங்கள் தேடியது "கொரியப்போர்"
கொரியப்போரின் போது உயிர்நீத்த அமெரிக்க வீரர்களில் 55 பேர் பயன்படுத்திய உடைமைகளை வடகொரியா அமெரிக்காவுக்கு திரும்ப கொடுத்துள்ளது. #NorthKorea #US
சியோல்:
கடந்த 1950-53 ஆண்டுகளில் நடந்த கொரிய போரின் போது சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். போருக்கு பின்னர் கொரியா இரண்டாக உடைந்தது. தென்கொரியா அமெரிக்காவுக்கு நெருக்கமாகவும், வடகொரியா ரஷியா மற்றும் சீனாவுக்கு நெருக்கமானதாகவும் மாறிப்போனது.
அமெரிக்கா - வடகொரியா இடையே பல ஆண்டுகளாக இருந்த பகை கடந்த ஜூன் மாதம் டிரம்ப் - கிம் சந்திப்பை அடுத்து குறைந்துள்ளது. சிங்கப்பூரில் நடந்த இந்த சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் முக்கியமான ஒன்று, கொரிய போரில் மரணமடைந்த அமெரிக்க வீரர்களில் 55 பேர் பயன்படுத்திய உடைமைகள் வடகொரியா வசமுள்ளது. அதனை மீண்டும் அமெரிக்காவிடம் தர வேண்டும் என்பதாகும். பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்டதன்படி, வடகொரியா 55 வீரர்களின் உடைமைகளை தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தளத்தில் ஒப்படைத்தது.
இந்த பொருட்கள் உரிய மரியாதை அளிக்கப்பட்ட பின்னர், அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு உடைமைகள் வந்ததும் சம்மந்தப்பட்ட வீரர்களின் குடும்பத்தினரிடம் அவை ஒப்படைக்கப்பட உள்ளது.