என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீபா"
- ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கர்நாடக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டனர்.
- சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி இப்போது கர்நாடக மாநில சட்டத்துறைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5.12.2016 அன்று மரணம் அடைந்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு அவரது நகை மற்றும் சொத்துக்களுக்கான வழக்கு சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்த போது அவரது போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்திய போது ஏராளமான பொருட்களை கைப்பற்றியதோடு வங்கிகளில் உள்ள பணம் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன.
அந்த வகையில் பறிமுதல் செய்யப்பட்ட 6 டிரங்பெட்டி நகைகள், 1562 ஏக்கர் நிலம், பல கோடி ரூபாய் வங்கிப் பணம் ஆகியவை கர்நாடக கோர்ட்டு கட்டுப்பாட்டில் இருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே இறந்து போனார். இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு தண்டனை உறுதியானதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு ஜெயிலில் தண்டனை அனுபவித்து விடுதலையானார்கள்.
இந்த நிலையில் கோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள நகை மற்றும் சொத்துக்களை ஏலம் விட சொல்லி பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் வழக்கு போட்டார்.
இதையடுத்து வழக்கறிஞர் கிரண்ஜவாரி என்பவரை கோர்ட்டு நியமித்து ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.
மேலும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கவும் ஏலம் விட்டு வழக்குக்காக கர்நாடக அரசு செலவிட்ட ரூ.5 கோடியை தமிழக அரசு திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதையறிந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கர்நாடக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டனர். அதில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் நாங்கள் தான். எனவே நகை உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில் தான் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி இப்போது கர்நாடக மாநில சட்டத்துறைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் இன்னும் மதிப்பு குறையாமல் அப்படியே இருக்கும் நகைகள், சொத்து, பணம் ஆகியவற்றை உடனடியாக ஏலம் விட வேண்டும். இதன் மூலம் தமிழக அரசுக்கு ஏராளமான பணம் கிடைக்கும் அதன் மூலம் ஏழைகளின் நல்வாழ்விற்கு செலவிட முடியும்.
இந்த வழக்கில் தீபா, தீபக்குக்கு எந்த ரோலும் கிடையாது. அவர்களின் மனு தள்ளுபடியாகி விட்டது. இதை ஐகோர்ட்டில் விளக்கிடும் வகையில் அதற்கு ஏதுவான மனுவை கிரண்ஜவாரி தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மீண்டும் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
- வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இவரது காதலன் சிராஜூதீனிடம் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
'வாய்தா' படத்தில் கதாநாயகியாக நடித்த 29 வயதான நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா, தான் வசித்து வந்த சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் நடிகை பவுலின் ஜெசிகா, சினிமா தயாரிப்பாளரான சிராஜூதீன் என்பவரை காதலித்து வந்ததும், தற்கொலைக்கு முன்பாக கடைசியாக சிராஜூதீனுடன் தான் அவர் பேசியதும் தெரிந்தது. சிராஜூதீனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர், காரைக்குடியில் தான் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்படிப்பில் கலந்து கொண்டு இருந்ததால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று சிராஜூதீன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- நான், நடிகை பவுலின் ஜெசிகாவை காதலிக்கவில்லை. அவர்தான் என்னை காதலித்து வந்தார். அவருக்கு நான் ஒரு நல்ல நண்பராக இருந்து வந்தேன். அவருக்கு தோல் சம்பந்தமான பிரச்சினை இருந்ததால் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பார்த்தேன்.
அது சம்பந்தமாக என்னிடம் அடிக்கடி பேசி வந்தார். நான் வாங்கி கொடுத்த செல்போனை எடுத்து வரும்படி எனது நண்பரிடம் நான் சொல்லவில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடைசியாக என்னிடம்தான் பவுலின் ஜெசிகா பேசினார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார், நடிகை பவுலின் ஜெசிகாவுக்கு உண்மையாகவே தோல் சம்பந்தமான பிரச்சினை இருந்ததா?. இதற்காக அவர் சிகிச்சை பெற்றது உண்மையா? என்பதை கண்டறிய அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நடிகையின் செல்போன் முடிவுகள் வந்த பிறகு பவுலின் ஜெசிகா தற்கொலையில் இறுதி முடிவு எட்டப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இவரது காதலன் சிராஜூதீனிடம் கேட்பதற்காக 55 கேள்விகளை போலீசார் தயார் செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29) நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனா். மேலும் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டனர்.
தீபா (எ) பவுலின் ஜெசிகா
அதில், "நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று தீபா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நடிகை தீபா தற்கொலை விவகாரத்தில், காதலன் சிராஜூதீனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு அழைத்தும் வராததால் சிராஜூதீனுக்கு கோயம்பேடு போலீசார் வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சம்மனை கொடுத்துள்ளனர்.
தீபா (எ) பவுலின் ஜெசிகா
காரைக்குடியில் படப்பிடிப்பில் இருக்கும் சிராஜூதீன், நாளை சென்னை, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் என்று அவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை தீபாவின் வாட்ஸ் ஆப் மற்றும் தொலைபேசி அலைப்புகள் மூலம் எடுக்கப்பட்ட விவரங்களை வைத்து காதலன் சிராஜூதீனிடம் கேட்பதற்காக 55 கேள்விகளை போலீசார் தயார் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தீபாவின் ஐ போனை காணவில்லை என்று நடிகையின் சகோதரர் ராஜூ ஏற்கனவே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீபாவின் சகோதரரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியிருந்தனர்.
சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29) நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனா். மேலும் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டனர்.
அதில், "நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று தீபா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை தீபா தற்கொலை விவகாரத்தில், காதலன் சிராஜூதீனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்தும் வராததால் சிராஜூதீனுக்கு கோயம்பேடு போலீசார் வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சம்மனை கொடுத்துள்ளனர். காரைக்குடியில் படப்பிடிப்பில் இருக்கும் சிராஜூதீன், நாளை சென்னையில் விசாரணைக்கு ஆஜாராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் தீபா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜெசிகாவின் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை கைப்பற்றி இருக்கும் போலீசார், அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டுள்ளனர்.
"நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று ஜெசிகா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜெசிகா, ஒருதலை காதலால் உயிரை விட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து நடிகையின் இந்த ஒருதலை காதலின் பின்னணி பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நடிகை ஜெசிகாவை ஒருதலையாக காதலில் விழ வைத்த வாலிபர் சினிமா துறையைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
நடிகை எழுதிய கடிதத்தில் தான் காதலித்த வாலிபர் யார்? என்பதை குறிப்பிடவில்லை. இதனால் அவர் யார்? என்பதை உடனடியாக அடையாளம் காண முடியாததால், நடிகை ஜெசிகாவின் செல்போன் எண்ணை வைத்து அவரது காதலன் யார்? என்பதை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவரது செல்போனை முழு மையாக ஆய்வு செய்து வருகிறார்கள். தற்கொலை தொடர்பாக செல்போனில் ஏதேனும் பதிவுகளை ஜெசிகா வைத்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நடிகையின் காதலனை அடையாளம் கண்டு அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதால், இந்த விசாரணைக்கு பிறகே நடிகை தற்கொலைக்கு வேறு ஏதும் காரணங்கள் இருக்குமா? என்பது தெரியவரும். இதற்கிடையே நேற்று காலையில் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த நடிகை ஜெசிகா வண்ணாரப் பேட்டையை சேர்ந்த தனது நண்பர் ஒருவருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை, சாகப்போகிறேன் என்று கூறிவிட்டு துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர் அருகில் உள்ள சக நண்பர்களுடன் அங்கு சென்று பார்ப்பதற்குள் ஜெசிகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் இந்த முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெசிகாவின் மறைவிற்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் நடித்தவர் தீபா.
- சென்னை விருகம்பாக்கத்தில் நடிகை தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் துணை நடிகை தீபா என்ற பவுலின் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 29. இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா். காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் தீபா நடித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்